கடந்த 27 ஆம் தேதி, நெய்வேலியிலிருந்து குறிஞ்சிப்பாடிக் கூட்டத்திற்குப்
புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், நெஞ்சு வலியால் துன்பப்பட்டு
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன். பிறகு ஆம்புலன்சில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு
MMM மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டேன். அச்சப்பட ஒன்றுமில்லை என்றும், முழு ஓய்வு
தேவை என்றும் மருத்துவர்கள் கூறி வீட்டிற்கு அனுப்பி விட்டனர். ஒரு வாரம் முழுமையாக
ஓய்வு எடுத்தபின் இப்போது முழு நலத்துடன் உள்ளேன்.
இன்று (06.04.2013) காலை தலைவர் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று
வந்தேன்.
நெய்வேலியில் அருகிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட தோழர்கள் முரளி,
முத்துமோகன் உள்ளிட்ட பேரவை நண்பர்களுக்கும் , மிகுந்த அன்புடன் உதவிகள் செய்த மேனாள்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்ச்செல்வம் அவர்களுக்கும், நெய்வேலி தி.மு.கழக நண்பர்களுக்கும்
என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
நாளெல்லாம் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் தளபதி மு.க. ஸ்டாலின்
தன் பல்வேறு பணிகளுக்கிடையில் வீட்டிற்கு வந்து என்னைச் சந்தித்தது மறக்க முடியாத நினைவாகும். நேரிலும். தொலைபேசி மூலமும் ஆறுதலும்
ஊக்கமும் அளித்த அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்!
எப்போதும் என்னிடம் அன்பு காட்டி என்னைப் பாதுகாக்கும் என் மனைவி, பிள்ளைகள்,
குடும்பத்தினர் அனைவரையும் நெகிழ்வோடு எண்ணிப் பார்க்கின்றேன். ஏறத்தாழ ஒருவாரம், என்னை
முழு ஓய்வில் தங்கள் வீட்டில் வைத்திருந்த செல்வ அண்ணன் - அண்ணியின் அன்பு பெரியது.
இனிமேல் வாரம் இரண்டு கூட்டங்கள் மட்டுமே பேசுங்கள் என்ற மருத்துவர்
அறிவுரைப்படி, கூட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளேன். வரும் 9ஆம் தேதி சென்னை,
சாலிக்ராமம் அருகில் உள்ள தசரதபுரத்தில் முதல் கூட்டம்.
தொடரும் நம் பயணம்!
அய்யா, வலைப் பூவின் வழியாக செய்தி அறிந்து அதிர்ந்தேன் அய்யா. உடல் நிலையை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். ஓய்வின்றி பயணம் செய்வதை சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுங்கள் அய்யா.தமிழகத்திற்குத் தாங்கள் தேவை.
ReplyDeleteமதிப்பிற்குரிய அய்யா,
ReplyDeleteதங்கள் உடல் நிலை என்பது, பேணி காக்கப்பட வேண்டிய ஒன்று. தங்களின் வழிகாட்டுதல் இன்னும் இந்த சமூதாயத்திற்கு இன்றியமையாத ஒன்று. தி மு கழகத்தின் எதிர்காலத்திற்கு அவசியமானதாகும்.
வாழ்த்துக்கள்..
உங்கள் உடல் நலம் குறித்த செய்தி கேட்டு அதிர்ந்தேன் . நன்கு ஓய்வெடுக்கவும்.
ReplyDeleteஎங்கள் அன்பு உங்களுக்கு எப்போதும் உண்டு.
பூரண நலம் பெற வாழ்த்துக்கள் அய்யா !
ReplyDeleteஎன்றும்
ரகு
செய்தியை கேள்விப்பட்ட உடன் உள்ளம் பதைத்தோம். அம்மாவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு தான் மனம் நிம்மதி கொண்டது.தங்களின் சேவை தமிழினத்திற்கு என்றும் தேவை. உடல் நலமும் உள்ள நலமும் பெற்று உங்கள் பயணத்தை தொடருங்கள் ஐயா..
ReplyDeleteபேராசிரியர் சுப.வீ ஐயா, நீங்கள் உடல் நலம் குன்றிய செய்தி இப்பொழுதுதான் அறிந்து வருந்துகிறேன். உங்கள் தொண்டு தமிழினத்துக்கு எப்பொழுதும் தேவை. நீங்கள் மிகுந்த நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநன்றி - சொ.சங்கரபாண்டி
விரைவில் நலம் பெறுக. தமிழ் ஈழம் தொடர்பில் பகைவர்களையும் உற்றவர்களாகக் காட்டுவதால் ஏற்படும் மனக்குழப்பமும் அயர்ச்சியும் நெஞ்சு வலிக்குக் காரணமாக இருக்கலாம். எனவே உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றிச் சொல்க. இடித்துரைக்க வேண்டியவர்களிடம் இடித்துரைக்கத் தயங்க வேண்டா. முழு ஓய்வு பெற்று முழு நலன் அடைக விரைவில். அதன்பின், தமிழ்இனநலம் சார்ந்த பணிகளில் காட்டும் ஈடுபாடு மன அமைதியைபும் நிறை நலனையும் அளிக்கும். நான் விரும்பும் உரையாளர்களில் ஒருவராகிய பேரா.சுப.வீ. முழு நலன் எய்துவாராக!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்!
ReplyDeleteமொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
உங்கள் உடல் நலம் குறித்த செய்தி கேள்விப்பட்டு மிகுந்த கவலைகொண்டேன்.தற்போது உடல், நலம் பெற்ற செய்தி அறிந்ததும் மனதுக்கு ஆறுதல்.
ReplyDeleteஅய்யா நிறைவான ஓய்வு எடுத்துகொள்ளுங்கள். உடல் நலனிலும் அக்கறை கொள்ளுங்கள்..
நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்து இன்னும் சமுக பணியும்,சமுதாய பணியும் செய்திட மனமுருக வேண்டிக்கொள்கிறேன்.
என்ன சொன்னாலும் , எப்படிச்சொன்னாலும் திருந்தாதவர்களாய், உண்மையை
ReplyDeleteஅறிய முடியாதவர்களாய் தமிழர்கள் இருக்கிறார்களே என்னும் உணர்வு ,
அய்யா சுப.வீ. அவர்களின் மனதில் வேதனையை ஊட்டியிருக்கலாம். ராஜபக்சேயின்
நண்பர் சோ-வின் ஆலோசனை கேட்டு நடக்கும் அம்மையார் ஈழத்திற்கு நன்மை
செய்வார்கள் என்று நம்பி, பாழாய்ப்போன பி.ஜே.பி.யைக் கொண்டு வரப் பார்ப்பனர்கள் செய்யும் சதி வலையில் தமிழர்கள் விழுகின்றார்களே ,, தமது பழைய நண்பர்கள் சிலர் அதற்கு துணை போகின்றார்களே, தினமணி, தினமலர் விரிக்கும்
வஞ்சக வலையில் வீழ்கின்றார்களே, எதிரி யார், நண்பர் யார் என்பதனை கடந்த கால நிகழ்வை வைத்து முடிவுசெய்யாமல் இப்படி இருக்கின்றார்களே,ஒரே கல்லில் இரண்டு மாங்காயாய் தனித் தமிழ் ஈழம் இல்லாமல் செய்வதற்கும் , திராவிட இயக்கத்தை அழிப்பதற்கும் பார்ப்பனர்கள் வைக்கும் ஊடகப்புகழ் வடைக்காக , அலையும் காக்காய்களாய் தமிழர்கள் இருக்கிறார்களே என்னும்
உணர்வு அய்யா சுப.வீ. அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதனால் நோதல் ஏற்பட்டிருக்கலாம். திராவிட இயக்க சுய மரியாதைச் சுடரொளி காரைக்குடி இராம. சுப்பையாவின் மகன் அவர். நோதலும் தணிதலும் இயல்பு என வேங்கையாய் , அய்யா சுப.வீ. வருவார்.உண்மைகளை அள்ளி அள்ளித் தருவார்..