தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 20 August 2013

என்று கேட்போம் இனி அவர் பேச்சை....?



எத்தனை நாள்கள்...எத்தனை மேடைகள்...அவரோடு என் நாள்கள் கழிந்திருக்கின்றன.  திடிரென்று பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைந்துவிட்டார் என்று அறிந்து அதிர்ந்து போனேன்.

லண்டனில் இருக்கும் என்னோடு தொடர்பு கொண்டு, நண்பர் பெரியார்தாசன் மருத்துவமனையில் இருக்கும் செய்தியை தோழர் உமா கூறியபோது, சென்னை சென்றவுடன் அவரைச் சென்று காண வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இனி அவரைப் படமாகத்தான் பார்க்க முடியும் என நினைத்தால் நெஞ்சம் கலங்குகிறது.

இறுதியாய் அவரை குவைத் அல்லது வாணியம்பாடிக் கூட்டத்தில் சந்தித்தேன். அப்போது அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார். ஒரு பகுத்தறிவாளர், கடவுள் நம்பிக்கையாளராக மாறிவிட்டாரே என்ற எண்ணம் இருந்தாலும், அது அவர் விருப்பம் என்பதால் அது குறித்துப் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை. வழக்கம்போல் நட்போடும், அன்போடும் பழகினோம்.. 

கூட்டங்களில் வேடிக்கையாகப் பேசினாலும், ஆழ்ந்த தத்துவ அறிவு உடையவர். அவரைப் போல் மக்களைக் கவரும் பேச்சாளரை இனி நாம் எளிதில் பெறமுடியாது.ஒரு கூட்டத்தில் இடைவேளை விட்டுவிட்டு, பிறகு மீண்டும் பேசினார். அப்போதும் கூட்டம் கலையாமல் இருந்தது. 


நல்ல பேச்சாளரை நாடு இழந்தது. நல்ல நண்பரை நான் இழந்து விட்டேன்.  

5 comments:

  1. பேராசிரியர் பெயரியார்தாசன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  2. அய்யா வணக்கம். தங்களின் இரங்கல்தான் தமிழகததில் பொதுவாழ்வில் இருக்கும பெரும்பாலானவர்களின் கருத்து.
    எனக்கு ஏனோ அய்யா தமிழ்க்குடிமகன் அவர்களின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை... கடைசிக்காலத்தில் இவர்கள் ஏன்...இப்படி எனனும் பெருமூச்சையும்...
    ஆழ்ந்த இரங்கலுடன்,
    நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
    http://valarumkavithai.blogspot.in/

    ReplyDelete
  3. திரு. பெரியார்தாசன் அவர்களின் மறைவு நம்மை போன்ற உணர்வாளர்களுக்கு ஒரு இழப்பு தான். தர்கத்தில் அவர் வல்லவரென்று கேள்விப்படிருகிறேன்.அவர் வாரியார் அவர்களை வாதத்தால் வென்ற செய்தியை அறிந்திருக்கிறேன்.அவர் விட்டு சென்ற இடம் வெற்றிடம்தான்.

    ReplyDelete
  4. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரின் கருத்துக்களை எளிய தமிழில் மக்களிடம் கொண்டு செல்பவராக இருந்தார். பார்ப்பனர்கள் பயம் கொள்ளும் அளவிற்கு அவாளின் தத்துவங்களில், புராணங்களில் புலமை பெற்றிருந்தார். பரம்பரை எதிரிகளை எதிர்கொள்ளும் படையின் வலிமைமிக்க பேச்சாளராக இருந்தவர்.திராவிடர் கழகத்தின் சொற்பெருக்காளராக தனது பொது வாழ்வைத் தொடங்கியவர். தனிப்பட்ட முறையில் அவரின் சறுக்கல்கள் அவரின் உரிமை என்றாலும் ..... .பேச்சால் மக்களை எவ்வளவு தூரம் வயப்படுத்த முடியும் என்பதனை நிகழ்த்திக் காட்டியவர். வீர வணக்கம் !.

    ReplyDelete