தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 1 November 2014

அரசியல் பண்பாடு!


       பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இல்லத் திருமணம் அண்மையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது அத் திருமணத்திற்குக் கட்சி வேறுபாடுகள் பார்க்காமல் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது என்று கூறப்பட்டது. பெரிய மகிழ்ச்சிதான். பண்பாட்டு விழாக்களிலேனும் இப்படி நாம் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. தில்லி அரசியலில் ஏற்கனவே இத்தகு நிலை உள்ளது.


       திருமண விழாவில் தலைவர் கலைஞர், தளபதி ஸ்டாலின், வைகோ, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் சென்று கலந்து கொண்டனர்.  நடிகர் சோ வீட்டுத் திருமணத்தில் கூட நேரில் சென்று கலந்து கொண்டவர் தலைவர் கலைஞர். அதனால் இது மிக இயல்பானதாகவே என் போன்றவர்களுக்குத் தோன்றியது.

       திருமணம் முடிந்த மறுநாள், ஒரு தகவல் கிடைத்தது. எல்லோருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்பதுதான் அது. எனக்கு வியப்பாக இருந்தது. எனக்கும் கூட அழைப்பு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவர் மூலம் நேரில் கொண்டு வந்து கொடுக்கப் பட்டது. நேரில் செல்ல முடியாத நிலையில், வாழ்த்துச் செய்தி மட்டும் அனுப்பியிருந்தேன். அப்படியிருக்க, வேறு யாருக்கு அழைப்பு இல்லை என்று கேட்டேன்.       நண்பர் தொல். திருமாவளவனுக்கு அழைப்பு இல்லை என்று கூறினர். சிறுத்தைகளிடம் கேட்டு  உறுதிப் படுத்திக் கொண்டேன்.

      அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு யார் யாரை அழைக்கலாம் என்று முடிவு செய்வது அவர்கள் உரிமை. அதில் நாம் தலையிடுவது நாகரிகமன்று. ஆனாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரைப் புறக்கணிப்பது எந்தவிதமான அரசியல் பண்பாடு என்னும் ஒரு கேள்வி என்னுள் ஓடிக் கொண்டே இருக்கிறது.


     பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் அன்று தொடங்கியது. தலித் அல்லாதார் இயக்கம் இன்றில்லை, என்றும் தொடங்கப்படக் கூடாத ஒன்று.  

10 comments:

 1. இளங்கோ1 November 2014 at 22:12

  'ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம்' என்பது போல இவ்வளவு வியாக்யானம் பண்ணும் நீங்கள் ஏன் உங்கள் பெண்,பிள்ளைகளுக்கு தலித், குறவன், வண்ணான், நாவிதர்..... வீட்டிலா சம்மந்தம் செய்தீர்கள்? {அது என் பிள்ளைகள் விருப்பம்,என் குடும்ப விருப்பம் என்று எல்லோரையும் போல எதாவது மாய்மாலம் செய்து தப்பிச்சுக்கொள்ளுங்கள்!}.ஏன் மேல் சொன்ன சாதிப் பிள்ளைகளை தத்து எடுத்து உங்கள் குடும்பத்தோட உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் பார்ப்போம்?!!{எப்படி இருக்கிறது? அதுபோலத்தான் டாக்டர் அய்யாவுக்கும்,அது அவர்கள் விருப்பம்,அவர் குடும்ப விருப்பம்! புரிகிறதா?}.

  ReplyDelete
  Replies
  1. திரு இளங்கோ அவர்களுக்கு,

   உங்கள் மடலில் எந்த விடையும் இல்லை - கோபத்தைத் தவிர! கட்சிகளைக் கடந்து அனைவரையும் அழைத்தவர்கள், சாதியையும் கடந்திருந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்குமே என்பதுதான் என் ஆதங்கம். அது அவர்கள் விருப்பம் என்பதை நீங்கள் தனியே சொல்ல வேண்டியதில்லை...நானே கூறிவிட்டதால்! தலித், குறவன் முதலியோர் வீட்டில் திருமணம் செய்துள்ளீர்களா, அவர்கள் வீட்டுப் பிள்ளைகளைத் தத்து எடுப்பீர்களா என்றெல்லாம் கேட்டுள்ளீர்கள். அதற்குப் பிறகு, 'இப்போது எப்படி இருக்கிறது?' என்று ஒரு கேள்வி. இந்தக் கேள்வியே அந்தமக்கள் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பைக் காட்டுகின்றது. அவர்கள் நம் சொந்தச் சகோதரர்கள் இல்லையா? மனிதர்களில் உயர்வு தாழ்வு பார்க்கும் குணம் மிக மிக அருவெறுப்பானது. கண்டிப்பாக அது என்னிடம் இல்லை.

   Delete
  2. சுபவீ அய்யாவின் மூன்று பிள்ளைகளுக்கும் காதல் (ஜாதி மறுப்பு ) திருமணம் தான் செய்துள்ளார் என்று அவர் கூறியது எனக்கு ஞாபகம் இருக்கிறது .
   இந்த ஜாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பிள்ளைகளிடம் கூறுவதே ஒருவகை திணிப்புதான் .

   Delete
 2. 'தலித் அல்லாதார் இயக்கம் இன்றில்லை, என்றும் தொடங்கப்படக் கூடாத ஒன்று' - ஆயிரத்தில் ஒரு சொல் அய்யா. அண்ணா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் திருச்சியில் பெரியாரை்க் கண்டு வாழ்த்துப் பெற்று பின்னரே முதல்வர் பொறுப்பேற்றார். இப்போதும் கூட, கேரளாவில் காங்கிரஸ் மார்க்சிஸட் கட்சித்தலைவர்கள் மாறிமாறி முதல்வராக வந்தும் முந்திய முதல்வரின் வீடுதேடிச் சென்று வாழ்த்துப் பெற்றுவருவது நனிநாகரிகம் என்றே நினைக்கிறேன். நீங்கள் சொன்னது போல, தில்லியில் கூட இந்த மரபு பின்பற்றப் படுகிறது... தமிழ்நாட்டிலதான்... (ஒருபக்கமே நாகரிகம் பாராட்ட முடியாதே!) நல்லபதிவு அய்யா.நன்றி

  ReplyDelete
 3. தில்லியின் மரபு தமிழ் நாட்டிலும் தொடர வேண்டும் என்பதே விருப்பம் ஐயா

  ReplyDelete
 4. தலித் மக்கள் மீது முன்னாள் தலித்துகளுக்கு ( பி.சி., எம்.பி.சி ) கோபம் வன்மம் உள்ளது. இது தவறானது. நேற்றைய நமது நிலையை எண்ணிப் பார்க்கவேண்டும்.

  ReplyDelete
 5. Thiru. Ramadass is also having caste feeling? I am not able to digest this.

  ReplyDelete
 6. புத்தகம் எழுதுவதை விட , அன்றாட பிரச்சனைகளை பற்றி எழுதும் கட்டுரைகள் மாணவர்களுக்கு சமூக சூழலை தெரிந்துகொள்ள பயன்படும் . அந்த வரிசையில் இந்த பதிவுக்கு நன்றி ஐயா .

  ReplyDelete
 7. சுபவீ . அய்யா அவர்களின் சாதியும் காதலும் என்கிற காணொளியில் தனது மூன்று மருமகளும் வெவ்வேறு சாதிதான் என்று ஒரு விழாவில் சொன்னதற்கு அதற்கு ஒருவர் இவரை கேலியாக சாதிகெட்ட குடும்பம் என்று சொன்னதை தனக்கே உரிய பாணியில் அதற்கு நாங்கள் சாதி கெட்ட குடும்பம் இல்லை எங்கள் குடும்பம் சாதியை கெடுத்த குடும்பம் என்று பெரியாருக்கே உரிய பகுத்தறிவு வழியில் பதில் அளித்துள்ளதை பார்த்த பிறகு உங்களின் விருப்பப்படி உங்களுடைய பெயரை ராம அன்பு இளங்கோ அய்யர் என்று வைத்து கொள்ளுங்கள் பார்ப்போம்.

  ReplyDelete
 8. ல.எழில்மாறன்10 November 2014 at 08:31

  சுபவீ . அய்யா அவர்களின் சாதியும் காதலும் என்கிற காணொளியில் தனது மூன்று மருமகளும் வெவ்வேறு சாதிதான் என்று ஒரு விழாவில் சொன்னதற்கு அதற்கு ஒருவர் இவரை கேலியாக சாதிகெட்ட குடும்பம் என்று சொன்னதை தனக்கே உரிய பாணியில் அதற்கு நாங்கள் சாதி கெட்ட குடும்பம் இல்லை எங்கள் குடும்பம் சாதியை கெடுத்த குடும்பம் என்று பெரியாருக்கே உரிய பகுத்தறிவு வழியில் பதில் அளித்துள்ளதை பார்த்த பிறகு உங்களின் விருப்பப்படி உங்களுடைய பெயரை ராம அன்பு இளங்கோ அய்யர் என்று வைத்து கொள்ளுங்கள் பார்ப்போம்.

  ReplyDelete