தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 5 May 2015

அன்புமணியின் அவசரம்


பள்ளிக்கூடங்களில் படிக்கும்போது, 'நான் முதலமைச்சரானால்....', நான் இந்தியாவின் பிரதமரானால்....' என்பன போன்ற தலைப்புகளில் கட்டுரை எழுதச் சொல்வார்கள். அது போல, அன்புமணி ராமதாசிற்கும், அவர்கள் கட்சியில் கட்டுரைப் போட்டி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனை அவர் நன்றாக எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நாம் வாழ்த்துகிறோம்!


ஆனால் அவர் மறந்துபோய் அதனை நாளேடுகளுக்கு அனுப்பி விடுகிறார். இப்போது கூட, நான் தமிழக முதல்வரானதும், கவலைக்கிடமாக உள்ள தமிழகத்தைக் குணப்படுத்தி நல்ல நிலைக்குக் கொண்டு வருவேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க.வின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலினோடு தன்னைச் சமப்படுத்தி அறிக்கை விடுவதன் மூலமே, இருவரின் மக்கள் செல்வாக்கும் ஒரு நிலைக்கு வந்துவிட முடியாது என்பதை எல்லோரும் அறிவோம். 

மது விலக்கு குறித்து மிகுதியும் பேசும் திரு அன்புமணி, மத்திய அமைச்சராக இருந்தபோது, அது குறித்துப் பேச நேரம் கிடைக்கவில்லை போலிருக்கிறது. இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதிலேயே அப்போது கூடுதல் நேரத்தைச் செலவழித்து விட்டுள்ளார். இப்போதும் அதற்காகத்தான் அவர் அடிக்கடி தில்லி நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. 

தளபதி ஸ்டாலின் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு மடல் எழுதினர். உடனே அன்புமணி ஸ்டாலினுக்கு மடல் எழுதுகிறார். ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்  என்று  அன்புமணி கருதுகிறார் போலிருக்கிறது.

ஈழத்திற்குத் தி.மு.க. என்ன செய்தது, தமிழுக்குத் தி.மு.க. என்ன செய்தது என்பன போன்ற பல வினாக்களைத் தன் மடலில் அன்புமணி எழுப்பியுள்ளார். இவற்றிற்கெல்லாம் விடை சொல்லும் தனித்தனி  நூல்களே உள்ளன. முதலமைச்சர் கனவிலிருந்து விடுபட்டு இருக்கும் நேரம் எப்போதாவது அவருக்குக் கிடைக்குமானால், அவற்றைப் படித்துப் பார்க்கலாம். 

பாவம், அவசரப்படுகிறார் அன்புமணி. 


10 comments:

  1. அப்படி நீதி மன்றம் போகிறவர்கள் எல்லாம் குற்றவாளிகளா?? திகார் ஜெயில் உள்ளே சென்று வெளி வந்த கழக கண்மணிகள் எல்லாம் ஒன்றுமே செய்யாமல் விடுமுறையில் சென்று வந்த்னாரா??

    ReplyDelete
  2. அன்புமணி..முன்னொரு சந்தர்ப்பவாதத்தில் அமைச்சராய் இருந்தபோது..புதுதில்லியில் தனது பிள்ளைகள் சம்யுக்தாவையும்...சங்கமித்ராவையும்..தமிழை ஒரு பாடமாகக்கூட இல்லாத முழுமையான ஆங்கிலவழியில் படிக்க வைத்தவர்..இவர்கள் கட்சியின் மொழிக்கொள்கை ஒரு மொழிக்கொள்கை உன்னத கொள்கை..ராமதாசுக்காவது திராவிட இயக்கம் தன் மகனுக்கு அன்புமணி என பெயர் வைக்க சொல்லிக்கொடுத்தது..அன்புமணியின் தமிழ்தேசியம் தன் பிள்ளைகளுக்கு சமசுகிருத பெயர் வைக்க கற்றுக்கொடுத்துள்ளது...4 1/2 ஆண்டு அமைச்சர் பதவியில் 4000கோடி சம்பாரிக்க முடிந்தது...அன்று தமிழ் ஓசை ..தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தெல்லாம் தனது பதிப்பை தொடங்கியது..மக்கள் தொலைக்காட்சி ஓகோவென்று இருந்தது..இன்று இருந்த இடம் தெரியாமல் போனதன் மர்மமென்ன ...2009க்குப்பிறகு தத்தி தத்தி வந்த தமிழோசை ஏப்ரல் 2011ல் அதன் ஆசிரியர் பாக்கியநாதன் மறைவோடு ...மாண்டுபோய்விட்டதே..தற்போது இதழ் வருகிறதா தெரியவில்லை..மரு..அன்பு..மணி...செத்த சாத்திண்டு போறேளா...

    ReplyDelete
  3. துரைசிங்கம்7 May 2015 at 15:48


    அய்யா சுப.வீ,
    தகுதி,திறமை,பிறப்பு,குணம்,அழகு,அறிவு(உண்மையாக திறமையாக கஷ்டப்பட்டு படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்,திராவிடக்கட்சித் தலைவர்கள் போல ரு5000க்கும்,ரு10000க்கும் டாக்டர் பட்டம் வாங்கி பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் டாக்டர் பட்டம் அல்ல அது),செயற்கரிய செயல்களைச்(108 ஆம்புலன்ஸ்,புகையிலை ஊழிப்பு நடவடிக்கைகள் etc)செய்தது போன்ற அனைத்திலும் உயர்ந்து நிற்பவர் டாக்டர் சின்ன அய்யா,ஸ்டாலின் அல்ல.ஆகவே டாக்டர் சின்ன அய்யாவுக்குதான் முதல்வராக முழுத் தகுதி உள்ளது!ஸ்டாலினுக்கு அல்ல!!

    ReplyDelete
  4. தேவதாஸ் படையாண்டவர்9 May 2015 at 17:25

    எதுகை மோனைகளைப் பேசி,பொய் வாக்குறுதிகளை அளித்து 1967ல் ஆட்சியைப் பிடித்து,பின்பு கவர்ச்சி அரசியல்,பொறுக்கி அரசியல்,வெறுப்பு அரசியல்,சாராய போதை அரசியல் போன்றவற்றால் தமிழகத்தை சீரழித்த கூட்டத்தின் நீட்சியானவர் தான் அடுத்த முதல்வர் என்று முடிவெடுத்தவிட்ட உங்களைப் போன்றோர்களுக்கு ஒரு நல்ல தகுதி,திறமையுள்ள மாற்றத்தைக் கொண்டுவரும் திறனுள்ள துடிப்பான இளைஞர்(உங்களிடம் உள்ளது இளைஞர் என்றுக் நேர்மையில்லாமல் கூறிக்கொள்ளும் கிட்டத்தட்ட 65 வயதுள்ள SENIOR CITIZEN!),சாதனைகள் பல செய்தவர் அவருக்கு ஒரு முறை வாய்ப்பளி்போமே, முதல்வராகட்டுமே உங்களுக்கு ஏன் குடச்சல்& வயிற்றெரிச்சல்?.மேலும் <50000 மக்கள் தொகையைக் கொண்ட கருணாநிதியின் ஜாதியை,குடும்பத்தைச் சார்ந்தவர்களே MLA,MP,மேயர்,மத்திய மாநில அமைச்சர்கள்,முதல்வர்,கட்சித் தலைவர்&பொருளாளர் போன்ற ஆட்சியின்,கட்சியின் உயர் பதவிகளை காலம்காலமாக அனுபவிப்பது சமூகநீதி கோட்பாட்டுக்கு விரோதமானதாகும்!.

    ReplyDelete
  5. தேவதாஸ் படையாண்டவர்9 May 2015 at 17:34

    மற்றும் 'இருவரின் மக்கள் செல்வாக்கும் ஒரு நிலைக்கு வந்துவிட முடியாது என்பதை எல்லோரும் அறிவோம்'என்பது ஆணவ வாதமாகும்.அப்படிப் பார்த்தால் 2014 நிலவரப்படி ஜெயலலிதாவிற்கு இருந்த செல்வாக்கில் பாதிதான் இருந்தது கருணாநிக்கு!. ஆகையால் ஜெயலலிதாதான் கருணாநியைவிட உயர்ந்தவர் என்று ஏற்றுக் கொள்ளப் போகிறிர்களா?

    ReplyDelete
  6. இங்கே அன்புமனிக்கு எதிராக கருத்தை பதிவிட்ட ஒருவர் anonymous என்ற பெயரில் பதிவி இட்டுள்ளார். பா,ம,க வினர் இதை ஏன் என்று ஆராய வேண்டும். பெயர் வெளியிட்டால் அவ்ர்களுக்கு ஆபத்து இருப்பதாக அவ்ர் உணர்கிறார். முதலில் மக்கள் சார் அரசியலை முன்னெடுங்கள்.அப்புறம் முதல்வர் கனவு காணுங்கள். (இப்பொழுது நீங்கள் செய்வது உங்கள் இன மக்கள் சார் அர்சியல்)

    ReplyDelete
  7. ஆலமரத்தடியில் அக்கடாவென்று படுத்துக்கொண்டு ஆலமரத்து சின்ன சின்ன காய்களை அண்ணாந்து கண்டு கண்சிமிட்டி சிரித்தானாம் சித்தம் தெளியாத அர்த்தம் புரியாத அன்பிற்கு அடைக்கும் தாழ் போடாமல் விட்டதால் யாராவது இருக்கிறீர்களா என்று மணி ஓசையுடன் சந்துக்குள் வந்து சிந்து பாடி சிண்டு முண்டு சண்டையில் நானும் உண்டு என்று வெகுண்டுவந்த மாமணி-தர் அவர் எங்களின் திராவிட தேசத்துக்குள் பிறந்துதித்த தூரத்து தேசத்து ராசா ! அவர் அறிக்கைவிட்டு மணியாட்டும் அன்புமணி ராசா !

    ஆளவே ஆட்கள் ஆயிரம் உண்டு இங்கே அதில் நானும்தான் உண்டு என்று வாய்ப்புக்கு வழிதேடி வாயாடும் வடிவேலுவைப்போல (வைகைபுயல் அல்ல, என் வாய் வழி வந்த வேலு அவன் அதனால் பொறுத்திடுக) என்னுடன் படியாத எதனுடனும் பொருந்தாத மாமணியாய் மாடத்துக்கு வந்துள்ளார் 'கவனம் தேவை' மக்களின் முதல்வர் என்று ஒருவர் உள்ளிருக்க இவர் ஒருவர் மக்களின் அன்புக்கு எங்கும் ராசா எங்களின் அன்புமணி ராசா !

    லெனினாவது ஸ்டாலினாவது யாராக இருந்தாலும் கேட்ப்பாரில்லை. யாரங்கே என்னை தடுப்பார் யாரிங்கே ? எப்போபார்த்தாலும் பட்டறையில் களப்பணி கண்ட கருவிகளை போட்டு வாட்டும் நலங்கிள்ளி தளபதிக்கு தம்பியாம் கருவிகளை அழகு பொருளாக ஆக்கிவைத்த எங்கள் நெடுங்கிள்ளி அவர் நாடாள எண்ணும் எங்கள் அன்புமணி ராசா !

    யாருக்கோ அவ்வையின் சமரசம் தேவை!

    இன்னும் சொல்ல ஆசை அப்படி ஒரு ஆசை உன் தனி மனித ஓசை கேட்டு நான் முறுக்கி விட்டேன் மீசை !

    "அட என்னப்பா இங்கே ஒரே கூட்டம்? யாருப்பா அது எம்பாட்டுக்கு எச பாட்டு பாடுறது?" - அண்ணன் சுபவீ.

    அட நான்தாங்க பிச்சாண்டி ராசா !

    அட நீயா தம்பி சரி சரி பாடு பாடு!

    இன்னுமா? சரி சகபாடி பேச்ச கேட்டு மறுபடியும் பாடுறேன், சரிங்களா.

    ReplyDelete
  8. இரத்தினவேல்12 May 2015 at 15:16

    பேசாமல் தமிழ்நாட்டிலுள்ள 30 மாவட்டங்களை 30 மாநிலங்களாகப் பிரித்து அதில் ஒரு மாநிலத்திற்கு அன்புமணியை முதல்வர் ஆக்கிவிடலாம். குடைச்சல் தாங்க முடியலப்பா.

    ReplyDelete
  9. சரவணன்15 May 2015 at 00:05

    அட்டக்கத்திகளான எதுஎதுகளோ ஆண்ட,ஆளும், ஆளத்துடிக்கும் தமிழ்நாட்டின் அரசை,அரசியலை ஒரு சத்திரியன் ஆளட்டுமே!மக்களுக்கு நல்வாழ்வு பிறக்குமே,உங்களுக்கு ஏன் எரிச்சல்?.

    ReplyDelete