தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 21 June 2015

ஓர் இடைவெளிக்குப் பின் மீண்டும்.....

அன்புநிறைந்த வலைப்பூ நண்பர்களுக்கு,

வணக்கம். பல்வேறு பணிகள், தொடர் பொதுக்கூட்டங்கள் ஆகியனவற்றின் காரணமாக, ஒரு மாத காலத்திற்கும் மேலாக, வலைப்பூவில் புதிய செய்திகள் எதனையும் பதிவிட இயலாமல் போயிற்று. நண்பர்கள் மன்னிக்க வேண்டும். இனி இப்படி ஓர் இடைவெளி ஏற்படாது. அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து வலைப்பூ  மூலம் நாம் இனி மீண்டும் உரையாடலாம். தொடக்கமாக, நூடுல்ஸ் - லலித் மோடி -யோகா" என்னும் தலைப்பில் இன்றே என் கட்டுரை ஒன்று வெளிவரும். தொடர்ந்தும் என் பார்வைகள் பதிவாகும்.

விரைவ்ல் ஒரு புதிய தொடர் ஒன்றினையும் நம் வலைப்பூவில் எழுத் எண்ணியுள்ளேன். சில நாள்களில் அதன் தலைப்பை வெளியிடுவேன்.

அன்புடன் 

சுப. வீரபாண்டியன்

8 comments:

  1. வாங்க வாங்க என்று வரவேற்கிறேன்

    ReplyDelete
  2. வாருங்கள் ஐயா
    தங்களின் எழுத்தை எண்ணத்தை
    வாசிக்கக் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய ஐயா,

    தங்களின் பதிவுகளை தொடர்ந்து விரும்பி படித்தும், பகிர்ந்தும் வரும் என்போன்றோர்களுக்கு இந்த பதிவு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதேப்போல் தங்களின் எதிரும் புதிரும் தொடர் சொற்பொழிவுகளையும் இடையறாது தங்களின் பணிச்சுமைகளுக்கு நடுவே சிறிது நேரம் ஒதுக்கி தொடர முடியுமானால் என் போன்ற இளைஞர்களுக்கு அரசியல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும் பலவற்றை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். இதை என்போன்ற இளைஞர்களின் அன்பு வேண்டுகோளாக கொண்டு தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில்,

    அபிலாஷ் .கோ

    ReplyDelete
  4. யோகா பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆர்வமாக இருக்கிறோம். தி மு க தலைவர்கள் கூட சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறார்கள் . இதற்க்கு பின் உள்ள அரசியல் என்ன என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்..

    ReplyDelete
  5. கணேஷ்வேல்22 June 2015 at 21:17

    ஆவலோடு காத்திருக்கிறோம் அய்யா தங்களது புதிய தொடருக்காக !!!

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி அய்யா. எத்தனை முறை நான் உங்கள் webpage இல் வந்து வந்து பார்த்தேன்.

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி அய்யா. எத்தனை முறை நான் உங்கள் webpage இல் வந்து வந்து பார்த்தேன்

    ReplyDelete