தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 17 August 2015

அறிவிப்பு

ஒரு புதிய பகுதி......விரைவில் 

 வினா-விடை வடிவில் நம் வலைப்பூவில் ஒரு புதிய பகுதி இவ்வாரம் தொடங்குகின்றது. நமக்குள்ளான ஒரு கலந்துரையாடலாக, அறிவுப் பகிர்வாக அது அமையும். சமூகம், அரசியல், இலக்கியம் போன்ற பல்வேறு தளங்களில் உங்கள் வினாக்கள் அமையலாம். அவை தரமானதாகவும், தேவையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை நான் கூற வேண்டியதில்லை. எதிர்க்கருத்து உள்ளவர்களையும் மதிக்கின்ற வகையில், கண்ணியமாக வினாக்கள் தொடுக்கப்பட வேண்டும் என்பது முதன்மையானது. 


வினாக்களை உடன் அனுப்பி வையுங்கள். இவ்வார இறுதிக்குள் இப் புதிய பகுதி தொடங்கும்.

7 comments:

  1. புதிய பகுதியினைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,

    தங்களின் புதிய தொடருக்காய் ஆவலுடன் காத்திருக்கும் தங்களின் தொடர் வாசகர்களில் நானும் ஒருவன். கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் நாள் நீங்கள் பதிந்த " 'எல்லோரையும் சந்தேகி' -தருண் விஜய் உள்பட!"(http://subavee-blog.blogspot.com/2014/12/blog-post.html) என்ற பதிவில் நான் ஒரு விளக்கம் கேட்டிருந்தேன். என்ன காரணத்தினாலோ அதை நீங்கள் கவணியாமல் போய் இருந்தீர்கள் போலும். என்னுடைய முதல் வினாவாக அந்த பதிவில் நான் எழுப்பிய வினாவையே வைக்கிறேன். பதில் கிடைத்தால் மகிழ்வடைவேன்.

    "Abilash4 December 2014 at 15:49

    வணக்கம் ஐயா,
    உங்கள் கருத்துக்களில் பெரும்பாலும் ஏற்புடைய எனக்கு இந்த மொழி எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் மட்டும் மாற்று கருத்து உண்டு. ஆதிக்கம் செலுத்திய பார்ப்பணர்களை வெறுத்ததில் நியாயம் இருக்கலாம். அவர்கள் உபயோகப்படுத்தியதாலேயே ஒரு மொழியை வெறுக்கும் போக்கை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை. இதுநாள் வரை ஜெர்மன் மொழி பயின்ற பிள்ளைகள் இனி சமஸ்கிருதம் படிப்பதால் என்ன இழப்பு நேரிட வாய்ப்புள்ளது என்றும் விளங்கவில்லை. நடப்பு ஆண்டில் இந்த மொழி திணிப்பு நிகழாமல் அடுத்த ஆண்டு முதல் தொடங்கி இருந்தாலும் அதை திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் ஏற்று கொள்ள போவதில்லை. பெரும்பான்மையான இந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருப்பதால் வேற்று இந்திய மொழிகளை கற்பதற்கு இது ஏதுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. சமஸ்கிருதம் குறைவான மக்கள் தொகையினரால் பின்பற்ற படுவதால் எதிர்ப்பதாக கூறும் நீங்கள் பெரும்பான்மை மக்கள் பேசும் ஹிந்தியையும் எதிர்ப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் இலாபத்தை தாண்டிய உண்மையை விளக்கினால் என்போன்றோர் பயன்பெற எதுவாக இருக்கும்."

    நன்றி,
    அபிலாஷ்.

    ReplyDelete
  3. ஐயா வணக்கம் உங்களின் இந்த முயற்சி உண்மையில் பாராட்டுதலுக்கு உரியது குமுக மாற்றம் பற்றி பேசி பலவேறு காலகட்டங்களில் இன்றைய முதலாளித்துவ அரசியலில் பங்கேற்பது பெருங்குற்றமா? அரசியல் மாற்றம் பற்றி பேசிய காலகட்டங்களில் துலாக் கோல்போல் நடந்து பின்னர் விரும்பிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதும் பங்க்கேர்ப்பதும் பெருங்குற்றமா ?அரசியலில் புக என்னும்போது குறிப்பிட்ட அரசியல் அமைப்பில்தான் பங்கேற்க வேண்டுமா ? விரிவான விளக்கம் தேவை ...........

    இன்றைய சாக்கடை சாதிய நிலக்கிழரிய மிச்ச சொச்ச சூழலில் விமர்சனக்களை ஏற்ப்பதும் புறந்தள்ளுவதும் உண்மையில் மிகசிறந்த உளநிலை ...பிழையான கருத்துகளின் கண்ணியக் குறைவாக பார்க்காமல் பாவம் அவர்களின் சமூக அரசியல் பின்னியை கருத்தில் கொண்டு அவற்றிற்கு முக்கியத்துவம் தராமல் பாவம் அவர்கள் அறியாமையில் உள்ளார்கள் என்பாதாக கொள்ளலாமா?

    ReplyDelete
  4. Sir please upload the video about "பத்திரிசு லுமும்பா" which you spoke on உலக விடுதலைப் போராளிகள் in பெரியார் திடல். Iam eagerly waiting about that video.

    ReplyDelete
  5. இந்துத்துவ அமைப்புகள் எல்லாம் BJP யின் பின் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துணையாக இருந்தது இருக்கிறது எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் ஆனால் தமிழ் அமைப்புகள் மட்டும் பெரும்பாலும் தனித்தனியே செயல்பட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திறனுடைய திமுக வை எதிர்த்து கொண்டு இருக்கின்றன இதனால் பயன் பெற போவது இந்துத்துவ சக்திகள் என்பது வெளிப்படையாக தெரிந்தும் இவர்கள் இந்த முறையை பின்பற்றுவது எதனால் அய்யா ?
    தனிப்பட்ட சுயலாபமா? அல்லது நான் தான் எல்லாம் என்ற தன்முனைப்பு காரணமா?
    Typed with Panini Keypadஇ

    ReplyDelete
  6. ஐயா, தந்தை பெரியார் பிறப்பிற்குப் பின், திராவிடம் மிக வெளிப்படையாக பிராமணீயம் உள்ளடங்கிய ஆரியத்தை கடுமையாக வெகு சொற்களால் சாடியுள்ளது மற்றும் சாடிக்கொண்டும் வருகிறது. அதற்கு மாறாக, ஆரியம் ஒருமுறை கூட தன்நிலையை நியாயப்படுத்தி திராவிடத்தை சுடு சொற்களால் சாடியதாக ஒரு சான்றும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வகையான ஆரியத்தின் போக்கு, திராவிடத்திற்கு பலமா, பலவீனமா? நன்றி. க.சீனிவாசன்.

    ReplyDelete
  7. ஐயா, திருக்குறளில்- இறைவன், தெய்வம் – வார்த்தைகள் உள்ளன. ஆனால், கடவுள் என்ற வார்த்தை இல்லை. அன்றைய காலக்கட்டத்தில் கடவுள் – வார்த்தை பயன்படுத்தாமையின் காரணம் என்ன? நன்றி. க.சீனிவாசன்

    ReplyDelete