தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 28 October 2015

பகிர்வு - 21


மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த எல்லோரும் பார்ப்பனர் என்ற தமிழ்ச்சொல்லை பயன்படுத்துவதை தவிர்ப்பதேன? சிறந்த சிந்தனைவாதியான டாக்டர் அருணன் போன்றவர்கள் கூட பிராமணர்கள் என்றே சொல்லி வருகிறார்கள் ஏனிந்த தயக்கம் அப்படியெனில் அவர்கள் சூத்திர்ரகள் என்று ஒப்புக்கொளவது என்றுதானே அர்த்தம்?

-    செல்வம் என்கிற சிவா, சவுதி அரேபியா

விடை: அவர்களுடைய மனத்தை அந்தச் சொல்  காயப்படுத்தும் என்று அவர்கள் கருதக்கூடும்.  ஆனால் அந்தச் சொல் எவரையும் காயப்படுத்தக் கூடியதன்று என்னும் செய்தி பலமுறை சொல்லப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை இங்கு நாம் அதனை நினைவு படுத்திக் கொள்ளலாம்.  அவர்கள் குறி பார்ப்பவர்களாக இருந்துள்ளமையால், பார்ப்பனர் என்னும் சொல்லால் அவர்களைக் குறித்துள்ளனர். அவ்வளவே!  பொதுவுடமைத் தோழர்கள் பிராமணன் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதுதான்  முரண்பாடானது! அந்தச் சொல், பகுத்தறிவாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத 'பிரம்மன்' என்னும் கருத்துருவோடு தொடர்புடையது. 


8 comments:

  1. அய்யா நன்றி நல்ல அருமையான நயமிக்க விளக்கம்

    ReplyDelete
  2. அருணன் அவர்கள் பிராமணீயம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார். காலம் தோறும் பிராமணீயம் என்ற நூலையும் எழுதியுள்ளார்

    ReplyDelete
  3. பிராமணர் என்று அறிஞர் அண்ணாவும் கூறினார், அதற்கடுத்து வந்த தலைவர்களான கலைஞர் பேராசிரியர் அவர்களும் கூறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அப்படிக் கூறிக்கொள்வதாலேயே சூத்திரர் இருக்கிறார் என்று அர்த்தமாகிவிடுமா?

    என்பது தெரியவில்லை. வாத்தியார் ஒரு காலத்தில் படிக்காத போது முட்டாள் என்று கூறினார் என்பதற்காக படித்துவிட்டப்பிறகும் அந்த முட்டாள் என்கின்ற சொல் நிலைத்திருக்கும் என்பது எப்படி? சரியான வாதமாகும்?

    அப்படி என்றால் அவர்கள் வாத்தியார்களாக இருந்தார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? என்றால் ஆமாம். அவர்களும் இருந்தார்கள் அவர்களுக்கு கீழ் அடுத்தப் படிநிலையில் இருந்தவர்களும் இருந்தார்கள். அதை அரசர் முதல் ஆண்டி வரை ஒத்துக்கொண்டு தான் வாழ்ந்தார்கள். அதை சமூக அமைப்பாகவும் கருதாமல் இல்லை.

    நிலை அப்படி இருந்தது அன்று என்றால் இதெல்லாம் இன்றும் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும். அந்த விஷயங்களை ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்கான மனக்குறை தாழ்வு மனப்பான்மையைத்தானே காட்டுகிறது. இல்லை அதை கையில் தூக்கி கொண்டே திரிந்தால் தான் இதற்கான அரசியல் இருக்கும் என்கிற ஆதங்கம் மட்டுமேத் தெரிகிறது.

    ஜாதி என்பது இருக்கிறது. அதற்கு சான்றிதழும் இருக்கிறது. அதில் பிராமணர் என்கிற ஜாதியும் இருக்கிறது.

    இன்னும் சொல்லப் போனால் பிராமணர் என்றே இல்லை. தனித்தனி இந்து விஸ்வகர்மா, இந்து ஐயர், இந்து ஐயங்கார் இப்படித்தானே இருக்கிறது.

    நீங்கள் அத்தனையையும் சுருக்கி பிராமணர் என்று அடையாளப்படுத்துகிறீர்கள் என்ற கேள்வியும் இன்றைய படித்துவிட்ட காலத்தில் எழுவது நியாயம் தானே?

    ஜாதியை ஏற்றுக் கொண்டால் சூத்திரன் என்கிற பட்டத்தையும் ஏற்றுக்கொண்டதாகத்தானே ஆகும் எனும்போது ஜாதி சான்றிதழ் எதற்கு?

    தாழ்ந்ந்த ஒடுக்கப்பட்ட ஜாதியினர் முன்னேறுவதற்கு என்று பதில் வரும். சரி.

    தாழ்ந்த ஒடுக்கப்பட்ட ஜாதியினர் முன்னேறிவிட்டப்பிறகு ஜாதி எதற்கு? என்கிற கேள்விக்கு பதிலே இல்லையே. ஏன்?

    ஆக எந்த ஒரு ஜாதி முன்னேறினாலும் அந்த ஜாதி ஆதிக்கஜாதியாக நிலை கொண்டுவிடுகிறது என்பது நிதர்சனம் தானே.

    அப்ப இப்போது பிராமணர் என்கிற சொல் இருந்தால் தான் என்ன? அது தான் கீழிறங்கிய ஜாதியாக மாறிவிடுகிறதே. அதில் 100 ஜாதிகள் இருக்கின்றன. அதை கவனத்தில் கொண்டே எழுதுகிறேன்.

    பார்ப்பனர் என்கிற தொழிற் ஜாதிப் பெயர் இருப்பதினாலும் ஒன்றுமில்லை. அப்படி கூப்பிடுவது ஒரு மாதிரியாக இருக்கிறது என்பதற்காக பிராமணர் என்று அவர்கள் கூறுவதும் தவறு இல்லை என்று தான் தோன்றுகிறது.

    ஏன்? என்றால் அனைத்து ஜாதியினரும் சமநிலை பெறவேண்டும் என்கிற கொள்கை இப்போது நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது.

    மேலேப் போன ஜாதிகள் அனைத்துமே தன்னை உயர்ஜாதியாகத்தான் நினைத்து கீழே இருக்கும் தன் ஜாதிகள் உட்பட அனைத்தையும் உயரவிடமால் தடுக்கிறது.

    குறையை பார்ப்பனன் மேல் போட்டுவிட்டு படித்துவிட்ட காலத்திலும் தங்களை ஆரியப்பார்வைக்குள் ஓடுக்கிக் கொண்டுவிட்ட அரசியலை எதிர்க்க வேண்டிய காலம் என்பதை தான் இந்த பார்வைகள் தருவதாக காண்கிறேன்.

    ஒரு தொழிலாளியை நசுக்குபவன் பிராமணனாக இருந்தால் என்ன? சூத்திரனாக இருந்தால் என்ன? பாதிப்பு தொழிலாளிக்குத்தானே. தொழிலாள வர்க்கத்துக்குத்தானே.

    ஒரு ஏழையை நசுக்குபவன் பார்ப்பன பணக்காரனாயிருந்தால் என்ன? சூத்திரப் பணக்காரனாயிருந்தால் என்ன? பாதிப்பு ஏழைக்குத் தானே. இந்த பார்வை தவறா?

    அப்ப வர்க்க பேதம் அனைவருக்குமே வரும்கிற பார்வையில் கம்யூனிஸ்டுகள் கூறுவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

    ReplyDelete
  4. ஒரு சிஸ்டம் பொய் என்கிறோம். அப்படி பொய் என்று கூறிவிட்டப் பிறகு அந்த சிஸ்டத்தையே விடாமல் தூக்கி கொண்டு அரசியல் செய்வது. அந்த சிஸ்டம் சரி என்று ஏற்றுக் கொள்வதாகத்தானே ஆகும்.

    சிஸ்டம் சட்டமே இல்லை. மதத்துக்கான அடிப்படைவாதமாகவும் இல்லை. தீர்ப்பும் இல்லை. அப்ப அனைத்தும் பொய் தானே.

    சிஸ்டத்துக்கு தலைமை என்பதும் இல்லை. சிஸ்டத்தை யாரும் கையில் வைத்திருப்பதற்கும் உரிமை இல்லை. அப்படியிருக்க சிஸ்டம் யாரிடம் இப்போது இருக்கிறது?

    அப்படி இருந்தாலும் அதை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தானே நஷ்டம்? மற்றவர்களுக்கு நஷ்டமா?

    ஒரு வேளை நான் சிஸ்டத்தை கையில் வைத்திருக்கிறேன் என்றால் அது எனக்கு நஷ்டம் சரியா? என்னை பலரும் விலக்குவார்கள். அதானே உண்மை.

    அப்படி விலக்கினால் என்னால் இந்த சமூகத்தில் தனித்து முன்னேற முடியாது. அப்ப எனக்கு நஷ்டம் தானே?

    அப்புறம் அதை பற்றி அவ்வளவாக கவலைப்படுவதோ? அல்லது கவலைப்படுவது மாதிரி நடிப்பதோ? தேவையற்றதாகத் தானே ஆகும்.

    இல்லையா?

    ReplyDelete
  5. நான் ஏன? இன்னொருவன் பிராமணன் என்று சொல்லிக் கொண்டால் என்னைத் தாழ்வாக நினைக்கவேண்டும்? படித்துவிட்டப் பிறகும்?

    கல்வி என்னை தாழ்த்துவதற்கா இல்லை உயர்த்துவதற்கா?

    என்னிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை அகற்றுவதற்கா? இல்லை மேலும் மேலும் என்னை இன்னொருவனோட ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்வதற்கா?

    அப்படி தாழ்வு மனப்பான்மை இருந்தால் நீ பிராமணனாக மாறிக் கொள். பூணூலைப் போட்டுக் கொள். அதை தடுக்கிறதா? அரசாங்கம்?

    அது வெறும் ஜாதி தானே. பெயரளவுக்குத்தானே இருக்கிறது. அதற்கு ஏன்? முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறேன். நான்.

    இந்த பார்வை தவறா? சரியா? சரி தானே.

    இதை தானே பெரியார் குறிப்பிட்டார். என்னிலும் உயர்ந்தவன் ஒருவன் இல்லை என்னிலும் தாழ்ந்தவன் ஒருவன் இல்லை என்று.

    இந்த விஷயம் தானே வரணும். அதற்கானப் போராட்டம் தானே இப்போது இருக்கணும். அது நடந்தா ஆட்டோமெட்டிக்கா எல்லாப் பயலும் வந்துடப் போறான்.

    ReplyDelete
  6. நான் எழுதியக் கருத்தை வெளியிடுவீர்களா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் நான் பல காலம் பார்த்து வந்த அரசியலையும் சமூகப் பாதிப்புகளையும் வைத்தே அடுத்தக் கட்டப் போராட்டத்தை குறித்தே இதை எழுதுகிறேன்.

    காலத்துக்கேற்ற கருத்து மாற்றம் வரவில்லை என்றால் அது விழலுக்கு இறைத்த நீராகத்தான் மாறும் என்றார் அண்ணா.

    நன்றி.

    ReplyDelete
  7. நம்பி அவர்களுக்கு என்னுடைய பதில்கள் வருமாறு ... அண்ணா ,கலைஞர் மற்றும் பேராசிரியர் மூவருமே மானமிகு சுயமரியாதைக்கார்ர்கள் அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆயிரம் அரத்தங்களுடன் பேசக்கூடியவரகள் . அவர்கள் எப்போது பிராமணர் என்ற வார்த்தையை கையாண்டாரகள் என்று குறிப்பிட்டு சொன்னால் விளக்கம் தர ஏதுவாக இருக்கும்

    சரி தங்களின் அடுத்த கேள்விக்கு வருவோம்


    மனுநீதிப்படி பிராமணன் என்பது தலையில் பிறந்தவன் அர்த்தம் எனில் சூத்திரன் என்பவன் காலில் பிறந்தவன் என்றுதானே அர்த்தம்

    நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம .உற்பத்தியாளனாகிய என்னால் முடியாது.’’

    ``சாதுர் வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் கண கர்ம விபாகச:

    தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்யகர்த்தார மவ்யயம்’’

    (அத்தியாயம் 4, சுலோகம் 13)

    இந்த உலகத்தில் மட்டும்தான் இத்தகைய நான்கு வகை வர்ண தர்மம் உண்டு. மறு உலகத்தில் இது இல்லை.

    ``காங்கஷ்ந்த்: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா

    க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்ப் பவதி கர்மஜா’’

    (அத்தியாயம் 4, சுலோகம் 12)

    பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin)

    ``மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனய

    ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளு

    பி யாந்தி பராங்கதிம்

    (அத். 9 சுலோகம் 32)

    பகவத்கீதையிலே இருக்கின்ற "பொன்மொழிகள்" இவைகள். இப்படி அதில் நிறைய உண்டு.

    வேதங்கள் அனைத்துமே வர்ணம் என்பது பிறப்பால் வருவது என்று தெளிவாக சொல்கின்றன. நீங்கள் அவைகளை அறியாது போன்று நடிக்கின்றீர்கள்

    அப்படியெனில் பார்ப்பனர் பூநூல் அணிவதன் அர்த்தம் என்ன? சரி மற்ற பார்ப்பனர் அல்லாத சாதியினரை எடுத்து கொள்ளுங்கள் எடுத்துக்காட்டாக முற்பட்ட சைவ வகுப்பை சார்ந்தவர்கள் கோவையில் வசித்தால் கோவைத்தமிழும் நாகர்கோயிலில் வசித்தால் அல்லது இன்னும் ஏதேனும் பகுதியில் வசித்தால் அந்தந்த வழக்கு மொழி அல்லது அந்த வட்டாரத்தை சேர்ந்த உச்சரிப்பை கையாள்கின்றனர் ஆனால் பாரப்பனரகள் இன்று வரை அவாள் பாஷையிலேயே பேசுகின்றனர் .. இன்று வரையில் சமஸ்கிருதம் பெயர்களையே வைக்கின்றனர் குறைந்தபட்சம் முருகன் என்பது கடவுள் பெயராக இருப்பினும் தமிழ் பெயர் என்பதால் வைப்பதில்லை சுப்ரமணியன் என்றே வைக்கின்றனர் இவ்வாறாக இருக்கையில் பாரப்பனீயம் ஒழிந்து விட்டது என்று கூற இயலும்

    வாத்தியார் நேற்று படிக்காத காரணத்தினால் முட்டாள் என்று சொன்னார் படிக்காதவனை முட்டாள் என்று கூறுவதே தவறுதான் நேற்றைய முட்டாள் இன்று படிக்கின்ற காரணத்தினால் புத்திசாலி ஆகலாம் ஏழை பணக்காரன் ஆகலாம் அப்படியெனில் ஒரு தலித் அல்லது மிக பிற்படுத்தப்பட்டவன் அல்லது பார்ப்பனர் அல்லாத முன்னேறிய பிரிவில் உள்ளவர் திருப்பதி கோயிலில் குருவாயூர் கோயில்களில் அர்ச்சகர் ஆகலாமா? ஆகமங்களின் படி மனுதரம்பபடிதானே உச்சநீதிமன்றத்தின் அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்று திமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்டம் தடை செய்யப்பட்டது சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தீட்சதர்கள் மட்டும் தானே அர்சசகர்களாக தொடரும்அவல நிலை தொடரக்காரணம் என்ன?

    திருமணத்திற்கு சாதி வேண்டும் ஆனால் வேலை வாய்ப்புக்கு சாதி வேண்டாம் என்று கூறுவது முரணானது

    இந்த மதம் ஒழியாமல் இந்த கடவுள் ஒழியாமல் மனுதர்மம் ஒழியாமல் இதற்கு எல்லாம் காரணமான பாரப்பனீயம் ஒழியாமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை
    பார்ப்பனர் என்ற தமிழ் சொல்லில் அழைப்பதால் என்ன குறை வந்து விடப்போகிறது

    ஆங்கிலத்தில் சார் என்று அழைத்தால் மரியாதை என்பது போலவும் அய்யா என்று அழகு தமிழில் அழைத்தால் ஒரு மாதிரியாக இருப்பது போலவும் இருக்கிறது உங்கள் பார்வை
    பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்று பாரதி கூட பார்ப்பு என்ற சொல்லை கையாண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொள்க

    வர்க்க பேதம் எளிதில் மாறக்கூடியது வர்ண பேதம் கொடுமையானது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது நம்மை பொறுத்தமட்டில் எல்லா பேதங்களும் ஒழிக்கப்பட்டு சாதி சமயமற்ற எந்த வித பேதமின்றி சமநிலையுடன் எந்த வித மூட நம்பிக்கையும் இல்லாமல் அறிவார்ந்த சமூகமாக வாழ வேண்டும்

    நீங்கள் இரண்டாவதாக சிஸ்டம் என்று கூறுவது எதைப்பற்றியது என்று என்று புரியவில்லை சற்று விளக்கமாக கூறினால் விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறேன்

    ReplyDelete