தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 6 January 2016

மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

04-01-2016 அன்று  நியூஸ்7 தொலைக்காட்சியில் "தமிழகத் தேர்தல் 2016 - மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள்" நிகழ்ச்சியில் சுபவீ














8 comments:

  1. கணேஷ்வேல்8 January 2016 at 11:01

    எந்த இயக்கத்தின் போராட்டத்தால் கல்வி கற்கும் உரிமை பெற்றார்களோ, அதே இயக்கத்தை கல்வி கற்றபின் தாக்குகிறார்கள்.

    சிலர் வரலாறு தெரிந்தும் தாக்குகிறார்கள்,
    பலர் வரலாறு தெரியாமலே தாக்குகிறார்கள்.

    வரலாறு தெரிந்தே தாக்குபவர்களுக்கு உள்நோக்கம் வேறு உள்ளது என்பது வெளிப்படை. ஆனால் வரலாறே தெரியாமல் இயக்கத்தை எதிர்ப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    2000 ஆண்டுகளாக ஆரியத்தால் நாம் இழந்த உரிமைகள், திராவிட இயக்க வரலாறு, மொழிப்போர், திராவிட இயக்கத்தின் போராட்டங்களால் தமிழர்கள் மீட்டெடுத்த உரிமைகள், அதனால் பெற்ற பயன்கள் என அனைத்தையும் பள்ளிக் கல்வியில் சேர்த்து மாணவர்களை 'நன்றியுள்ள' மனிதர்களாக உருவாக்க வேண்டும்.

    "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று மட்டும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் - 'சாதி' எப்படி உருவானது, சாதியத்தின் வேர் எங்குள்ளது, சாதியின் கொடுமை என்ன என அனைத்தையும் பள்ளிக் கல்வியில் சேர்த்து மாணவர்களை 'சாதியற்ற' மனிதர்களாக உருவாக்க வேண்டும்.

    "தீண்டாமை ஒரு பாவச் செயல்" என்று மட்டும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் -
    'தீண்டாமை' யாரால்/எப்படி உருவாக்கப்பட்டது, மண்ணின் மைந்தர்கள் எப்படி தாழ்த்தப்பட்டவர்களாக மாற்றப்பட்டனர், தீண்டாமையின் தற்போதைய வடிவம் என்ன என அனைத்தையும் பள்ளிக் கல்வியில் சேர்த்து மாணவர்களை 'மனிதநேயமிக்க' மனிதர்களாக உருவாக்க வேண்டும்.

    தாங்கள் மற்றொரு கட்டுரையில் குறிப்பிட்டது போல "ஒரு தேசிய இனம், தன்னை ஒரு தேசிய இனமாக உணர்வதற்குத் தன் வரலாற்றைச் சரியாக அறிந்திருக்க வேண்டும் என்பது, ஒரு மீற முடியாத முன்நிபந்தனை."

    தன் வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்ளாத ஒரு இனம் அழிந்து போகும் அல்லது எதிரிகளால் அழிக்கப்பட்டுவிடும்.

    இன்றைய உடனடி தேவை கல்வித்துறை வாயிலாக, 'சரியான' வரலாற்றை மாணவப்பருவத்திலிருந்தே கற்றுத்தர வேண்டும். திராவிட ஆட்சியில் இதை செய்யமுடியாவிட்டால் வேறெப்போதும் இதைச் செய்ய முடியாது.

    திராவிட இயக்கத்தையும் அதன் சித்தாந்தங்களையும் கல்வியில் ஏன் சேர்க்கவில்லை எனும் கேள்வியை வரும் காலத்தில் தவிர்ப்பதற்கும், திராவிடர்களே திராவிடத்தை எதிர்க்க தொடங்கியுள்ளதை வேரோடு களைவதற்கும் உடனடி தேவை - மாணவர் கல்வியில் 'நம்' வரலாற்றை சேர்க்க வேண்டும்.

    அடுத்து அமையும் 'நமது' கழக ஆட்சியில் இதை செய்ய வேண்டும் என்பதே சுபவீ அய்யாவுக்கு நான் வைக்கும் மிகத் தாழ்மையான வேண்டுகோள் !

    நன்றி அய்யா !

    ReplyDelete
    Replies
    1. மதத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் எல்லா மத சம்பிரதாயங்களையும் போலவே தீண்டாமையும் பிடிவாதமாக நிலைத்திருக்கிறது.இந்திய மண்ணிலிருந்து தீண்டாமையை ஒழிப்பதற்காக பல மகாத்மாக்கள் ஏற்கனவே அரும்பாடுபட்டுள்ளனர் என்பதை இந்திய வரலாற்றில் காண்கிறோம்.‎புத்தர்‬,‎ராமானுஜர்‬ மற்றும் நவீனகால வைணவ மகான்கள் இவர்களில் அடங்குவர். இத்தகைய தாக்குதல்களை எல்லாம் சமாளித்துத் தாக்குப்பிடித்த இந்த அமைப்புமுறை தகர்ந்து விழுந்து விடும் என்று கருதுவது துணிச்சலானது; அபாயகரமானது.தீண்டாமையைக் கடைப்பிடிப்பது ஒரு மத சம்பிரதாயமாகவும்,அதைக் கடைப்பிடிக்காதது பாவச் செயல் என்றும் ஒவ்வொரு சாதி இந்துவும்/திராவிடனும் கருதுகிறான்.எனவே இந்தக் கருத்து நிலைத்து நீடித்திருக்கும் வரையிலும் தீண்டாமையும் நீடித்து வரும் என்பதே நிதர்சனம். இன்றைய நிலையில்'தீண்டாமை'யை ஆரியர்களைவிட திராவிடர்கள்தான் அதிகம் பிரயோகிக்கிறார்கள், ஆதரிக்கின்றார்கள்!.ஆகவே அடுத்து அமையும் கழக ஆட்சியில் ஒரு தலித்தை முதல்வராக ஆக்க வேண்டும் என்று சுபவீ அய்யா அவர்கள் பிடிவாதக்குரல், முரட்டுக்குரல் கொடுக்க வேண்டுமென்பதை தீண்டத்தகாதோர்கள் வைக்கும் மிகத் தாழ்மையான வேண்டுகோளாகும்!.

      Delete
    2. ரவிகுமார்8 January 2016 at 16:37

      ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொது சாலைகளில் நடக்க அனுமதி மறுப்பது,பொது பள்ளிகளில் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க மறுப்பது,பொது கிணறுகளில் தண்ணீர் எடுக்க விடாதது,பொது மயானங்களை பயன்படுத்த மறுப்பது குறித்து சுட்டிக்காட்டி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட உரிமைகளை கூட சாதி இந்துககள் அனுமதிக்க மறுக்கும் போது சட்டமும் காவல்துறையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஏன் இருப்பதில்லை? என்று சமூகநீதிக்கான கேள்வியை ‪1930ல் அம்பேத்கர்‬ முன்வைத்தார்,அது இன்றும் தமிழ்நாடடில் அதே நிலையில்தானே உள்ளது.இதற்குக் கரணம் ஆரியர்களா? அல்லது சாதி திராவிடர்களா?.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருநாள்கொண்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 85வயதுடைய செல்லமுத்து 03.01.16-இல் இறந்துவிட்டார்.அவருடைய உடல் பொதுசாலை வழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவர் ‪#‎தலித்‬ (ஒடுக்கப்பட்டோர்/ தீண்டத்தகாதோர்).ஒடுக்கப்பட்டோர் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.கடந்த 5ம் தேதி விசாரித்த கோர்ட்,"பொதுப்பாதையில் உடலை எடுத்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"என அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.அரசு தலையீட்டில் பிரச்சனை சமூகமாக தீர்க்கப்படவில்லை."பிணத்தை நாங்களே எடுத்துச் சென்று புதைத்துவிடுகிறோம்"என்று காவல்துறை கூறியது&பிறக செய்தது.இறந்தவரின் உறவினர்கள், "நாங்கள் இல்லாமல் எப்படி நீங்கள் பிணத்தை அடக்கம் செய்ய முடியும்?.பொதுசாலையை உபயோகிக்க ஐக்கோர்ட் உத்தரவை மட்டும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்"என்றனர்."இந்த மக்கள் எங்கள் சாலையை உபயோகப்படுத்தக் கூடாது.மீறிவந்தால் நாங்கள் தீக்குளிப்போம்" என்று பொதுசாலையை உரிமைகோரும் மக்கள் கொந்தளித்தனர்.விளைவு,500காவல்துறை அங்கே குவிக்கப்பட்டது.100 பேர்கள் கைது.உறவினர்களிடம் இருந்து பிணத்தை பறித்து நான்கு காவல்துறையினர் மூலம் 4 நாட்களுக்கு பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.இதற்கு பெயர் ஜனநாயகமா? சமத்துவ உரிமையா?அனைத்து சாதியினரைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களும் அரசுக்கு வரிகள் செலுத்துகிறார்கள்.அவர்களும் திராவிடர்கள் தான்.ஆனால் பொதுசாலையில் நடக்க உரிமை இல்லை.பொது சுடுகாட்டை உபயோகிக்க உரிமை இல்லை.ஐய்க்கோர்ட் அரசு தலையிட்டு பொதுசாலையை உபயோகித்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியும் அரசால் செயல்படுத்த முடியவில்லை.காவல்துறை பிணத்தை பிடுங்குகிறது என்றால் இந்த சட்டங்களும் அரசும் காவல்துறையும் யாருக்காக இயங்குகிறது?.
      31 டிசம்பர் 1930வரை பொதுசாலை உபயோகிக்க அனுமதி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 2016லும் அதே நிலைமைதான் என்றால் யாருக்கு கிடைத்தது சுதந்திரம்?,யாருக்கு புத்தாண்டு?.தேர்தல் கருத்து தி(க)ணிப்புகளில் இவ்வளவு ஆர்வம் காட்டு்ம் சுபவீ அவர்கள் இதைப்பற்றியெல்லாம் மூச்சுவிடாதது ஏன்?

      Delete
    3. அ.இதைப்பற்றியெல்லாம் மூச்சுவிட்டவரும் தமிழகத்தில் இருக்கிறார்!
      வழுவூர் சுடுகாட்டுப் பாதை சம்பவம் குறித்த கழக தலைவர் கொளத்தூர்மணி அறிக்கை!
      நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் என்ற கிராமத்தில் தாழ்ந்தப்பட்ட மக்கள்மீது, அங்கிருக்கிற ஆதிக்க ஜாதியினர், தொடர்ச்சியாக பொதுக்கோயிலில் இருந்து பால்குடம் எடுப்பதையும், இறந்த பிறகு பொதுப் பாதையில் இறந்தவர்களைக் கொண்டு செல்வதையும் அனுமதிக்காமலே உள்ளனர். இறந்த உடலை ஊராட்சிப் பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றால் அரை கிலோமீட்டர் மட்டுமே . ஆனால் வயல்வெளி, வாய்க்கால், வரப்பு என எடுத்துச் சென்றால் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்றாக வேண்டும்.
      இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் குஞ்சம்மாள் என்கிற தாழ்த்தப்பட்டப் பெண் ஒருவர் இறந்தபோதும் பொதுப்பாதையில் எடுத்துச் செல்லத் தடுத்ததால் பல்வேறு இயக்கங்கள், கட்சியினர் ஆதரவோடு, ஊராட்சிப் பொதுப்பாதை வழியாக எடுக்க அனுமதித்தால் மட்டுமே உடலை எடுப்போம் என அப்பகுதி இளைஞர்கள் போராடினர். மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரை விட்டு பலவந்தமாக உடலை வயல், வாய்க்கால், வரப்பு வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
      3-1-2016 அன்று அந்த குஞ்சம்மாளின் கணவரான செல்லமுத்து இறந்துபோனார். இவரது உடலையாவது பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்; உயர்நீதிமன்றமும் பொதுப்பாதையில் உடலை எடுத்துச் செல்ல அனுமதியும் பாதுகாப்பும் அளிக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் ஆதிக்க ஜாதியினர் அனுமதிக்க மறுத்துத் தங்கள் பகுதியில் 50 கேன் மண்ணெண்ணை, தடிகளுடன் பொது சாலையில் கூடி நின்றனர். நூற்றுக் கணக்கில் கூடிநின்ற காவல்படையினர் இருக்கும்போதே இவ்வநியாயம் நிகழ்ந்துள்ளது.
      தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும், உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்காதவரை இறந்தவரின் உடலை நாங்கள் அடக்கம் செய்யப் போவதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்
      இந்நிலையில் பொதுப்பாதையில் தாழ்த்தப்பட்டவரின் உடலை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட நிர்வாகம், தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததோடு மட்டுமின்றி, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதை செயல்படுத்தாமல் ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவாக, போராடிய தாழ்த்தப்பட்ட மக்கள்மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். ஏற்கனவே இதய நோயாளியாய் இருந்த, இறந்த செல்லமுத்துவின் மருமகள் மல்லிகாவையும், பேத்தி ஜெகதாம்பாளையும் அடித்ததோடு காலில்போட்டு மிதித்ததால், நாகை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நிலைமை மோசமாக இருந்ததால் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தாக்கியதோடு நில்லாமல் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களையும் அடித்து ஐந்து காவல்துறை வண்டிகளில் ஏற்றி காவல்நிலையத்துக்குக் கொண்டுசெல்ல, தடுக்கப்பட்ட பஞ்சாயத்து சாலையில் சென்ற காவல்துறை வண்டிகளையே ஆதிக்க ஜாதியினர் கல்வீசித் தாக்கியுமுள்ளனர்.
      இதற்கிடையில் இறந்தவரின் உடலை காவல்துறையினரே எடுத்துச் சென்று,உயர்நீதிமன்ற ஆணைக்கு முரணாக, வயல், வாய்க்கால், வரப்பு வழியாகவே எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளார்கள்.காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் பலர் காயமுற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுமுள்ளனர்.
      தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையைக் கூட நிறைவேற்ற கையாலாகாத நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் அரசபயங்கரவாதம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
      தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதில் தமிழக அரசு இயந்திரம் ஆதிக்க ஜாதிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது; இதில் ஆளும் கட்சி,ஆண்டகட்சி இரண்டுமே ஒரே மனநிலையுடன் தான் செயல் படுகின்றன
      தாமிரபரணி, மாஞ்சோலை படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்றவற்றின் தொடர்ச்சியாக இன்று நாகை மாவட்டத்தில் காவல்துறையினரின் அரசபயங்கரவாதம் என, தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதில் தொடர்ந்து ஆதிக்கமனப்பான்மையுடனே செயல் படுகின்றது.

      Delete
    4. ஆ. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயக்கங்கள், கட்சிகள் களத்தில் இறங்கி போராடினால் அவர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் போன்ற கருப்புச் சட்டங்களை ஏவி அவர்களை ஒடுக்குகிறது; ஆதிக்க ஜாதியினருக்கோ ஏவல் பணியாற்றுகின்றன அரசநிர்வாகமும் காவல்துறையும்.
      இந்த நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் தாழ்த்தபட்ட மக்கள் தொடர்ந்து ஆதிக்க ஜாதியினரால் வன்கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கிராமங்களில் இன்னும் இரட்டை குவளை முறை இருந்துதான் வருகிறது பொதுப்பாதையில் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல முடியவில்லை. பொது கோவில்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது
      இந்த அவலங்களை ஜாதி ஒழிப்புக் களத்தில் வாழ்நாள் முழுதும் போராடிய, பெரியார் பெயரைச் சொல்லி ஆட்சியில் அமர்ந்துள்ள அதிமுக, திமுக போன்றவை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் வேதனைக்குரிய செய்தி.
      இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுக்குப் போகிறார்களே என்று அங்கலாய்க்கும் அரசுகளும், ஆளும் வர்க்கத்தினரும், தங்களின் சட்டவிரோத நடவடிக்கைகள்தாம் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளிவிடும் காரணிகள் என்பதை ஏனோ வசதியாக மறந்துவிடுகின்றனர்.
      வழுவூரில் நடந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் ஆகியோரின் சட்டவிரோத அராஜகப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. உயர்நீதிமன்ற ஆணையைக்கூட மீறி செயல்பட்டோர் அனைவரையும் பணியிடைநீக்கம் செய்து தமிழ்நாடரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறது.
      நாகை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராகவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தமிழ் அறியாதவர் என்பதால் அவருக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ளவரும், அரசு சாலையையே தடுத்து அராஜகம் செய்யும் அதே ஆதிக்கஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள்.
      அந்தந்தப் பகுதியின் ஆதிக்கஜாதிப் பிரிவுகளைச் சேர்ந்தோரை அந்த பகுதிகளில் அதிகாரிகளாக, குறிப்பாக காவல் துறை அதிகாரிகளாக நியமிக்கலாகாது என்ற தொடர்ந்து எழுப்பிவரும் கோரிக்கையை மீண்டும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. ஆனால், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் தாழ்த்தப்பட்ட
      மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையும் ஊட்டும்வண்ணம் அந்தந்தப் பகுதி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளை அந்தந்தப் பகுதிகளிலேயே பணியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும் தமிழக அரசை என்றும் வலியுறுத்துகிறோம்.

      Delete
  2. அய்யா!,

    இந்த கருத்தில் நான் முழுமையாக உடன் படுகிறேன்!
    தலைவர் கலைஞர்ரிடம், தளபதி ஸ்டாலினிடமும், இதனை கொண்டு செர்கவேண்டுகிறோம்.

    @கணேஷ் வேல்,
    உங்கள் கருத்திற்கு நன்றி! வாழ்த்துகள்!

    அன்புடன்,
    சுதாகர் K (IT)

    ReplyDelete
    Replies
    1. கணேஷ்வேல்10 January 2016 at 21:28

      நன்றி சுதாகர் !!!

      Delete