தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 29 October 2017

பாராட்டும் கண்டனமும்!




எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு ஓர் உருப்படியான செயலைச் செய்துள்ளது. அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதை அறிவோம். அதற்கு 31 கோடி ரூபாய் அந்தப் பல்கலைக்கழகத்திற்குக் கொடுக்க வேண்டும். அந்த முயற்சியில் தனியார் சிலரும், இந்து நாளேடும் ஈடுபட்டிருந்தனர். இப்போது தமிழக அரசு அதற்கு 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. தமிழக அரசின் இச்செயலை மனமுவந்து பாராட்டுகின்றோம்!


பாஜக மாநிலத்து தலைவர் தமிழிசை குறித்துக் கேலி செய்தும், அவர் தோற்றத்தை நையாண்டி செய்தும் சமூக வலைத் தளங்களில் எழுதப்பட்டுவரும் கேலிப்படங்கள் தவறானவை. யாரொருவரின் அரசியலையும் நாம் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்டமுறையில் அவர் உருவத்தையும், உடல் நிறத்தையும், தலைமுடியையும் கேலி செய்வது கண்டனத்திற்குரியது. 

3 comments:

  1. பக்குவத்துக்குரிய பாராட்டும், கண்டனமும் ஆகும்.

    ReplyDelete
  2. உலகத்துக்கே தண்ணீரை எப்படி சேமிப்பது என்று சிங்கப்பூர் கற்றுக்கொடுக்கும் அதே நேரத்தில் நம் ஊரில் ஏரியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டி அடுத்த தலைமுறை வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குகிறார்கள். இருந்தாலும் எடப்பாடி அவர்கள் மேல் ஏனோ நம்பிக்கை எனக்கு வருகிறது. நாம் சொல்வதை காது கொடுத்து கேட்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரே ஒரு முறை எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களோ தென் அமெரிக்க நாடுகளுக்கு(பிரேசில் மற்றும் சிலி போன்ள நாடுகள்) பார்வையிட சென்று வர வேண்டும். அடுத்த தலைமுறையை பற்றி கவலைபடுபவர் எப்படி ஆட்சி செய்வார்கள் என்பதை அங்கே அறிந்து கொள்ள வேண்டும். இங்கே அனைத்து தொழிற்சாலைகளும் வேலூர் சாலை ஜிஎஸ்டி ரோடு மற்றும் ஓஎம்ஆர் ஆகிய சாலைகளில் மட்டுமே ஆரம்பிக்கப்படுகின்றன. அதை ஒட்டியே குடியிருப்புகளும் வந்து போக்குவரத்து ஒரே சாலையில் குவிகின்றன. ஆனால் தென் அமெரிக்க சாலைகளில் ஜிஎஸ்டி ஓஎம்ஆர் போல ஐம்பது சாலைகள் மேல் வரிசையாக உள்ளன. அங்கே என்ன வேண்டுமானாலும் அமைக்கலாம். எனவே போக்குவரத்து பிரச்சனை இல்லை. கூகிள் மேப்பில் பார்த்தால் அங்கே உள்ள கிராமங்கள் கூட இம்மாதிரி அமைப்பில் சாலைகள் பெற்றிருப்பது புரியும். கிராமங்களில் இப்படி அமைக்கும்போது தார் சாலைகள் கூட தேவையில்லை. பின்னாளில் கிராமங்கள் நகரங்களாக மாறும்போது எந்த கஷ்டமும் அடுத்த தலைமுறை மக்களுக்கு இருக்காது. எனவே நீங்கள் ஜிஎஸ்டி ஓஎம்ஆர் ரோடு அல்லாமல் புதிய தொழில்நகரங்களை தென்அமெரிக்க சாலைகள் போல இடம் ஒதுக்கி அமைக்க வேண்டும். தார் சாலைகளை பின்னால் போட்டுக்கொள்ளலாம். ஆனால் இடம் விட்டால் போதும் என்பது முக்கியம். அதாவது திட்டமிடலும் இடங்களும் மட்டுமே முக்கியம். இந்த இடங்களும் எந்த பழிவாங்கல் விதிகளும் (அதாவது பிடிக்காதவர்களின் இடங்களை அரசு திட்டம் என்ற பெயரில் அபகரிப்பது) பின்பற்றாமல் சரியாக விளைச்சல் இல்லாத இடங்களில் ஆரம்பிக்க வேண்டும். உங்களுக்கு அவ்வளவு தூரம் செல்வது கடினம் என்றால் பக்கத்தில் இருக்கும் சண்டிகர் சென்று வந்தால் கூட அறிந்து கொள்ளலாம். அவ்வளவு தூரம் போக வேண்டாம் என்றால் பக்கத்தில் உள்ள பாண்டிச்சேரியாவது சென்று பாருங்கள். பாண்டியில் ஒரு டெங்கு உயிரிழப்பு கூட இல்லை. உள்கட்டமைப்பு கோலாருகள்தான் டெங்கு வருவதற்கு முக்கிய காரணம் என்பதை ஆள்பவர்கள் அறிய வேண்டும்.

    ReplyDelete
  3. எடப்பாடி ஐயா எங்களை போன்ற ஐடி ஊழியர்களை இளைஞர் சக்தியை ஒன்றினையுங்கள். எங்கள் எதிர்காலத்திற்காக நாக்கள் உழைக்கிறோம். குறை சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். எங்களுக்கு சம்பளம் வேண்டாம். எங்களை பயன்படுத்தி புறம்போக்கு நிலங்களில் ஏரிகளை வெட்டித்தள்ளுங்கள். யாரோ ஒரு எஸ்ஆர்எம் போன்ற நிறுவனங்களுக்கு உழைக்கும் இளைஞர்கள் அரசின் நல்ல திட்டங்களுக்காக நிச்சயம் உழைப்பார்கள்.

    ReplyDelete