நஞ்சு "கலந்திருந்த"
பால்
திராவிட இயக்கத்தால்தான் தமிழகம்
சீரழிந்து விட்டது என்று நெஞ்சில் நேர்மையற்றவர்கள் பேசிக் கொண்டே இருக்கின்றனர்.
திராவிடக் கட்சிகளை அகற்ற வேண்டும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சி.பி.எம்.
கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தவறாமல் சொல்கிறார். என்ன
வேடிக்கை என்றால், அதே மேடையில் வைகோவும் இருக்கிறார். மௌனம் காக்கிறார்.
அப்படியானால் அவர் என்ன கட்சி? திராவிடக் கட்சி இல்லையா? அவருக்கும்
திராவிடத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? ஒருவேளை, வைகோவையும் சேர்த்தே
ஒழிக்கப் போகிறோம் என்றுதான் ராமகிருஷ்ணன் சொல்கிறாரோ? அதனைப் புரிந்தோ புரியாமலோ,
ம.தி.மு.க. தொண்டர்களும் அந்தப் பேச்சுக்குக் கை தட்டுகின்றனர்.
அங்கெல்லாம் எதுவும்
பேசாத வைகோ, கலைஞர் என்ன பேசினாலும் உடனடியாக, மிகக் காட்டமாக விடை சொல்கிறார்.
தே.மு.தி.க.வுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை எப்படியுள்ளது என்று நிருபர்கள் கேட்ட
கேள்விக்கு, "பழம் கனிந்து விட்டது. பாலில் எப்போது விழும் என்பது இன்னும்
சில நாள்களில்
தெரியும்" என்று கூறினார். இது எந்த விதத்திலும் வைகோவைப் பாதிக்கக் கூடிய விடை இல்லை. ஆனாலும் வைகோ
கோபப்படுகிறார். "பழம் கனிந்தாலும், அது நஞ்சு கலந்த பாலில் விழாது"
என்று தன் நேர்காணலில் கூறுகின்றார்.
தி.மு.க.வை நஞ்சு
கலந்த பால் என்று கூற வேண்டிய தேவை என்ன?அப்படியென்ன தி.மு.க. அவருக்குக் கேடு செய்தது - 18
ஆண்டுகள் அவரைத் தில்லிக்கு
அனுப்பியதைத் தவிர? இப்போது அவருடைய
மொழியிலேயே அவருக்கு நாம் விடை சொல்ல
வேண்டியுள்ளது. "தி.மு.க.
என்பது நஞ்சு 'கலந்திருந்த' பால்தான். ஆனால் அந்த நஞ்சு 1992 ஆம் ஆண்டே அகன்று
விட்டது."
வைகோ என்னதான் திமுகவையோ அல்லது கலைஞரை தாக்கி பேசினாலும் அவர் மீது அனுதாபம் கொள்ளத்தான் தோன்றுகிறது. ஒரு நல்ல உணர்ச்சி நடிகர்வீணாக போகிறாரே என்ற கவலை வருகிறது. செங்கிஸ்கான், அலேக்சாண்டர்,கலிங்கத்து பரணி காவரிதரணி என்றெல்லாம் படம் காட்டும் ஒரு திறமையான கலைஞன். ஆனால் என்று அம்மாவிடம் விலை போனாரோ அன்றே அவர் ஒரு அரசியல் தற்கொலை புரிந்து கொண்டார் போலதான் காட்சி அளிக்கிறார். எங்கிருந்தாலும் அவர் வாழ்க. அவர் திட்டுவதால் திமுகவோ கலைஞரோ ஒன்று குறைந்து போய்விட மாட்டார்கள்.அவர் இனி வேறு யாரைத்தான் திட்டுவது? மக்கள் கவனிக்க வேண்டுமே? அவ்வளவு அரசியல் வெறுமை அவருக்கு.
ReplyDeleteநெத்தியடி பதில்
ReplyDeletePadippathu Thirukkural.. Idippathu Valluvar Kottam.
ReplyDeletePesuvathu Diravidam.. ethirpathu Kalaignar..
Ithu thaan Annan Vaiko.
---MuMu
சுபவீ போன்றவர்கள் திமுக வையும் கருணாநிதி யையும் , ஒரு காலத்தில் விமர்சித்து ,தற்போது மாணவர் நகலகம் இல்லாத காரணத்தால் , திமுக வை அண்டிப்பிழைப்பவர்தான் உடைந்த சித்திரம் சுபவீ
ReplyDeleteஅவர்கள், ஆட்சியில் இருந்த இரு திராவிட இயக்கத்தை தான் விமர்சிக்கின்றோம்? என்கிறார்களே!! நாங்கள் பெரியகட்சிகளோடு கூட்டு வைக்கவில்லை, பெரியார் கட்சிகளோடுதான் கூட்டு வைக்கிறோம்! என்கிறார்கள்!! பொதுவுடமை தோழர்களின் கொள்கை???
ReplyDeleteதிராவிட இயக்கத்தால்தான் தமிழகம் சீரழிந்து விட்டது என்பது இரண்டு திராவிடக் கட்சிகளான திமுக&அதிமுக மட்டுமென்பதை தமிழர்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள்(உங்களை, திமுக&அதிமுகவினரைத் தவிர) ஒரு(தமிழர்) இனத்தை அழிப்பதற்கு முதன்மையாக செய்ய வேண்டியது(சாணக்கிய தந்திரமான)அதன் வரலாறை அழிப்பது அல்லது திரிப்பது அடுத்தது அவனை போதையில் வைத்திருப்பது
ReplyDelete50 ஆண்டுகளாக இரண்டு திராவிடக் கட்சிகள் (திமுக&அதிமுக)தமிழகத்தில் தமிழனிடத்தில் அதை மிகச் சிறப்பாக செய்து வருகின்றன!. ஆனால் வைகோ அந்த வகையறாவைச் சேர்ந்தவரல்ல என்பது அனைத்து தமிழர்களும் அறிந்ததே...
வைகோ திராவிடத்தை காப்பாற்றுவதாக வாயளவில் பேசுகிறாரே தவிர அதற்கான ஒருசெயலும் இல்லை.மாறாக தி மு க வை எதிர்ப்பதின் மூலம் அதை அழிக்கவே செய்கிறார்.இந்த நிலையில் வை கோ அவர்களுக்கு கட்சியின் லட்சியத்தைவிட கலைஞர்மீதுள்ள ஆத்திரமே அதிகமாக இருக்கிறது.
Deleteகடைசி வரி அருமை...
ReplyDeleteமரியாதைக்குரிய திரு.வைகோ அவர்களுக்கு, என்றும் கலைஞரிடத்தில் மதிப்பும் பாசமும் உண்டு. திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுடைய நடவடிக்கைகளின் போக்கு பிடிக்காததினால் திமுகவை விமரிசிக்கிறார்; தாக்குகிறார். அவர் நம் தமிழினம் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியான கொள்கையுடைவர்.
ReplyDelete