முத்தரசன் காட்டும் முகம்
நாளேடு ஒன்றுக்கு
அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், "அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும்தான் வரும்
தேர்தலில் போட்டி. தி.மு.க. மூன்றாவது இடத்துக்குப் போய்விடும்" என்று
கூறியுள்ளார், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் முத்தரசன்.
ஒவ்வொருவருக்கும்
தங்கள் கட்சி மற்றும் கூட்டணி குறித்துத் தாங்கள் நம்புவதையோ, தங்கள் அணித்
தொண்டர்களுக்குக் கூற வேண்டும் என்று கருதுவதையோ வெளிப்படுத்த அனைத்து உரிமையும்
உண்டு. அவ்வாறுதான் முத்தரசன் தன் கருத்தைச் சொல்லியுள்ளார் என்பதைப் புரிந்து
கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர்களின் உள்மனத்தில் என்ன இருக்கிறது என்பது அவரை
அறியாமலே வெளிப்பட்டுள்ளது.
பொதுவாகத் தேர்தல்
என்பது, ஆளும் கட்சி குறித்த விமர்சனமாக இருக்கும். ஆட்சி தொடர வேண்டும் என்றோ,
அது அகற்றப்பட வேண்டும் என்றோ அணிகள் பிரிவது இயற்கை. ஆனால் இங்குதான், ஆளும்
கட்சியை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்பவர்கள் கூட, இன்று சட்டமன்றத்தில்
எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத தி.மு.க.வைத் தாக்குவதில் மட்டுமே மிகுந்த கவனத்தோடு உள்ளனர்.
தி.மு.க.விற்கு
மூன்றாவது இடம்தான் என்கிறார் முத்தரசன், ஏதோ அவர் கட்சி முதலிடத்தில் இருப்பது போல!
அவர்கள் இடம் பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணியில் கூட அவர்கள் எந்த இடத்தில்
உள்ளனர் என்பதை அவர்களே அறிவர். தங்களுக்கான மக்கள் செல்வாக்கையோ, வாக்கு
எண்ணிக்கையையோ இன்றுவரை வளர்த்துக் கொள்ள இயலாத தோழர்கள், தி.மு.க.வின் இடம்
பற்றிப் பேசுவது எவ்வளவு வேடிக்கையானது.
அ.தி.மு.க.வை
அவர்கள் மறைமுகமாக ஆதரிப்பதைத்தான் அவருடைய நேர்காணல் காட்டுகிறது. தோழர்
முத்தரசன் தன் உண்மை முகத்தை (அதில் கொஞ்சம் தா. பாண்டியன் முகத்தின் சாயலும்
உள்ளது) வெளிக்காட்டி உள்ளமைக்கு நன்றி.
யார் எந்த இடத்தில்
உள்ளனர் என்பது மே 19 ஆம் தேதி தெரிந்துவிடும்!
பிராமணர்களை எப்படி நம்ப முடியாமல் போகிறதோ அதே போல இவர்களையும் உண்மை இல்லாமல், மனசாட்சி இன்றி பேசுவதால் நடந்து கொள்வதால் நம்ப முடியாமல் போகிறது. அம்பேத்கரை பார்க்கும்போது வரும் மரியாதையை திருமாவளவனை பார்த்தால் போய் விடுகிறது. நல்லவர்களை விடுத்து அல்லவர்களை நாடுகிறார்கள். அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற ஆணவம் தோழர்களிடையே அதிகரித்து வருகிறது. நேற்று தூத்துக்குடியில் நடந்த கழுத்தறுப்பு கொலை சம்பவம் அவர்களிடம் மிகுந்த எழுச்சியுடன் எதனை வேண்டுமானலும் அதிகாரம் செலுத்தி சாதித்து விடலாம். நாம் ஒன்று கூடி விட்டோம் இனி எவனும் வால் ஆட்ட முடியாது என்று கருதுவதாகவே தெரிகிறது. அணைத்து பிற்படுத்த பட்டவர்களும் ஒன்று கூடி அகில இந்திய பிற்படுத்தபட்டவர்கள் பாதுகாப்பு பேரவை ஆரம்பிக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
ReplyDeleteஅணைத்து இந்திய பிற்படுத்தபட்டவர்கள் பாதுகாப்பு பேரவை அமையும் பட்சத்தில் அணைத்து பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களும் தலைவர் பதவி இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அப்போதுதான அனைவரும் பங்கெடுப்பதால் அந்த அணி வலுப்பெறும். மருத்துவர் அய்யா ஆரம்பித்து பிறகு அவர் மட்டுமே அல்லது அவர் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே தலைவராக விரும்பியதால் அந்த அணி வலு இழந்தது.
ReplyDeleteஅவரு, மனநோயாளி ஐயா இதலாம் பெருசா எடுக்க வேண்டிய தேவை இல்லை!! அவரை சொன்னார் யாரை அழைத்தாலும் கருனாநிதியை அழைக்ககூடாது என்று
ReplyDeleteஏன் திராவிடர் முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்???
ReplyDeleteநான் ஏன்? திமுகழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்றால், திரு.சோ அவர்கள் மரனபடுக்கையில், இருந்து தப்பி பிழைத்து வந்ததும் அவர் சொல்கிறார் திமுக ஆட்சியினை பிடிக்ககூடாது என்று!! இந்த ஒரு காரணம் போதாதா!! ஏன் இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என சொல்வதற்க்கு! இன்னும் சொல்லபோனால் திமுகழகம் முழுமையாக திராவிட சித்தாந்தத்தை கடைபிடிக்கிறாத? என்ற விவாதம் இருக்கு நிலையில் கூட அவாள் அப்படி சொல்லவதே திமுகவுக்கு! ஏன்? வாக்கு அளிக்க கூடாது என தோன்றுகிறதே அண்ணா
Delete