தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 29 June 2017

கவனம் தோழர்களே!

                               


சில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலையொட்டி, எஸ்.வி.சேகரின் காணொளி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக அவருக்கு நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர், பத்திரிகை.காம் இணையத்தளத்தில் கூறியிருந்த பகிரங்க பதிலும் அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு இடம்பெறுகின்றது.


என்னுடைய மடல் சமூக அரசியல் தளத்தில் நின்று பல செய்திகளைப்  பேசியது. ஆனால் அதற்குவிடையளித்த அவரோ, பல்வேறு தனிமனிதத் தாக்குதல்களை என் மீது  தொடுத்திருக்கிறார். அரசியலற்ற தனிமனிதச் சண்டைகளில் ஈடுபட எனக்கு எப்போதும்  விருப்பமில்லை. எனவே இனிமேல் அவருக்கு மறுமொழி கூறிக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிட்டு, சமூக நீதியில் அக்கறை கொண்ட மக்களுக்கான விளக்கமாய் இந்தப் பதிவை நான் பொதுவெளியில் முன்வைக்கின்றேன்

"சாதி மதம் என்பது அவரவருக்குத் தாய் தந்தைதான். அதாவது தாய் தந்தை இருப்பவர்களும், மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்" என்று சே.வி சேகர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய சாதிப்பற்றை இதனை விடத் தெளிவாக வெளிப்படுத்த முடியாது. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டமைக்கு அவருக்கு நம் நன்றி.

99 சதவீதம் மதிப்பெண் (முதலில் 99.9 சதவீதம். இப்போது அது 99 ஆகக் குறைந்துவிட்டது) பெற்ற பிராமண மாணவர்களுக்கு இடம் இல்லை என்று நான் சொன்னது உண்மை என்று மறுபடியும் கூறியுள்ளார். இது கலப்படமற்ற பொய் என்பதற்குப் பெரிய சான்றுகள் தேவை இல்லை. எந்த ஒரு கல்வி நிலையத்தின் புள்ளி விவரத்தை எடுத்தாலும் உண்மை புலனாகும்.

"எங்கள் மூதறிஞர் ராஜதந்திரி ராஜாஜி அவர்கள் சொன்னதால்தான் பிராமணர்கள் ஒட்டு போட்டு முதன்முதலாக திமுக ஆட்சி அமைந்தது" என்று எஸ்.வி.சேகரால் கூசாமல் எழுத முடிகிறது. அப்படியானால், ராஜாஜி திமுகவைக் கடுமையாக எதிர்த்த 1971 ஆம் ஆண்டு  மாபெரும் வெற்றியைத் திமுக பெற்றதே எப்படி?

"பார்ப்பான் என்ற வார்த்தைப் பிரயோகமே தவறு என்று நாங்கள் சொல்கிறோம். பிராமணர் என்று பொதுவெளியில் நாகரிகமாக அழைக்க விருப்பம் இல்லாத மதியில்லாதவர்தான் உங்கள் மதிமாறன்"  என்பது சேகரின் கூற்று.  'பார்ப்பனர்என்பது வசைச் சொல்லோ,ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் சொல்லோ அன்று. அவ்வாறு எவர் ஒருவரையும் வாசை பாடுதல் நம் பழக்கமும் அன்று. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்று கூறப்படுவதை போல, குறி பார்ப்போர், கணி (சோதிடம்) பார்ப்போர்,  பார்ப்பார், பார்ப்பனர் என்று சங்க காலம் தொட்டு அழைக்கப்பட்டனர். அதனால்தான் அந்தச் சொல்லை அவ்வையார், போன்ற புலவர்களே சங்க இலக்கியத்தில் பயன்படுத்தியுள்ளனர். "ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் சொரிந்து" என்கிறது அவ்வையின் பாடல் (புறநானூறு - 367). வள்ளுவரும் ஒரு குறளில் "மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்/ பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்" என்கிறார். எங்கள் பாரதி, எங்கள் பாரதி என்று சேகர் போன்றவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பாரதியார், ஓரிடத்தில், "நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்" என்கிறார்.இன்னொரு இடத்தில், மிகக் கடுமையாக, "சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி" என்கிறார். அவ்வை, வள்ளுவர்,  பாரதியார் எல்லோருமே மதிமாறனைப் போல மதியில்லாதவர்கள்தானா

பிராமணன் என்று எம் போன்றவர்கள் குறிப்பிட மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. அச்சொல்லுக்குப்  பிரமனில் இருந்து உதித்தவன் என்று பொருள். பிரம்மனையே  நம்பாத நாங்கள், பிராமணனை எப்படி ஏற்போம்? பிரமனை நம்புகிறவர்கள் கூட ஒரு வினாவைத் தொடுக்க வேண்டும். 'நீங்கள் பிரம்மனிடமிருந்து வந்தவர்கள் என்றால், நாங்களெல்லாம் எங்கிருந்து வந்தவர்கள் என்று கேட்க வேண்டாமா?

எனக்கு ஸ்டாலின் நண்பர், 2010 முதல் மோடியும் நண்பர் என்கிறார் சேகர். இப்போது என் தம்பி மனைவிதான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். அதிகார மிரட்டல் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள். நியூஸ்7  தொலைகாட்சி நெறியாளருக்கும் ஒரு மிரட்டல் அவரின் பதிலில் உள்ளது. அதன்மூலம், இனி எல்லா ஊடகங்களும், ஊடக நெறியாளர்களும் எங்களுக்குப் பயந்து, எங்களுக்குச் சாதகமாகத்தான் பேச வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் அவர்

சேகரின் கடிதத்தின் அடித்தளமாக ஒரு விருப்பம் இடம்பெற்றுள்ளது.  எப்படியாவது திமுகவினர் என்னை வெளியே தள்ளி விட வேண்டும் என்பதுதான் அது. கழகத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றும், கழகத் தலைமை என்னிடம் கொண்டுள்ள அன்பும்  'சேகர்களைமிகவும் துன்பப்படுத்துகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  'என் நண்பர்' என் நண்பர்' என்று கழகச் செயல் தலைவர் குறித்து அடிக்கடி குறிப்பிடுகின்றார். ஆனால் 2ஜி தீர்ப்புக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்று போகிற போக்கில் எழுதுகிறார். 'தன் நண்பர்' மீது அவர் கொண்டுள்ள நட்பின் 'லட்சணம்' இதுதான்

இறுதியாக, என் மீது கூறப்பட்டுள்ள சில அவதூறுகளைப் பற்றிச் சில வரிகள் -  என் முதல் மகனுக்கும், இரண்டாவது மகனுக்கும் சொந்த சாதியிலேயே பெண் எடுத்துள்ளேன் என்று வாட்ஸ் அப்பில் வந்துள்ளதாம். அதனை மேற்கோளாகக் காட்டிவிட்டு, 'ஊருக்கு மட்டுமே உபதேசமா? என்று கேட்டுள்ளார். ஒன்றை எழுதுவதற்கு முன் அந்தச் செய்தி உண்மைதானா  என்று சரி  பார்த்து எழுதுவது பொறுப்புள்ளவர்களின் கடமை.  அதை எஸ்.வி.சேகரிடம் எதிர்பார்க்கக் கூடாதுதான்! எனக்கு இரண்டில்லைமூன்று பிள்ளைகள். மூவரும் எந்தெந்தச்  சாதியில்  திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர் விசாரித்துத் தெரிந்து கொள்ளட்டும்

'வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராக' இருந்ததாகப்  படித்தாராம். நண்பர் அவர்களுக்கு 'அறிவு நாணயம்' இருக்குமானால், இதனைச் சான்றுகளோடு மெய்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.  

இந்த அவதூறுகள் குறித்தெல்லாம் நாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கு வேலை இருக்கிறது நிரம்ப! அதில் கவனம் செலுத்துவோம். இருப்பினும், எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்குப் பின்னால் இருக்கிற வன்முறைக் கும்பல், மதிமாறன் போன்ற தோழர்களின் மீது 'குறி' வைக்கிறதோ என்ற ஐயம் மட்டும் என் நெஞ்சில் ஆழமாக இருக்கிறது. கவனம் தோழர்களே!


20 comments:

  1. Its because of warriors like you, people like me transcended until here. we know the arduous struggles & harder obstacles faced by Dravidian Movements for us, they're ineffable. We will attain the much needed society based on equality & Independence free from all the social evils contrived by these existential deadly forces. We will win sir...

    Long Live Social Justice, Equality & Human Fraternity !!

    ReplyDelete
  2. பிணம் தின்னும் கழுகுகள்
    பாெய் மட்டுமே பேசும் பூநூல்கள்
    ஒதுங்கிசெல்வாேம் இவை கழிவுகள்

    ReplyDelete
  3. தேர்தலில் ஒரே ஒரு தாேல்வியை கண்டாலே காணாமல் பாேகக்கூடிய காளான்கள் இந்த ஆட்டம்
    பாேடக்காரணமே நம்மில் உள்ள துகேிகள்தானே

    ReplyDelete
  4. இதையும் கடந்து பாேவாேம்

    ReplyDelete
  5. உமிழ்நீர் பசங்க இப்படி தான் அய்யா பேசுவார்கள். நம் தோழர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் எச்சரிக்கைபடுத்தவும் வேண்டும்.....

    ReplyDelete
  6. அய்யா இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் எல்லாம் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான மக்களின் மனதில் கொழுந்து விட்டு எரியும் உணர்வு கோர்வைகள்தான். உண்மையில் இந்த கட்டுரையை பாடப்புத்தகமாக மக்கள் அனைவருக்கும் படிக்க தரவேண்டும். ஒரு சிறு கருத்து கூறவிளைகிறேன்.தாங்கள் பயன்படுத்தி இருக்கும் Fonts எழுத்துரு அவ்வளவு தெளிவானதாக தெரியவில்லை. இதை மீள்பதிவு செய்ய விளைபவர்களுக்கு இலகுவானதாக இருப்பதில்லை. அடியேன் எனது blog இல் இதன் எழுத்துருவை மாற்றி மீள்பதிவு செய்துள்ளேன். நன்றிகள் உரித்தாகட்டும்

    ReplyDelete
  7. ஐயா, எஸ் வி சேகரின் பதில் லிங்கை(பத்திரிகை.காம்) கட்டுரையில் சேர்க்கவும் ...தேடிக் கிடைக்கவில்லை ....

    ReplyDelete
    Replies
    1. றெம்ப மிக்கியம் அந்த குப்பை

      Delete
    2. நான் பல முறை முயற்சித்தும் -பத்திரிகை .kom- சரியாக பரர்க முடியாமல் உள்ளது .

      Delete
  8. Sir

    We must be careful with these kind of "Jathi veri puditha animals". But, We should not stop fighting for social justice.

    Regards
    Paul

    ReplyDelete
  9. They never believe/do healthy discussions. Their mind and Ideology never go in a right way...It will show wat they are and wat they do...

    ReplyDelete
  10. எஸ்வீசேகர் ஏன் இப்படி எழுதினார் என ஒரு நண்பனாக வருந்துகிறேன் இத்தனை க்கும் சுபவீ அண்ணனை நன்கு புரிந்தவர் ஆனாலும் ஆத்திரம் அரை தடுமாற வைத்து விட்டது தன் சாதி பாசம் இருப்பதைவைத்து காெ ள்ளட்டும் ஏன்பாெ ய்யை பாெ ய் என அறிந்தும் எழுதினார் வேதனையாக உள்ளது நண்பா

    ReplyDelete
  11. These letters are addressed to Mr. S. Ve. Sekhar and Mr. Suba. Veerapandian. I have also pasted these letters under the relevant Patrikai.com post, in the hope that Mr. S. Ve. Sekhar too will see them.

    To Mr. Sekhar:

    Sir,

    Your reply to Mr. Suba. Veerapandian's letter contains certain indecorous remarks for which, in my view, you must apologise unconditionally to him. You have likened his response to the performance of 'record dance' artists. Ideally, you should not disparage such poor artists themselves, whose economic circumstances compel them to make a living by such means. Using them as an analogy to attack Mr. Veerapandian is even worse.

    In a recent twitter post, you have declared that henceforth Suba. Veerapandian will be called as 'Asuba. Veerapandian'. Inadvertently, you have also maligned his father by that remark. For that remark too, you must tender an unconditional apology.

    As far as BJP's Narayanan's conduct in that TV programme is concerned, my view is this. His conduct was deplorable. It only revealed a deep-seated insecurity and fear that if the viewers heard Mathimaran's views, they might be persuaded to accept his point of view. I am reminded of the famous words of John Stuart Mill,

    "If all mankind minus one, were of one opinion, and only one person were of the contrary opinion, mankind would be no more justified in silencing that one person, than he, if he had the power, would be justified in silencing mankind."

    The kind of censorship that Narayanan tried to impose will not work. No amount of political or social power can stop the spread of views disagreeable to a section of the people, especially in this internet age.

    All the best to you in your good aims and work.

    Regards,

    Suresh

    To Mr. Suba. Veerapandian:

    Sir,

    Mr. S. Ve. Sekhar was right when he said that he only asked if any FIRs were filed against Brahmins in casteist crimes. Since you insist on factual accuracy and doing proper research, you should have corrected yourself in your rejoinder and conceded that Mr. Sekhar was right on that point.

    As far as the word "Paarpaan" is concerned, you have clarified with many references that it is not a derogatory term. But I wonder if you will deny it when I say that the constant verbal attacks made by the followers of Periyar against Brahminism and the Brahmin caste have painted that word with a derogatory colour and created a general impression that the word is only used to malign the Brahmins.


    All the best to you in your good aims and work.

    Regards

    Suresh

    ReplyDelete
  12. சுப வீ அண்ணா இந்த கட்டுரையை படிக்கும்போது ஒரு முறை நீங்கள் விவாதத்தில் சொன்னதுதான்
    எனக்கு நினைவிற்கு வருகிறது
    ஒரு எதிர் தரப்பு நபர் சொன்னாராம் நீங்கள் மிக அதிகமாக பேரறிஞர் அண்ணாவை படித்தது மட்டும் அல்ல பின்பற்றவும் செய்கின்றீர்கள் அதனால்தான் இவ்வளவு மென்மையாகவும் மேன்மையாகவும் உங்களால் பேசமுடிகிறது இவ்வளவு மென்மையாக இருக்காதீர்கள் என்று,

    நான் உங்களை விட வயதில் மட்டுமல்ல உங்களின் அறிவிலும் ஆற்றலையும் நெருங்க முடியாதவன்,
    ஆனால் உங்களை நான் என் அண்ணன் என்று உரிமையோடு அழைக்கிறேன் காரணம் நீ எம் திராவிட இனத்தின் காக்கவந்த காவலன்

    ReplyDelete
  13. 99 % மதிப்பெண் எடுத்தும் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால் எப்படி நீதித்துறை, மருத்துவத்துறை, ஏனைய அரசுத்துறைகள் எல்லாவற்றிலும் உயர் பதவிகளை அவா ஆக்கிரமித்துல்ளார்களே எப்படி ?

    ReplyDelete
  14. நீங்கள் சொன்னது சரியே.... இந்த அவதூறுகள் குறித்தெல்லாம் நாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கு வேலை இருக்கிறது நிரம்ப! அதில் கவனம் செலுத்துவோம்.

    ReplyDelete
  15. இந்த fwd செய்தி பல விஷயங்களை சொல்கிறது

    *ஆங்கிலேயரும் பார்ப்பனியமும்*

    1200 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!

    ஏன் 150 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?

    1200 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைபடுத்திய இந்து மனுதர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை.

    ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்.

    அவை நாம் என்னவென்று பார்ப்போம்...

    பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது.

    சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

    1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது

    1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது
    பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும். (இந்து மனு சட்டம் IX 178) பிராமணன் தப்புசெய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
    பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது.

    சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

    பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

    சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளிவிட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

    1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.

    1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.

    இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை,

    *சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

    ReplyDelete
  16. திரு சுப வீ அவர்களுக்கு,

    வணக்கம். அன்று மதிமாற்ன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்.அவர் ஒன்றுன் தவறாக நடந்து கொள்ள்வில்லை. சமீப காலமாக தொலைககாட்சி விவாதங்களில், பாஜக சார்பாக கலந்துகொள்ளும் நபர்கள் (நாராயணன், கோ டி ராகவன், சேகர்(2) விதம், அந்த கட்சியின் நிலப்பாடு பற்றி பேசாமல் பார்பண தீமிரோடுதான் பேசி வருகின்றனர். பார்பான் எஸ் வி சேகர், எந்த நிகழ்சியில் கலந்த கொண்ட்டாலும் பார்பண குறியிடான பூனூல் தெறியும் படி சட்டை பொத்தானை கழற்றிவிடுக்கொவார். தற்பொழுதுதான் மீடியாவில் பார்பண ஆதிக்கம் குறைந்துள்ள்து. தற்பேதைய தேவை தமிழ் தேசியம் பேசுபவர்கள் மற்றும் தமிழ் பற்று உள்ளவர்கள் இந்த பார்பண கூட்டத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  17. திராவிட தம்பி (10)
    #தேசியம் - #இந்துத்வான்னா என்னங்க பொருள் ?
    (புத்திசாலின்னு நினைத்து புலம்பும் ஆரிய கூத்தாடிகளின் பார்வைக்கு )
    நாடு முழுவதும் மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு தமிழ் நாட்டில் மட்டும் மூட சொல்வது
    மாட்டை கொல்லக்கூடாது என்று சொல்லி விட்டு பல கோடி மதிப்பில் மாட்டுக்கறியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது
    பாகிஸ்தான் மீது வெறித்தனமாக எதிர்ப்பை தூண்டி விட்டுவிட்டு பாகிஸ்தான் சென்று பாக் அதிபர் தாயார் காலில் விழுவது
    பீப்பாய் கச்சா எண்ணை உலக அரங்கில் 125 டாலரில் இருந்து 30 ரூபாய்க்கு குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுப்பது
    விமான எரிபொருளை 82000 ரூபாயில் இருந்து 45000 ரூபாயாக குறைத்துவிட்டு ஏழை நடுத்தர மக்கள் பயன்படுத்தும் எரிவாயு விலையை தாறுமாறாக உயர்த்துவது
    எல்லையில் வீர்கள் கொன்று குவிக்கப்படும் நிலையில் உலக நாடுகளுக்கு உல்லாச பயணம் செல்வது
    இந்திய தமிழ் மீனவர்களை கொன்று குவித்த நாட்டை நட்பு நாடு என்று புகழ்வது
    வறுமையில் போராடும் விவசாயிகளை சந்திக்க மறுப்பதும் நடிகைகளை உடனடியாக சந்திப்பதும்
    இந்துக்கள் எல்லோரும் சமம்னு சொல்லிக்கொண்டே ஒரு பிரிவை மட்டும் கோவில் கருவறைக்குள் அனுமதிப்பது
    முத்தலாக் பற்றி பேசிக்கொண்டே ஒரு தலாக்கும் சொல்லாமல் மனைவியை தவிக்கவிட்டு விட்டு ஓடுவது
    மாட்டை காக்கிறேன் பேர்வழின்னு சொல்லிட்டு மனிதனை கொன்று பெண்களின் தாலி அறுப்பது
    இந்தியன் - தேசியம் - இந்துத்வா என்று சொல்லிக்கொண்டே அன்னியமுதலீடுகளுக்கு நாட்டை கூவி கூவி விற்பது
    வெளிநாட்டில் பதுங்கி உள்ள பணத்தை மீட்டு 15 லட்சம் தருவேன்னு புளுகி விட்டு சொந்த பணத்தை எடுக்கவே கூட விடாமல் அலையவிடுவது
    திராவிடத்தை கிண்டல் செய்தபடியே திராவிட பெயரில் இயங்கும் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராவது
    இப்படி எல்லாம் கூசாமல் நடப்பதற்கு பெயர்தான் #தேசியம் - #இந்துத்வான்னு சொல்றாங்கப்பா
    இரணியல் இளையரவி

    ReplyDelete
  18. This matter has received a fresh response from S Ve Sekhar in an interview:

    https://www.youtube.com/watch?v=UuMujXaasnY

    He calls Subavee his friend. But he has used personal attacks in his open letter, which is really shameful.

    ReplyDelete