தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 11 December 2011

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல்


கேரள, மத்திய அரசைக் கண்டித்து 
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில்

டிசம்பர் 17இல் ஆர்ப்பாட்டம்!

(கன மழை காரணமாக டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 17க்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது)முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. கேரள அரசின் தவறான போக்கினாலும்,முடிவெடுக்க முடியாத மத்திய அரசின் மந்தப் போக்கினாலும், இரு மாநில மக்களுக்கு இடையிலான மோதலாக இன்றைய சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. கேரளாவில் வாழும் தமிழர்களும், ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழ்ப் பக்தர்களும் தாக்கப்படுகின்றனர். பொறுமை இழந்த தமிழகத்தில் இப்போது சில எதிர் வினைகளும் தொடங்கி உள்ளன. இம்மோதல் போக்கு தொடருமானால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதைக் கேரள அரசு உணர வேண்டும்.

1886ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி 999 ஆண்டுகளுக்குத் தமிழகம் பெரியாறு நீரைப் பெரும் உரிமை உடையது.  அவ்வுரிமையைக் கேரளம் மறுக்குமானால், தமிழகத்திலிருந்து கேரளத்திற்குச் செல்லும் இறைச்சி, அரிசி, காய்கனிகள் அனைத்தையும் தடுத்துச் சாலை மறியல் செய்ய வேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கு நேரும். பிறகு, தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ வேண்டிய நிலை கேரள மக்களுக்கு ஏற்படும்  என்று எச்சரிக்கிறோம்.

இச்சூழலில், கேரள அரசைக் கண்டித்தும், ஏதொன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், 15-12-2011 வியாழன் காலை 11 மணிக்கு சென்னை, சைதை, பனகல் மாளிகை அருகில், தோழர் சுப.வீரபாண்டியன் தலைமையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இன உணர்வும், நியாய உணர்வும் கொண்ட அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment