சில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலையொட்டி,
எஸ்.வி.சேகரின் காணொளி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக அவருக்கு நான் எழுதியிருந்த
திறந்த மடலும், அதற்கு அவர், பத்திரிகை.காம் இணையத்தளத்தில் கூறியிருந்த பகிரங்க பதிலும் அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாகவே
இந்தப் பதிவு இடம்பெறுகின்றது.
Labels
- அரசியல்
- இலக்கியம்
- ஒரு நிமிடச் செய்திகள்
- சமூகம்
- தொலைக்காட்சி
- நடப்பும் எதிர்வினையும்
- பகிர்வு
- புத்தகப் பட்டியல்
- பொது
- வேறு தோட்டத்துப் பூக்கள்
Showing posts with label நடப்பும் எதிர்வினையும். Show all posts
Showing posts with label நடப்பும் எதிர்வினையும். Show all posts
Thursday, 29 June 2017
Tuesday, 27 June 2017
நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு,
வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே
இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன்.
நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் இருவருக்குமிடையே
சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின் அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்த தொலைக்காட்சி
நிகழ்வை நானும் பார்த்தேன்.
Sunday, 18 June 2017
Saturday, 25 March 2017
இளையராஜா கேட்டதில் என்ன தவறு?
Monday, 13 March 2017
ஒரு மறுப்பு
12.3.17 ஆம் நாளிட்ட ஜூ.வி. இதழில், "திராவிட ஆட்சி 50 ஆண்டுகள்" சிறப்புக்
கட்டுரைகள் பகுதியில், பத்திரிகையாளர் சுப்பு,
"கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது , திண்ணியம்
என்ற ஊரில், பஞ்சாயத்துத் தலைவரின் ஊழலைப் பற்றிக் கேள்வி
கேட்டதற்காக, ஏழை தலித் ஒருவர், மனித
மலத்தை உண்ணும்படி தண்டிக்கப்பட்டார்" என்று எழுதியுள்ளார்.
தி.மு.க.வின் மீது பழி போடவேண்டும் என்று காத்திருக்கும் சுப்பு போன்றவர்கள், அந்த
நோக்கில் உண்மைக்கு மாறான எந்த ஒன்றையும் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் இந்த வரிகள் காட்டுகின்றன. திருச்சிக்கு அருகில் உள்ள திண்ணியத்தில் அந்தக்
கொடுமை நடைபெற்றது 2002 ஆம் ஆண்டு மே மாதம். அப்போது கலைஞரா முதலமைச்சராக இருந்தார்?
2001-06 காலகட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்பது அவருக்குத்
தெரியாதா? உண்மைகளை இப்படி அப்பட்டமாகத் திரித்துப் பேசும்
இவர், "மூத்த பத்திரிகையாளராம்". நல்ல கூத்து!
Sunday, 5 March 2017
இவரல்லவோ உத்தமர்!
நியூஸ் 18 தொலைக்காட்சியில்
04.03.2017 இரவு 10 மணிக்கு, சாமியார் ஜக்கி வாசுதேவின் நேர்காணல் ஒளிபரப்பாயிற்று. வினாக்களைத்
தொடுப்பதில் தனக்கென்று ஒரு பாணி வைத்திருக்கும் கண்ணன் கேள்விகளைத் தொடுத்தார்
இணையத்தள இணைப்பில் ஏற்பட்ட
சிக்கல் காரணமாக, முதல் அரை மணி நேரம் மட்டும்தான் பார்க்க முடிந்தது. அடடா, சாதுவின்
முகத்தில்தான் எவ்வளவு கோபம்! என்னை ஏன் ஜக்கி என்று அழைக்கிறீர்கள் என்று
கேட்டார், ஜக்கி. இல்லை, ஜக்கி அவர்கள் என்றுதானே சொல்கிறேன் என்றார் கண்ணன். அதெல்லாம் வேண்டாம்,
சதகுரு என்று அழையுங்கள் என மரியாதையை கேட்டு வாங்கி கொண்டார்
ஜக்கி. வெளிநாட்டிலிருந்து வந்தால் போப் என்கிறீர்கள், பாதர்
என்கிறீர்கள், என்னை மட்டும் ஏன் ஜக்கி என்று கூற வேண்டும்
என்று சினம் பொங்கப் பேசினார்.
Tuesday, 28 February 2017
நெடுவாசல் போராட்டம்
அரசோ, அதிகாரமோ யாராயிருந்தாலும் இனி
எதனையும் உடனே
முடிவெடுத்து விட
முடியாது என்கின்ற அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்ச்சி பெருகியுள்ளது என்றே
கூற
வேண்டும். அதற்கு
நெடுவாசல் இன்னொரு எடுத்துக்காட்டாய் எழுந்து நிற்கின்றது.
மக்கள் திரண்டு போராடுகின்றனர். அரசியல் கட்சிகள் ஆதரவு
தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் அங்கு
கூடுகின்றனர். இரண்டு
மூன்று
நாள்களாய் எல்லாச் சாலைகளும் நெடுவாசல் நோக்கியே நீள்கின்றன.
Sunday, 19 February 2017
Wednesday, 1 February 2017
கண்டன ஆர்ப்பாட்டம் 04-02-2017
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில்
'தமிழ்ப்
பொறுக்கிகள்' என்று தொடர்ந்து எழுதிவரும்
சு.சாமியைக்
கண்டித்துக்
கண்டன
ஆர்ப்பாட்டம்
-------------------------------------------------------------------------------------------
நாள்;
04.02.2017 சனிக்கிழமை
காலை 10.30 மணி
இடம்:
வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை
தலைமை: தோழர்
சுப . வீரபாண்டியன்
---------------------------------------------------------------------------------------
தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஏறு தழுவுதல்
(சல்லிக்கட்டு) விளையாட்டு நடைபெற அனுமதி கோரி, ஒரு வார காலம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை நாடு அறியும். அவர்களின் கட்டுக்கோப்பான போராட்டத்தைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். அவ்வாறிருக்க பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த
சு.சாமி மட்டும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவர்களைத் 'தமிழ்ப் பொறுக்கிகள்' என்று எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் சார்ந்துள்ள இந்தியாவின் ஆளும் கட்சியான பா.ஜ.க. இன்றுவரை
அவரைக் கண்டித்து ஒரு சொல்லும் சொல்லவில்லை.
Friday, 27 January 2017
Subscribe to:
Posts (Atom)