தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 25 March 2017

இளையராஜா கேட்டதில் என்ன தவறு?


        தன்னுடைய பாடல்களை மேடையில் பாடினால் அதற்குரிய உரிமத் தொகையைத் தனக்குத் தர வேண்டும் என்று கேட்டு,  புகழ் பெற்ற  திரையிசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட சிலருக்குச் சென்ற வாரம், இளையராஜாவின் அலுவலகத்திலிருந்து அறிவிக்கை (நோட்டீஸ்) அனுப்பப்பட்டுள்ளது.  அது குறித்த வாதங்களும்,, எதிர் வாதங்களும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.  

இன்று மாலை சந்தித்த நண்பர் ஒருவர், "எனக்கும் இளையராஜா பாடல்கள் பிடிக்கும். ஆனால் ஏன் சார் அவர்  இப்படிப் பண ஆசை பிடித்து அலைகிறார்?" என்று கேட்டார். அவர் சொந்தத் தம்பி கங்கை அமரன் கூட இப்படித்தான் ஊடகத்தில் சொல்லியிருந்தார்.

ஏதோ முற்றும் துறந்த முனிவர்களாக எல்லோரும் இந்த உலகில் வாழும்போது, , இளையராஜா மட்டும் பண ஆசை பிடித்து அலைவதைப் போல மக்கள் எண்ணுவது வியப்பாக உள்ளது. இளையராஜா தரப்பில் இருந்து வந்துள்ளா ஒரு வாதத்தை நாம் கவனித்துப் பார்க்க வேண்டியுள்ளது.  "சாதாரண இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடும் எளியவர்களிடமோ, நாட்டு நன்மைக்காக வணிக நோக்கம் ஏதுமின்றிப் பாடும் பாடகர்களிடமோ உரிமத் தொகை எதனையும் நாங்கள் கோரவில்லை. பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்துவோரிடம்தானே பணம் கேட்கிறோம்!" என்கின்றனர். 

சற்று அமைதியாக எண்ணிப் பார்த்தால், இளையராஜாவின் கோரிக்கையில் உள்ள நியாயம் புரியும். எஸ்.பி.பி போன்ற உலகப் புகழ் பெற்ற பாடகர்களின் இசை நிகழ்ச்சிக்கு வாங்கப்படும் தொகை எவ்வளவு என்று கேட்டறிந்தால், இளையராஜா கேட்பதில் என்ன தவறு என்றுதான் தோன்றும்! 

தன் சரக்கை வைத்து இன்னொருவர் வணிகம் செய்யும்போது, தனக்கும் அதில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் எந்தக் குற்றமும் இல்லை. 


8 comments:

 1. இந்த விஷயத்தில் இளையராஜா பெற்றதை விட இழந்தது அதிகம்.
  1) 50 ஆண்டு கால நண்பரை இழந்தார் .
  2) பொதுமக்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்து கொண்டார்.
  3)அவருடைய பாடல்கள் ஒரு பெட்டிக்குள் அடங்கும் அபாயத்தையும் விளைவித்து கொண்டார்.

  அவர் உரிமையை கேட்டதில் தவறு இல்லை . அவர் கையாண்ட உத்தி தான் தவறு.

  IPRS என்ற நிறுவனம் தான் இந்தியா அளவில் ராயல்டி தொகையை வசூல் செய்து கொடுக்கும் நிறுவனம் .
  ஆயிரம் இடங்களில் நடக்கும் இசை நிகழ்ச்சைகளை தனி மனிதனால் கண்காணித்து பணம் வசூல் செய்ய முடியாது . ஒரு அமைப்பைத்தான் நம்பி இருக்க முடியும்..அந்த அமைப்பை அவர் வலிமை படுத்த முனைந்து இருக்க வேண்டும் . மாறாக அவரே இந்த வேலையை செய்ய முனைந்ததால் மேற்சொன்ன விளைவுகள் ஏற்பட்டன .

  மொத்தத்தில் அவர் ஒரு Lose - Lose agreement தான் அடைந்தார் .

  ReplyDelete
  Replies
  1. அந்த அமைப்பில் நடந்த குளறுபடிகளை களைய முயற்சி செய்து, தோற்றுதான் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்

   Delete
 2. I really accept your intention but the way in which Isaignani claiming is breaking the cordial relationship of good old friendship.This should have been dealt with in them amicably.

  ReplyDelete
 3. என்னதான் நம் கூடயே இருந்தாலும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழையும் தமிழர்களையும் ரசிக்க மாட்டார்கள். ஒரு போட்டி உணர்வு இருக்கும். இந்த விஷயத்தில் மலையாளிகள் நம் ரசனையை பாராட்டுவார்கள. சமீபத்தில் கொச்சி போய் இருந்த போது கால் டாக்சியிலும் ஹோட்டலிலும் ஒலித்துக்கொண்டிருந்த ராஜாவின் இசை தமிழனாக என்னை பெருமை கொள்ள வைத்தது. எஸ்பிபி எத்தனையோ ஹிட் பாடல்களை இசை ஞானியின் இசையில் பாடிவிட்டு மலரே மௌனமா பாடல்தான் தனக்கு விருப்பமான பாடல் என்றார் (வித்யாசாகர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்). அவருக்கு பிடித்த படம் கூட பாகுபலி என்றார். அவர்களுக்கு இடையில் நல்ல நட்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை. போட்டி இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். இசைஞானியின் இசையை நாம் ரசிக்கிற அதே வேளையில் அவரை சுற்றி உள்ளவர்கள் அவர் மேல் கொண்டது பொறாமை. கனிந்த மரம்தான் கல்லடி படும்.

  ReplyDelete
 4. I think the only reason you took this as an issue to support is coz Gangai amaran joined BJP. If he didnt you would aim for a different fruit !

  ReplyDelete
 5. இளையராஜா என்ன தவறு செய்தார்? எஸ் பி பி என்ன சரியா செய்தார்? யார் நட்பை யார் மதிக்கவில்லை?

  முன்பு ஒரு முறை கங்கை அமரனும் எஸ் பி பி யும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது கங்கை அமரன் எஸ் பி பி யிடம் நீங்கள் தமிழில் பாடுவதை விரும்புகிறீர்களா? தெலுங்கில் பாடுவதை விரும்புகிறீர்களா? என்று கேட்டார். கொஞ்ச நேரம் யோசித்த எஸ் பி பி தெலுங்கில் பாடுவதுதான் பிடிக்கும் என்றார். அதை நான் தெலுங்கு வெறி என்று எண்ணவில்லை ஆயினும் அவர் தெலுங்கில் பாடுவதில் அவருக்கு எவ்வளவு எளிதோ அவ்வளவு தமிழில் கடினம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் என்றே எண்ணினேன். அப்படி சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் சட்ட பாதுகாப்பு பெறப்பட்டு இருக்கும் இளையராஜாவின் பாடல்களை அனுமதி பெறாமல் இலாபநோக்கத்ததோடு பாடுவது என்று வரும்போது அதற்கு எஸ் பி பி உரிமை கொண்டவரா? இளையராஜா தமது பாடல்களின் மீதான உரிமையை காப்பி ரைட் சட்டப்படி பதிவு செய்திருக்கிறார். அதை எஸ் பி பி பெரிதாக எண்ணாமல் இருந்து இருக்கலாம். ஆனால் காப்பி ரைட் சட்டம் இளையராஜாவுக்கு அவருடைய அறிவு சொத்தான பாடல்களின் மீதான உரிமையை வழங்கி உள்ளது. அதை மதிக்கவேண்டும். இளையராஜா போட்டுத்தந்த மெட்டுக்கு ஏற்ப இசை கருவிகளை கொண்டு வாசித்தவர்களுக்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி அல்லது சம்பளம் கொடுத்தாகி விட்டது. அதைப்போலத்தான் எஸ் பி பி யின் இசை கருவியான அவருடைய குரல் எனும் இசை கருவிக்கு சம்பளம் அல்லது கூலி கொடுத்தாகிவிட்டது. அந்த வகையில் அந்த பாடல்களுக்கு முழுமையான உரிமையாளர் இளையராஜாவேதான். இளையராஜா மிகவும் தாமதமாகவே சட்டப்பாதுகாப்பை பெற்றுஇருக்கிறார். ஆயினும் அவ்வாறு பெறுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. சட்டப்படி காப்பி ரைட் செய்யப்பட்டுவிட்ட இளையராஜாவின் பாடல்களை சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு இளையராஜாவிடம் அனுமதி பெறாமலோ அவருக்கு ராயல்டி தராமலோ பணம் பெற்றுக்கொண்டோ அல்லது இலாப நோக்கம் கொண்டோ பாட எஸ் பி பி க்கு மாத்திரமல்ல வேறு யாருக்கும் சட்டப்படி உரிமை இல்லை. இளையராஜா எஸ் பி பி க்கு எதிராகவா ஓடி சென்று தனது பாடல்களுக்கு காப்பி ரைட் பெற்றார்? அவர் பெற்ற சட்டப்பாதுகாப்பு பொதுவானது. ஆதாயம் கருதி யார் பாடினாலும் இளையராஜாவுக்கு ராயல்டி தரவேண்டும். இந்தநிலையில் சட்டத்தை மீறி அமெரிக்காவில் பணத்துக்காக இளையராஜாவின் பாடல்களை உரிமை பெறாமலேயே எஸ் பி பி பாட போனது ஏற்புடையது அல்ல. ஒருவேளை பாடியிருந்தால் காப்பி ரைட் சட்டப்படி குற்றவாளியாகவே கருதப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆட்பட்டு இருப்பார். நிகழ்ச்சி நடத்துபவர்களுக்குத்தானே இளையராஜா நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் எஸ் பி பி ட்வீட் செய்து அனுதாபம் பெறுகிறார். இப்படி எஸ் பி பி அனுதாபம் பெற முனைந்ததில் இளையராஜாவுக்கு கேட்ட பேர் கிட்டியது. அதற்கே இளையராஜா எஸ் பி பி மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அப்புறம் மேடையில் யார் யாரோ நண்பன் என்கிற கமல்ஹாசன் நடித்த சிம்லா ஸ்பெஷல் பட பாடலை எஸ் பி பி பாடினாராம். அந்த வரியை மறுபடியும் மறுபடியும் அழுத்தி அழுத்தி பாடினாராம். இது தவறான வழியில் அனுதாபம் தேடும் தேடிய முயற்சிதான். எஸ் பி பி யிடம் நேர்மை இல்லையோ! நட்பு வேறு தொழில் வருமானம் இலாபம் என்பதெல்லாம் வேறு. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்வதாக எண்ணினாலும் நமது நாட்டு மக்களிடம் ஜனநாயகம் பற்றி போதிய அறிவு இல்லை என்பதைப்போலத்தான் காபி ரைட் சட்ட அறிவும் இல்லை.அது சரி, இளையராஜா எஸ் பி பி க்கு நேரிடையாக நோட்டீஸ் அனுப்பாதபோது எஸ் பி பி ஏன் ட்வீட் செய்து ஸீன் போட்டார்? இளையராஜா பக்கம்தான் நியாயம் உள்ளது. எஸ் பி பி ட்வீட் செய்தது தவறு. உள் நோக்கம் கொண்டது. யார் யாரோ நண்பனென்று என்கிற பாடலை எஸ் பி பி யை நினைத்து இளையராஜாதான் பாடவேண்டும். எஸ் பி பி அல்ல. இளையராஜாவின் நட்பை எஸ் பி பி தான் மதிக்கவில்லை.

  ReplyDelete