தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 27 January 2017

தமிழகத்திற்கு வந்த தலைகுனிவு


ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்றாலே ஒழுக்க சீலர்கள் என்று அவர்கள் பீற்றிக் கொள்வார்கள். அந்தக் கூற்றை அடித்து  நொறுக்கியிருக்கிறார், . மேகாலாயா  ஆளுநராக ஆக்கப்பட்ட மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான வி.சண்முகநாதன்.. 


2015 மே மாதம் மேகாலாயா ஆளுநராக மத்திய அரசினால் அமர்த்தப்பட்ட சண்முகநாதன், அதே ஆண்டு செப்டம்பர் முதல் அருணாச்சலப் பிரதேசக் கூடுதல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். அவர் மீது பாலியல் குற்றச்சாற்றுகளை அங்கு ராஜ் பவனில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இப்போது தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்குக் கடிதங்களை அவர்கள் அனுப்பியுள்ளனர்.  வேறு வழியின்றி சண்முகநாதன் தன் பதவியிலிருந்து விலகியிருப்பதாக நாளேடுகள் கூறுகின்றன. 

மேகாலயாவில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக, குடியரசு நாளில் அவர் அருணாச்சலப் பிரதேசத்தில் போய்க் கொடியேற்றி இருக்கிறார்.  பொதுவாக கூடுதல் ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் ஆளுநர்கள் கொடியேற்றுவதில்லை. தமிழ்நாட்டில் கூட, கூடுதல் ஆளுநரான  வித்யாசாகர் ராவுக்குப் பதிலாக, முதல்வர் பன்னீர்செல்வம் கொடியேற்றியதைக் கண்டோம். 

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இப்படி அம்பலப்பட்டு நிற்பதைக் கண்டு நாம் பெரிய மகிழ்ச்சி அடைய முடியவில்லை.  காரணம், அங்குள்ளவர்கள் தமிழர்களையும் தரக்குறைவாகத்தானே நினைத்திருப்பார்கள்! ஆம், சண்முகநாதன் தமிழ்நாட்டிற்கும் சேர்த்து ஒரு தலைகுனிவைக் கொண்டு வந்திருக்கிறார்.


வெட்கப்படுகிறோம்! 

3 comments:

  1. இந்திரனும் சந்திரனும் கெட்டது பெண் சபலத்தால்தான்.

    ReplyDelete
  2. பீஷ்ம நாராயணன் சிங் இதை விட மன்மத கடவுளாக தமிழ்நாட்டில் கோலோச்சினாரே?

    ReplyDelete
  3. Pasuthol porthi puli enbathu theriavanthullathu

    ReplyDelete