தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 18 June 2017

பாரதிராஜாவின் 'அரசியல்' புரிதல்


ஒரு துறையில் வல்லுனர்களாக இருப்பவர்கள் பிற துறைகளைப்  பற்றிப் பேசக்கூடாது என்பதில்லை. ஆனால் அப்படிப் பேசும்போது கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. பாரதிராஜா, இளையராஜா போன்றவர்களிடம் அந்த நிதானம் தவறிப் போவதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும்  ஒருமுறை அது நிகழ்ந்துள்ளது.


கடந்த வாரம், ஆனந்த விகடனுக்குப் பாரதிராஜா அளித்துள்ள நேர்காணலில் அரசியல் குறித்தும், தேசிய இனப் பிரச்சினை குறித்தும் பேசியுள்ளார். "ரஜினியின் பாதம் நல்ல பாதம். புல்வெளியில் நடக்க, பூக்களின் தோட்டத்தில் இருந்திருக்க, மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்திருக்க அவற்றைப் பயன்படுத்த வேண்டும்." அதை விட்டுவிட்டு, இந்த சாக்கடைக்குள் அரசியலுக்குள்) ஏன் காலை விட வேண்டும் என்று கேட்கிறார். அது மட்டுமல்லாமல், அரசியலில் நுழைந்து விட்டாலே, எந்த ஒரு நல்ல மனிதனும் கெட்டுப் போய்விடுவான் என்கிறார்.

இவ்வாறெல்லாம் அரசியல் குறித்துச் சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது.ஆனாலும் சில செய்திகளை அவர் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். அரசியலைத் தவிர நாட்டில் மற்ற துறைகள் எல்லாமே சரியாக இருக்கின்றனவா? திரைப்படத் துறையில் கெட்டவர்களே இல்லையா? ஒழுக்கக் குறைபாடு, கறுப்புப்பணம் பற்றியெல்லாம் திரைப்படத் துறையிலோ, வேறு துறையிலோ உள்ளவர்களுக்குத் தெரியவே தெரியாதா

புல்வெளியில் மட்டுமே நடக்கக்கூடிய பாதங்கள் கரடு முரடான பாதையில் நடக்க வேண்டுமா என்று கேட்பது வேறு, சாக்கடையில் நடக்க வேண்டுமா என்று கேட்பது வேறு

பெரியார், கருணாநிதி, வைகோ - இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை என்று சீமான் கூறுகின்றாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று இன்னொரு வினா  கேட்டுள்ளனர். சுற்றி வளைத்து  விடை சொல்லும் அவர், இறுதியில், "சீமான் சொல்வதில் தவறே கிடையாது" என்று முடிக்கிறார்

தன் கூற்றுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டையும் சொல்கின்றார். 'நான் 18 ஆண்டுகள்தான் தேனி  அல்லிநகரத்தில் இருந்தேன். 60 ஆண்டுகளாகச் சென்னையில் இருக்கிறேன். அதனால் நான் சென்னைக்காரன் ஆகி விடுவேனா? நான் அல்லிநகரத்துக்காரன்தானே!' என்கிறார்.தேசிய இனச்  சிக்கலை  இவ்வளவு மலிவாக எடை போட்டால் நாம் என்ன சொல்வது? முன்பு, பெரியார் தமிழர் இல்லை என்றார்கள். இப்போது அண்ணா, கலைஞர் யாருமே தமிழர் இல்லை என்கின்றனர். போகட்டும், ரத்தப் பரிசோதனை நிலையங்களைத் தொடர்ந்து அவர்கள் நடத்தட்டும். மரபு இனம், தேசிய இனம் குறித்த நீண்ட விவாதங்கள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை போன்ற மிக 'எளியவிளக்கங்கள் இன்னொரு பக்கம்  தரப்படுகின்றன

       இனப் பற்று, இன  உரிமை என்பன வேறு, இனவாதம் என்பது வேறு என்பதையெல்லாம் சீமானிடமிருந்து பாரதிராஜா கற்றுக்கொள்ள முடியாது.


7 comments:

  1. தாம் ஒரு துறையில் போற்றப்படுகிறோம் என்ற உடன் எல்லா துறைகளை பற்றிய கருத்து கூற முற்படுவதும், அதை ஏதோ ஒரு subject matter expert தன்னுடைய expert opinion அய் சொன்னது போல், ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதும் பரிதாபத்துக்குரியது.பாரதிராஜா என்ன political scientist ஆ என்ன.

    ReplyDelete
  2. Sir, 'திராவிட நாடு' என்ற Twitter tag பரபரப்பான போது,சென்னை ஐஐடி மாணவன் தாக்க பட்ட சம்பவம் நடந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது பினராயி விஜயன், 'மலையாளீ சூரஜ்' தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் கேட்டிருந்தார்.
    1. சூரஜ் 'மலையாளீ' என்று எந்த ரத்த பரிசோதனை நிலையத்தில் கண்டுபிடித்தார்?
    2. நீங்கள் தமிழ் தேசியத்திலுருந்து திராவிட அரசியலுக்கு வந்தீர்கள் என்று தெறியும். அது எந்த ரத்த பரிசோதனை நிலையத்து report அடிப்படையில் அந்த மற்றம் நிகழ்ந்தது?
    (https://twitter.com/CMOKerala/status/869592003717156864)
    (Sir, தங்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. எப்படி உங்களை தொடர்பு கொள்வதற்கு?

    ReplyDelete
  3. ஐயா, முன்பு ஜெயலலிதா ஆட்சியில் ஒரு சந்தர்ப்பத்தில் கலைஞரை who is he என்று பேசி தரம் தெரியாத பாரதிராஜாவுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்.

    ReplyDelete
  4. Frankly speaking we know about our forefathers only up to 3-4 generations and before that we don't know from where they had come and to whom they had born.

    The unique method is "those who are having interest and determination with faith on Tamil and Tamilians are acknowledged as Tamilians.

    For example Robert Kalledwel,GU.Pope etc.
    There are people in Tamil Nadu who are exercising with self interest by criticizing the well established personalities with filthy words for their own self advancement.These Aristatiles can not with stand any tests like Emergency imposed by Mrs.Gandhi.

    ReplyDelete
  5. Bharathi Raja son married a keralite girl and what we can identify and name their offspring.

    ReplyDelete
  6. என்னை பொறுத்தவரை இப்போதெல்லாம் கம்யூனிசம் மட்டுமே அனைவரது வாழ்க்கையிலும் ஒளியேற்றும் என்று நம்புகிறேன். ஆனால் அங்கும் கூட சரியான தலைவர்கள் இல்லாமல் பிரகாஷ் காரத் போல அதிகார வர்க்கத்தின் ஆட்கள்தான் உள்ளனர். கம்யூனிசம் மூலமாக எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிறது. அதற்கு உதாரணமாக சைனாவை பார்க்கிறேன். நான் மட்டுமல்ல உலகமே சைனாவை உற்று நோக்குகிறது. அதிவேக ரயில்கள் மட்டுமல்ல ஃப்ரான்ஸ்ஸில் நடைபெற்ற உலகவெப்பமயமாதலுக்கு தீர்வாக நிலக்கரி பயன்பாட்டை அடியோடு நிறுத்தவும் சைனா ஒத்துக்கொள்கிறது. சைனாவின் தலைமையில் உலகமே வளர்கிறது. இங்கு வருவோம். பாரதிராஜா ,சீமான் அவர்களின் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும்(கலைஞர் போன்ற சிலரை தமிழர் அல்லாதவர் என்று அவர்கள் சொல்லும்போது) சில கேள்விகள் எழுகின்றன. திமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏன் வெளி மாநிலத்தை சேர்ந்த சில சமூகத்தினர் நன்கு வளர்கிறார்கள். அதிமுக ஆட்சியில் ஏன் சில சமூகத்தினர் சலுகைகள் பெறுகிறார்கள். பிஜேபிக்கு சில சமூகங்ஙள் காங்கிரஸுக்கு சில சமூகங்கள். அனைத்து கட்சிகளுமே கார்ப்பரேட்டுகளுக்காகத்தான் சில சாதிகளின் மேன்மைக்காகத்தான் உழைக்கிறார்கள். இதைஎல்லாம் பார்க்கும்போது அடுத்த தலைமுறையின் நலனை யோசிக்கும்போது கம்யூனிசமே வேண்டும் என்று மனம் ஏங்குகிறது.

    ReplyDelete
  7. ஐயா, வணக்கம். ரஜினி,பாரதிராஜா உள்ளிட்ட பலரும் வருமானவரி,தனிமனித ஒழுக்கம் உள்ளிட்டவைகளில் தங்களது நாணயத்தை முதலில் உறுதி செய்து கொண்ட பின்னர் பூ சாக்கடைக்குள்ளா அல்லது சாக்கடைக்குள் மென்மேலும் சாக்கடையா என்ற வினாவிற்கு விடை தெரியவரும்.

    ReplyDelete