தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 1 February 2017

கண்டன ஆர்ப்பாட்டம் 04-02-2017திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் 
  'தமிழ்ப் பொறுக்கிகள்' என்று தொடர்ந்து எழுதிவரும் 
சு.சாமியைக் கண்டித்துக் 
கண்டன ஆர்ப்பாட்டம் 
------------------------------------------------------------------------------------------- 

நாள்;  04.02.2017 சனிக்கிழமை காலை 10.30 மணி  
இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை  
தலைமை: தோழர் சுப . வீரபாண்டியன் 

---------------------------------------------------------------------------------------
தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) விளையாட்டு நடைபெற அனுமதி கோரி,  ஒரு வார காலம்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை  நாடு அறியும். அவர்களின் கட்டுக்கோப்பான போராட்டத்தைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். அவ்வாறிருக்க பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சு.சாமி மட்டும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவர்களைத் 'தமிழ்ப் பொறுக்கிகள்' என்று எழுதிக்   கொண்டிருக்கிறார். அவர் சார்ந்துள்ள இந்தியாவின்  ஆளும் கட்சியான பா.ஜ.க. இன்றுவரை அவரைக் கண்டித்து ஒரு சொல்லும்  சொல்லவில்லை. 


அவர் ட்விட்டரில் பதிவேற்றியுள்ள  பதிவுகள் சிலவற்றைப் பாருங்கள்:

1. மெரினாவில் மாணவர்கள் தடியடிக்கு உள்ளான அன்று அவர் இட்ட பதிவு   "Today the TN  govt has thrashed all porukkis who tried flouting SC stay order on Jallikkattu. Are OPS and VKS also not Tamil anymore.  Ha!ha! (23 Jan 17/ 6.30 pm)  (இன்று, சல்லிக்கட்டு மீதான  உச்ச நீதிமன்றத் தடை ஆணையைக் கவிழ்க்க . முயன்ற 'பொறுக்கிகள்' அனைவரையும், தமிழக அரசு அடித்து  நொறுக்கியது.  இனிமேல் ஓபிஎஸ், விகேஎஸ் (சசிகலா) ஆகியோரும் தமிழர்கள் இல்லையா? ஹா! ஹா!) 

2. தடியடி நடந்த மறுநாள் அவர் இட்ட பதிவு  "Porkis dared me  to come to Marina. Lord Shiva sent police and porkis ran away howling aiyo aiyo. Now porkis say come to TN. Shiva to decide.(24 Jan 17/ 6.30 pm) ( பொறுக்கிகள் என்னை மெரினாவுக்கு அழைக்கத் துணிந்துள்ளனர். சிவபெருமான் காவல்துறையை அனுப்பினார். பொறுக்கிகள் ஐயோ ஐயோ என்று 'ஊளையிட்டபடி'  ஓடிவிட்டனர்.  பொறுக்கிகள் என்னைத் தமிழ்நாட்டுக்கு வரச்  சொல்கின்றனர். சிவாதான் முடிவு செய்ய வேண்டும்) 

மேலே உள்ளவை சில எடுத்துக்காட்டுகள்  மட்டுமே. தொடர்ந்து இவ்வாறே அவர் தமிழர்கள் குறித்து  எழுதி வருகிறார். 

மானமுள்ள தமிழர்களே, மாணவர்களே, இளைஞர்களே! சு.சாமியின் இந்தத் திமிர்த்தனத்தை அடக்க வேண்டிய நேரம்  வந்துவிட்டது. சு.சாமியையும், அவரைக் கண்டிக்காத பா.ஜ.க வையும் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர்கள் அனைவரும் அணி திரள்வோம்! அமெரிக்கா வாழ் தமிழர்கள் சியாட்டிலில் அந்த (ஆ)சாமியை அடித்து விரட்டிய நிகழ்வை நினைவு கொள்வோம். கண்டன ஆர்ப்பாட்டத்தில் இது போன்ற தரங்கெட்ட மனிதர்களை  எதிர்த்துக் குரல் கொடுப்போம் !!

வாருங்கள் தமிழர்களே! .  


6 comments:

 1. Tamilisai already scolded Sir

  ReplyDelete
 2. How about signing a petition (online) and pressure the govt to remove his MP stature ?

  ReplyDelete
 3. ஐயா
  நம் எதிர்க்கும் சில குறைந்த பட்ச குணங்கள் வேண்டும் அது சாமியிடம் எதிர்பார்பது நம் தவறு.

  ReplyDelete
  Replies
  1. மிகசரியான கருத்து. அவர் எந்த மாதிரியானவர் என்று யாரும் சொல்ல முடியாது

   Delete
 4. நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ஊடகத்தில் கூட அல்ல அவரது டிவிட்டரில் பக்கத்தில் போராடியவர்களை பொறுக்கிகள் என்றதுக்கு போராடும் நீங்கள் டிவிட்டரிலோ,ஊடகத்திலோ அல்ல சட்டசபையில் போராடியவர்களை தீவிரவாதிகள்,பிரிவினைவாதிகள், தேசதுரோகிகள்,சமூகவிரோதிகள் என்று கூறிய முதல்வரை எதிர்த்து போராடதது ஏன்? பயமா சுபவீ அவர்களே? As usual 'HITTING THE SOFT TARGET' என்ற திராவிடக்கட்சிகளின் கோட்பாட்டை கடைபிடிக்கிறிர்களே சுபவீ அவர்களே!

  ReplyDelete