12.3.17 ஆம் நாளிட்ட ஜூ.வி. இதழில், "திராவிட ஆட்சி 50 ஆண்டுகள்" சிறப்புக்
கட்டுரைகள் பகுதியில், பத்திரிகையாளர் சுப்பு,
"கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது , திண்ணியம்
என்ற ஊரில், பஞ்சாயத்துத் தலைவரின் ஊழலைப் பற்றிக் கேள்வி
கேட்டதற்காக, ஏழை தலித் ஒருவர், மனித
மலத்தை உண்ணும்படி தண்டிக்கப்பட்டார்" என்று எழுதியுள்ளார்.
தி.மு.க.வின் மீது பழி போடவேண்டும் என்று காத்திருக்கும் சுப்பு போன்றவர்கள், அந்த
நோக்கில் உண்மைக்கு மாறான எந்த ஒன்றையும் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் இந்த வரிகள் காட்டுகின்றன. திருச்சிக்கு அருகில் உள்ள திண்ணியத்தில் அந்தக்
கொடுமை நடைபெற்றது 2002 ஆம் ஆண்டு மே மாதம். அப்போது கலைஞரா முதலமைச்சராக இருந்தார்?
2001-06 காலகட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்பது அவருக்குத்
தெரியாதா? உண்மைகளை இப்படி அப்பட்டமாகத் திரித்துப் பேசும்
இவர், "மூத்த பத்திரிகையாளராம்". நல்ல கூத்து!
It is highly stupidity on the part of veteran editor Mr.Subbu.The punishment for these type of people is that nobody will believe even if these people tells truth.
ReplyDeleteWhat pleasure he is going to get by telling lies.It is shame and awful
மனசாட்சிக்கும் அந்த இனத்திற்கும் தொடர்பில்லை !
ReplyDelete