தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 17 December 2011

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல்:


நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் 

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில், கேரள அரசைக் கண்டித்து, 17.12.2011 காலை 11 மணிக்கு, சென்னை, சைதாபேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை,சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் முன்னணி பொறுப்பாளர்களான கயல் தினகரன், மா.உமாபதி, எழில்.இளங்கோவன்,மு.மாறன், மு.குமரன், சூர்யா, வீர.வளவன், ரகுபதி, ராஜு,மோகன்ராம்,சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சைதைப் பகுதியைச் சார்ந்த  தி.மு.கழகத் தோழர்களும் பங்கேற்றனர். பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த மக்களில் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 

No comments:

Post a Comment