தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 8 January 2012

நக்கீரன் அலுவலகத் தாக்குதல் - சந்தி சிரிக்கிறது சட்டமும், ஒழுங்கும் - சுபவீ அறிக்கை


07.01.2012 அன்று காலை, சென்னை , இராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது, அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசிக் கடுமையான தாக்குதலில் இறங்கியுள்ளனர். மணிக்கணக்கில் நடைபெற்ற தாக்குதலைத் தடுக்காமல், காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது. 


நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காக்கிச்சட்டையினர் உண்மையான காவல்துறையினர் தானா என்று ஐயப்பட வைத்துள்ளது இந்நிகழ்ச்சி. ஆளும்கட்சியின் ஆசியோடும், ஆதரவோடும் தான் இதுபோன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது. அம்மையார் ஆட்சியில் சட்டமும் ஒழுங்கும்  சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துவிட்டதைத்தான் இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகின்றது.

ஜனநாயகத்திலும், பத்திரிகை சுதந்திரத்திலும், மனித உரிமையிலும் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இவ்வன்முறையைக் கண்டித்திட வேண்டும்.

ஆளும் கட்சியினரின் அடாவடிப் போக்கைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

No comments:

Post a Comment