தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 12 February 2012

இராமசுப்பையா - விசாலாட்சி நினைவு படிப்பகத் திறப்புவிழா


12.02.2012 அன்று காலை 10 மணி அளவில், திருநெல்வேலி, பேட்டை நகரில், பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் பெற்றோர் காரைக்குடி இராமசுப்பையா - விசாலாட்சி அம்மாள் பெயரில் அமைக்கப்பெற்றுள்ள நினைவுப் படிப்பகத்தை, பேராசிரியர் தொ. பரமசிவன் தலைமையில், கருஞ்சட்டைத் தமிழர் துணை ஆசிரியர் இரா. உமா திறந்து வைத்தார். விழாவில் பேராசிரியர்கள் சுப. வீரபாண்டியன்,  நீலகண்டன், பாண்டிமாதேவி, தோழர் நிவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இரா. சந்தானம், பேராசிரியர் நீலகிருஷ்ணபாபு, வழக்கறிஞர் நித்திஷ்முருகன், நெய்வேலி மயில்வாகனன், சுகுமாறன், தி.மு. மணி, மாரியப்பன் ஆகியோர் நெல்லை ம.தி.த. இந்துக்கல்லூரிக்கு அருகில் இப்படிப்பகத்தை உருவாக்கி உள்ளனர். கோடீஸ்வரன் மணி, அய்யப்பன் (லெட்சுமி மெட்டல்) ஆகியோர் படிப்பகத்திற்கான நூல்களை வாங்குவதற்குப் பெரும் பொருள் உதவி செய்துள்ளனர்.

No comments:

Post a Comment