தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 18 March 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்


ஈழத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்களையயாட்டி, இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. அத்தீர்மானம், முழுமையாக நாம் வரவேற்கத்தக்க வகையில் அமையவில்லை எனினும், முதல்கட்டத் தீர்மானமாக அதனைக் கொள்ளலாம். ஆதலால் அத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது. தீர்மானத்தை எதிர்ப்பதோ,  நடுநிலை வகிப்பதோ, ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் இந்திய அரசு செய்திடும் மாபெரும் துரோகமாகும் என்பதை பேரவை எடுத்துக்காட்டி எச்சரிக்கின்றது.

தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று கோரி, மக்களவையிலும், மாநிலங்களவையிலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வரம்புகளைக் கடந்து ஒரே குரலில் வலியுறுத்தி இருப்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டிற்கும் உரியதாக உள்ளது. இந்நிலை தொடர வேண்டும் என்று பேரவை விரும்புகின்றது.

இத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வரும் 22ஆம் தேதி தமிழ்நாடெங்கும் பொது வேலை நிறுத்தத்திற்குத் தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அந்த வேண்டுகோளைப் பேரவை வரவேற்று ஆதரிக்கிறது.

தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவில்லை எனில், காங்கிஸ் கூட்டணியில் இருந்து தி.மு.கழகம் வெளியேறிவிட வேண்டும் என்று பேரவை தி.மு.கழகத் தலைமையைக் கேட்டுக்கொள்கின்றது.

No comments:

Post a Comment