தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 29 June 2012

செங்கல்பட்டு சிறப்பு முகாம்


ஈழத்தமிழர் உயிரைக் காத்திடுக - பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் கண்டனம்

பல்லாண்டுகளாக உரிய வழக்குகள் ஏதுமின்றி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைபட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி, கடந்த 13 நாள்களாக பட்டினிப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். கடந்த முறை அவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட வேளையில், ஜுன் 15ஆம் தேதிக்குள் நல்ல முடிவை அரசு அறிவிக்கும் என்று அதிகாரிகள் அளித்த உறுதியின் அடிப்படையில், தங்கள் போராட்டத்தை அவர்கள் முடித்துக் கொண்டனர். ஆனால் உறுதியளித்தபடி எந்த அறிவிப்பும் அரசிடமிருந்து வராத காரணத்தால், மீண்டும் அவர்கள் பட்டினிப் போரைத் தொடங்க நேர்ந்தது.

தி.மு.கழக ஆட்சியில் அம்முகாமில் அடைபட்டுக்கிடந்த 60க்கும் மேற்பட்டோர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டதை நாம் அறிவோம். இந்த ஆட்சியில் கடந்த ஓராண்டில் மூவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு, சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழர்களின் மீது பரிவு கொண்டு, அவர்களை விடுதலை செய்து, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென திராவிட இயக்கத் தமிழர் பேரவை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment