
"அம்மா என்றது மாடு
மம்மி என்றது குழந்தை"
என்னும் வரிகளைத் தமிழகம் எப்படி மறக்கும்? அந்த அழகிய வரிகளைத் தந்தவர் பாவலர் பல்லவன். அவர்தான் தந்தை பெரியாரைப் பற்றியும் 'கிழவனல்ல அவன் கிழக்கு திசை' என்னும் பாடலையும் நமக்குத் தந்தவர். அந்த நல்ல கவிஞரை, நல்ல மனிதரை, திராவிட இயக்கச் சிந்தனையாளரை நாடு இழந்து விட்டது.

தமிழ்க் கணினி உலகில் குறிப்பிடத்தக்க தமிழ் மென்பொருள்களை உருவாக்கித் தந்த நண்பர் ஆண்டோ பீட்டரும் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இருவரும் ஒரே நாளில் (12.07.12) தமிழ் மண்ணை விட்டுச் சென்று விட்டனர்.
இவை வெறும் செய்திகள் அல்ல. தமிழ் இனத்தின் பேரிழப்பு.
வேதனையில் வேகிறது மனம்.
No comments:
Post a Comment