தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 7 November 2012

பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை அகற்றிய அதிமுக எம்எல்ஏக்களை ஜெ. தண்டிக்க வேண்டும்: சுப.வீ. பேச்சு

நக்கீரனில் வெளிவந்துள்ள செய்தியைப் படிக்க இங்கே அழுத்தவும்


பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை அகற்றிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 06.11.2012 அன்று நடந்தது. 
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன்,

அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோர் படங்களை சேலம் சங்கர் நகரில் உள்ள ஆதிதிராவிடர் நல பெண்கள் விடுதியில் இருந்து அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளனர். இது இதுவரை தமிழ்நாட்டில் நடந்திராத கொடுமை. பவானி சட்டமன்ற உறுப்பினர் நாராயணனும், தேனி சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வனும் அந்த குழுவில் இருந்திருக்கிறார்கள். அரசு சார்பில் போன அவர்கள் அரசினால் பாராட்டப்பெறுகிற என்றைக்கும் மதிக்கப்பெறுகிற பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் படங்களை அகற்றியிருக்கிற அந்த கொடுமையை கண்டித்தும், அவர்களை உடனடியாக தமிழக முதல் அமைச்சர் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திருவரங்கத்திலே மறுபடியும் புதிதாக முளைத்திருக்கிற பிராமணாள் கபே என்பதை நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடத்தப்பட்டது.

பிராமணாள் கபே என்று பெயர் வைக்கக் கூடாதா. மற்ற சாதிப் பெயர்கள் எல்லாம் இல்லையா என்று கேட்கிறார்கள். இருக்கிறது உண்மைதான். முதலியார் மெஸ் இருக்கிறது. நாடார் லாட்ஜ் இருக்கிறது. ஐயங்கார் பேக்கரி கூட இருக்கிறது. சாதியைச் சொல்லுவது வேறு. பிராமணாள் என்ற வரணத்தை சொன்னால், நீ பிராமணன், நான் சூத்திரன் என்று என்னை இழிவு செய்கிற அந்த  பெயரை ஒரு நாளும் நாங்கள் அனுமதிக்க முடியாது. 'சூத்திரன் என்று சொன்னால் ஆத்திரம் கொண்டு அடி' என்று சொன்ன பெரியாரின் வார்த்தைகளுக்கு மறுபடியும் வேலை வந்திருக்கிறது. எனவே பிராமணாள் கபேவை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பிராமணாள் கபே என்ற பெயர் அகற்றப்படும் வரை, பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை அகற்றிய அதிமுக எம்எல்ஏக்களை முதல் அமைச்சர் தண்டிக்கும் வரை திராவிட இயக்கத் தமிழர் பேரவை அடுத்தடுத்து தனது ஆர்ப்பாட்டங்களை நடத்தும் என்றார்.



நன்றி: நக்கீரன்

3 comments:

  1. மனுஷ்ய புத்திரன் அவர்கள் , தன்னுடைய facebook இல் இவ்வாறு குறிப்பிட்டுளார் .

    "
    ‎'பிராமணாள் கபே’ யை ஆதரிபதல்ல என் பதிவு. பொது இடங்களில் எல்லா சாதிய வெறிகளையும் பிரகடங்களையும் எதிர்க்கவேண்டிய ஒரு காலகட்டதிற்கு வந்துவிட்டோம். தமிழகத்தில் இன்று சாதிய ஒடுக்குமுறைகளை வெளிப்படையாக முன்னெடுக்கும் சாதிகள் எவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நாளும் அதன் குருதி வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.சில சாதிகள் ஜாதிய மேலாண்மையை மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்திலும் இன்று செல்வாக்கு செலுத்துகின்றன. பிராமணியத்தை மட்டும் தாக்குவது இந்த ஓடுக்குமுறைகளைப் பற்றி பேசாமல் இருக்கும் ஒரு தந்திரமே. இந்த அரசியலை கேள்விக்குள்ளாக்கக் கூடாதா? பிராமணர்--பிரமணரல்லாதோர் என்ற நிலையைத் தாண்டி இன்றைய சாதிய அரசியலைப் பேச திராவிட இயக்க்கதினர் மறுக்கின்றனர். அது அவர்கள் அரசியல் தொழில். சாதி வெறியில் யார் வல்லவர்கள் என்பதில் இன்று பிரமாணர்களோடு பலரும் கடும் போட்டியில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக நின்று கோஷம் போட வேண்டுமா?"

    இதற்கு தாங்களின் பதில் என்ன ?

    நன்றி
    தே ரகு

    ReplyDelete
  2. Dear friend Ragu,
    Vadivel joke onnu irukku.
    X: deyai...Naan Yaokiyanda....

    Vadivel: Nee Yoakiyanna appa naan yaaru?

    Bramanaal cafe ..... appa soodhraalluku......?

    WE are not against the name of the caste. Bramanaal cafe represents its meant for bramanaal.
    Please read again the Bharathiyars kavithai.

    Parpaanai Iyer endra kalamum poache...Both parpaan and Iyer represents same caste but cannotes different meaning.
    Barathikku thangalin bhathil yenna nanbare ? Mudhalil naam thelivu peruvome.

    ReplyDelete
  3. வானம் எனக்கொரு போதி மரம்

    சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

    சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

    தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

    பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

    இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குலுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

    அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது?

    நல்லையா தயாபரன்

    ReplyDelete