தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 18 February 2013

கச்சத் தீவை மீட்க வேண்டும் - தமிழக மீனவரைக் காக்க வேண்டும்!

டெசோ அமைப்பின் சார்பில் ராமேசுவரத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!



தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்கப் படுவதைக் கண்டித்து டெசோ அமைப்பின் சார்பில் இன்று (18.2.2013) காலை 11 மணியளவில் ராமேசுவரத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழர் தலைவர், கி.வீரமணி தொல் திருமாவளவன், சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







இந்தியா பெரிய ராணுவ அமைப்பை கொண்ட நாடு. இலங்கையோ  மிகச் சிறிய ராணுவம் கொண்டது. ஆனால் இலங்கை  இந்தியாவின் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லுகிறதுஉலகில் அதிக நிதி ஒதுக்கும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக ராணுவம் பலம் வாய்ந்த நாடுகளில் இந்தியா 7 ஆவது இடத்தில் உள்ளது. இத்தகைய சிறப்பை வைத்துக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாக  செயல்பட்டுக் கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்கும்போது நமக்கு சந்தேகம் அதிகமாகின்றது.

என்னவென்றால் இந்திய ராணுவத்தினால் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியவில்லையா அல்லது காப்பாற்ற மனமில்லையா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. இனியும் தாமதிக்காமல் இந்தியா உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழகம் கொதித்தெழும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கின்றேன் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் உரையாற்றினார்.

இது தொடர்பாக விடுதலையில் வெளிவந்துள்ள செய்தி 

கச்சத் தீவை மீட்க வேண்டும் - தமிழக மீனவரைக் காக்க வேண்டும்!



நன்றி: விடுதலை 

1 comment:

  1. கச்சத்தீவினை மீட்பது காலத்தின் கட்டாயம் அய்யா

    ReplyDelete