தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 4 March 2013

தூக்குத் தண்டனையை மறு ஆய்வு செய்க! பேரா. சுப.வீரபாண்டியன் முழக்கம்!



சென்னை, மார்ச் 1- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்டவர்கள் மீதான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டு என்றார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். 25.2.2013 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டதாவது:-
நாகப்பட்டினத்தில், தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்து ஏட்டில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை பார்த்த போது திடுக்கிட்டோம்.
அதே நேரத்தில் நமது ஆசிரியர் அவர்கள் சென்னையில் இது குறித்து ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாமா என்று கருத்து கூற பத்தே நிமிடத்தில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நாட்டிலே தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் வரவேற்கப்படுகிறார்கள் - வரவேற்கப் பட வேண்டியவர்கள் தண்டிக்கப்படு கிறார்கள்.
பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த காட்சியைவிட அடுத்துத் தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாமல் தின் பண்டத்தைத் தின்று கொண்டிருக்கும். காட்சி தான் நம்மைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது. ஒரு படம் உலகையே உலுக்கி எடுத்து விட்டது.
இந்தியாவின் தலை நகரமான புதுடில்லியில் டெசோ சார்பில் மார்ச் 7ஆம் தேதி மாநாடு - கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அது உலகம் முழுவதும் நம் உணர்வைக் கொண்டு சேர்க்கும்.
இரண்டு செய்திகள் கொலைக்காரன் ராஜபக்சேவுக்கு வரவேற்பு - வீரப்பன் கூட்டாளிகள் என்பதற்காக நான்கு பேர்களுக்குத் தூக்கா.
இழுத்து மூடு நீதிமன்றத்தை!
தூக்குத் தண்டனையே கூடாது என்று சொல்லுபவர்கள் நாம். கசாப் தூக்கிலிடப்பட்டது ஏன் ரகசியமாக வைக்கப்பட்டது  ஏனென்றால் வெளியில் தெரிந்தால் சில மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றம் சென்று விடுவார்களாம்.
எப்படிப்பட்ட தந்திரம். அப்படியென்றால் மனித உரிமைகள் பற்றி இந்த அரசினர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! நீதிமன்றங்கள் இந்த நாட்டில் ஏன்? இழுத்து மூட வேண்டியதுதானே!
குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் இருந்தார் - அவரைத் தொடர்ந்து அப்துல் கலாம் இருந்தார் - அப்பொழுதெல்லாம் அவர்கள் கருணை மனுக்களை நிராகரிக்கவில்லை; தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்லவில்லை.
பிரணாப் குடியரசுத் தலைவராக ஆனபின்...
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானபின் தூக்குத் தண்டனைகள் அவசர அவசரமாக நிறை வேற்றப்படுவது - ஏன்? தெரிந்து கொள்ளலாமா?
வீரப்பன் கூட்டாளிகள் என்பதற்காக தூக்குத் தண்டனையா? இங்கே அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நம் எதிரில் கண்ணீர் வடித்துக் கொண்டு அமர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லுவதெல்லாம் கலங்காதீர்கள்! கலங்காதீர்கள்!! உங்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவர்கள் நியாயம் கேட்கக்கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் 22 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டனர். இப்பொழுது அவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கூறுகி றார்கள். ஒரு குற்றத்திற்காக? இரண்டு தண்டனைகளா? சட்டத்தில் அதற்கு இடமுண்டா?
இதுபோன்ற வழக்குகளை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியே கூறி இருக்கிறார். அதைத் தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் வலியுறுத்துகிறோம்.
சு.சாமி ஓட்டம்
சு.சாமி ஒரு தொலைக் காட்சிப் பேட்டிக்கு வந்தார். அப்பொழுது அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். உங்களை எப்பொழுது கைது செய்யப் போகிறார்கள் என்று கேட்டேன் ஏன்? என்னை எதற்குக் கைது செய்யவேண்டும் என்று கேட்டார். ஜெயின் கமிஷனில் உங்கள் பெயரும், சந்திரசாமி பெயரும் குறிப் பிடப்பட்டுள்ளதே என்று சொன்னேன். உடனே நடையைக் கட்டிவிட்டார் என்று குறிப்பிட் டார்.

நன்றி: விடுதலை

No comments:

Post a Comment