தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 27 June 2013

திமு.க. - காங்கிரஸ் மீண்டும் கூட்டணியா?


மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசின் வாக்குகளைத் தி.மு.க. கோரியது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. மீண்டும் கூட்டணி என்று சில ஏடுகள் எழுதுகின்றன.

 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் நேரடியாக வாக்களிப்பார்கள். மக்களே வாக்காளர்கள். அந்த வாக்காளர்களிடம், வேட்பாளர்கள் வாக்கு கேட்பார்கள்.  வாக்காளர் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரிடம் எல்லா வேட்பாளர்களும் வாக்கு கோருவர். அதுதான் மரபு.

மாநிலங்களவைத் தேர்தல் சற்று வேறுபட்டது. அதில் மக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே வாக்களிப்பார்கள். எனவே இங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்காளர்கள். அந்த வகையில், ஒரு வேட்பாளர், தனக்கு வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களிடம் வாக்குகளைக் கேட்க வேண்டுமா, வேண்டாமா?  27ஆம் நாள் தேர்தலில், காங்கிரசின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்காளர்களே. அவர்களிடம் வேட்பாளர்களில் ஒருவராகிய கனிமொழி வாக்கு கேட்பதுதானே நியாயம்? 
                                    
வாக்கு கேட்பது வேறு, கூட்டணி அமைப்பது வேறு. இரண்டையும் ஏன் நாம் குழப்ப வேண்டும்?

(23.06.2013 அன்று தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன்) 

2 comments:

  1. K. MUTHU SELVAM29 June 2013 at 17:30

    வாக்கா ளணிடம் ஒரு வேட்பாளன் ஓட்டு கேட்பது தவறு இல்லை. அதே சமயம் தி.முக கூட்டணியில் இருந்து திமுக வின் ஒட்டும் பெற்று வெற்றி பெற்ற காங்கிரசாரின் ஓட்டை கனிமொழிக்காக ஓ ட்டு கேட்பதில் தவறு இல்லை. காங்கிரசார் தார்மிகமாக ஆதரவு தெரிவித்துருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு போடாத தே மு தி க, கா ங்கிரசிடம் ஆதரவு கேட்பது ஜனநாயக விரோதம்.

    ReplyDelete
  2. திமுக, காங்கிரஸ் கூட்டணிஇல் இருந்து வெளியே வந்த போது வரவேற்காதவர்கள் இப்போது காங்கிரஸ் ஆதரிதுவிட்டதே என்று திமுகவை நோக்கி சேற்றை இறைகிரார்கள். காங்கிரசை தனிமை படுத்தவேண்டும் என்ற துடிப்பை விட திமுகவை தனிமை படுத்த துடிக்கும் பேடிகள், இப்படி துடிப்பதை தடுககமுடியது

    ReplyDelete