9. "பச்சோரி கமிஷன் அறிக்கைக்குப் பின், சுற்றுச் சூழல் கருதி, சேதுக்
கால்வாய்த் திட்டத்தை ம.தி.மு.க. மறு பரிசீலனை செய்ய உள்ளது."
-வைகோ
பச்சோரி கமிஷன் அறிக்கை
காரணமா, பா.ஜ.க. கூட்டணி காரணமா என்று வெளிப்படையாகச் சொல்லுங்களேன்! கொள்கைக்காகக்
கூட்டணியை மாற்றிக் கொள்வார் வைகோ என்று சிலர் கருதினர். இப்போது, கூட்டணிக்காக அவர்
கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளார்.
10. பா.ஜ.க.
சொல்லித்தான், நான் ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சென்று சந்தித்துக்
கூட்டணி பற்றிப் பேசினேன். இந்த உண்மையைச் சொல்ல பா.ஜ.க. ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை."
-தமிழருவி மணியன், 03.01.14 அன்று தந்தி தொலைக்காட்சிப்
பேட்டியில்
ஆக, பா.ஜ.க.வின் முகவராகத் தான் செயல்படுவதை மணியன் வெளிப்படையாக ஒப்புக்
கொண்டுள்ளார். இப்போதே அக்கட்சி உண்மை பேசத் தயங்குகிறது என்பதையும் போட்டு உடைத்துள்ளார்.
ஆனாலும் அந்தக் கூட்டணிக்காகப் பல கூட்டல் கழித்தல் கணக்குகளை எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
பச்சோந்தி கமிஷனைக் கொஞ்சம் விளக்குங்குள்.
ReplyDeleteஅய்யா, சமூக இயக்கங்களில் தான் கொள்கை என்பது மாற்ற முடியாதது. அரசியல் மக்களுக்கான ஒரு அமைப்பு, இங்கு கொள்கை என்பது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும். வைகோ இப்போது தான் எதார்த்ததோடும், மக்களின் மனநிலையை அறிந்து கொண்டு, வெற்றி பாதையில் நடக்க ஆரம்பித்துள்ளார். உங்களுடைய கருத்தை மதிக்கிறேன், அதே நேரத்தில், வைகோ அவர்களின் மனமாற்றத்தை வரவேற்கிறேன்.
ReplyDeleteஇப்போதும் வரவேற்கிறிர்களா?
Delete"பச்சோரி கமிஷன் அறிக்கைக்குப் பின், சுற்றுச் சூழல் கருதி, சேதுக் கால்வாய்த் திட்டத்தை ம.தி.மு.க. மறு பரிசீலனை செய்ய உள்ளது."
ReplyDelete-வைகோ
சுபவீரபாண்டியன் :
பச்சோரி கமிஷன் அறிக்கை காரணமா, பா.ஜ.க. கூட்டணி காரணமா என்று வெளிப்படையாகச் சொல்லுங்களேன்! கொள்கைக்காகக் கூட்டணியை மாற்றிக் கொள்வார் வைகோ என்று சிலர் கருதினர். இப்போது, கூட்டணிக்காக அவர் கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளார்.
***
சுபவீரபாண்டியன் என்ற முன்னாள் சுயமரியாதைக்காரருக்கு,
எங்கள் தலைவர் வைகோ சுற்றுச்சுழலின் நலன் கருதி சேதுசமுத்திரத் திட்டமே வேண்டாம் என்று தெளிவான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார். அதற்கான காரணங்களையும் கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.
பிஜேபியோ ஆர்எஸ்எஸ்சோ சேதுசமுத்திர திட்டம் வேண்டாம் என்று கூறவில்லை, மாற்றுப்பாதையில் இதை நிறைவேற்றலாம் என்று சொல்கிறார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு எதுவும் தெரியாமல், முல்லைப்பெரியாறு, ஸ்டெர்லைட் நச்சுஆலை என்று வாழ்வதாரத்தை பாதுகாக்கும் பல்வேறு பிரச்சனைகள் இருக்க எதற்குமே குரல் கொடுக்காமல் இருக்கும் நீங்கள் மீனவர்களின் வாழ்வதாரத்தையும் சுற்றுச்சுழலையும் பாதிக்கும் இந்த திட்த்தை மட்டும் நிறைவேற்ற துடிக்க என்ன காரணம் என்று விளக்க முடியுமா ? மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்ளமுடியாமல் அதை நீக்கிவிடும் நீங்கள் இதை நேர்மையோடு வெளியிட்டு எனக்கு பதில் அளிப்பீர்களா ?
திரு முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு,
Deleteவணக்கம். சுற்றுச் சூழலுக்காக வைகோ தன் கருத்தை மாற்றிக் கொண்டார் என்பது உங்கள் நம்பிக்கை. அவ்வாறு நம்புவதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. அவ்வாறே, பா.ஜ.க. கூட்டணிக்காகத் தன் கருத்தை அவர் மாற்றிக் கொண்டார் என்று கருதுவதற்கு எனக்கும் எல்லா உரிமையும் உள்ளது.
சுற்றுச் சூழல் போராட்டங்களில் நானும், எங்கள் அமைப்பும் பங்கேற்கவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? பல கூட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள், சிவகங்கை முதல் உசிலம்பட்டி வரை 5 நாள்கள் ஊர்திப் பயணம் என்று எங்களால் ஆனவற்றைச் செய்து கொண்டுதான் உள்ளோம் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். ஆனால் அவற்றில் வைகோவின் பணி மிகப் பெரியது என்பதை நான் அரசியலுக்காக ஒருநாளும் மறுத்ததில்லை. இருப்பினும், இன்றைய அவருடைய மாற்றம் கூட்டணி நோக்கியதே என்பது என் அழுத்தமான கருத்து. நன்றி.
திரு. சுபவீரபாண்டியன் அவர்களுக்கு,
ReplyDeleteசுற்றுச்சுசூழல் போராட்டங்களில் வைகோ அவர்களின் பணி மிகப்பெரியது என்பது ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. அதே சுற்றுச்சூழல் பிரச்சனைக்காக சேது சமுத்திரம் திட்டம் சார்பாக தனது பழைய நிலைப்பாட்டை வைகோ அவர்கள் மாற்றிக்கொண்டதை சுற்றுச்சுசூழல் ஆர்வலர்களும், மீனவர்களும் வரவேற்கிறார்கள். இதை எப்படி பிஜேபியோடு முடிச்சுப்போட்டு பார்க்கிறீர்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. பிஜேபி சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கவில்லை, மாற்றுப்பாதையில் செயல்படுத்தாலாம் என்றுதான் சொல்கிறார்கள். வைகோ அவர்களோ சுற்றுச்சுழலுக்கும் வாழ்வாதாரத்திற்கும் தீங்காய் அமைந்துவிடக்கூடிய சேது சமுத்திர திட்டமே தேவையா, இதைப்பற்றிய மறுபரிசீலனை செய்யவேண்டிய இடத்தில் இருக்கிறோம் என்று விளக்குகிறார். இதில் வைகோஅவர்களை விமர்சிக்க வேண்டும் என்றால் சுற்றுச்சுழல் சார்ந்தும், மீனவர்களின் போராட்டம் குறித்தும் வைகோ அவர்களின் கருத்தை அச்சத்தை பற்றித்தான் நீங்கள் நேர்மையான முறையில் விவாதித்திருக்க வேண்டும். அதை விடுத்து இதை பிஜேபியோடு கூட்டணி என்ற விதத்தில் திசைதிருப்புவது என்பது வைகோ அவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வை தான் காட்டுகிறது. இதுமட்டும் அல்ல மீனவர்களையும் சுற்றுச்சுழல் ஆர்வலர்களையும் கொச்சைப்படுத்துவதாகவும் அமைகிறது.
- த. முத்துகிருஷ்ணன்
திரு முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு,
Deleteசேதுக்கால்வாய் தொடர்பான சுற்றுச் சூழல் விவாதம் இப்போது புதிதாக முளைக்கவில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளாகச் சொல்லப்படுகிறது. அதற்கு திரு சச்சிதானந்தன் போன்ற வல்லுனர்கள் தக்க விடையைத் தந்துள்ளனர். அவ்விளக்கத்தை வைகோ போன்றவர்களும் ஏற்றுக்கொண்டே அத்திட்டத்தை இதுவரை ஆதரித்து வந்தனர். இப்போது வைகோவிடம் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்திற்குப் புதிய கூட்டணிதான் காரணம் என்பதைச் சிறு பிள்ளையாலும் உணர முடியும். உங்களுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனினும் அவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றுதல், உண்மையை ஏற்க மறுக்கிறது என்றே எண்ணுகின்றேன்.