தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 8 September 2015

பகிர்வு - 4

நூற்றாண்டு காண போகும் திராவிட இயக்கம்...ஓர் விமர்சனம் பார்வை?
-சந்தோஷ் குமார் 

விடை : சாதியின் பெயரால் உயர்வு தாழ்வு கற்பித்து, மனிதனுக்கு மனிதன் அடிமையாகவும், தீண்டத்தகாதவனாகவும் இருந்த ஒரு சமூகத்தில் பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். சமூக நீதியே அதன் உயிர்நாடிக் கொள்கை. அதனை அடிப்படையாகக் கொண்டே கடவுள் மறுப்பு போன்ற பிற கோட்பாடுகளும் இயக்கத்தில் தோன்றின. இன்னும் நாம் செல்ல வேண்டிய தொலைவு மிகுதியாக உள்ளது என்பது உண்மைதான் என்றாலும், இன்று நம் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல நல்ல மாற்றங்களுக்குத் திராவிட இயக்கமே அடிக்கல்லாக இருக்கிறது. 


திராவிட இயக்கம், நம் தோள்களுக்குத்  துண்டு தந்தும், நம் காலுக்குச் செருப்ப தந்தும் நம்மைத் தன்மானம் உள்ள மனிதர்களாக மாற்றியது. நம் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கல்விக் கூடங்களின் கதவுகளைத் திறந்து விட்டது. பெண்ணுரிமை கோரிக்கையை ஓர் இயக்கமாக முன்னெடுத்தது. பகுத்தறிவுக் கருத்துகளை நாடெங்கும் பரப்பியது.

2 comments:

  1. Sir,
    you are right at the same time we are having internal community politics to the party of DMK. This issue is not control to till date ,that much only i can sad.

    ReplyDelete