வைகோ தலைமையில்
உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணி குறித்த உங்கள் கருத்து என்ன?
- வைதேகி
விடை : அது இன்னும் தேர்தல் கூட்டணியாக
உருப்பெற்றுவிடவில்லை. ஒரு வேளை அப்படி ஆகலாம். மாறியும் போகலாம். அக்கூட்டணியில்
உள்ள எல்லாக் கட்சிகளும், கொள்கை, சித்தாந்தம் உடையன என்பதில் மாற்றுக்
கருத்தில்லை. சாதி ஒழிப்பு, ஜனநாயக உரிமைகள், சிறுபான்மையினர் நலன் ஆகியனவற்றிற்காக
அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிப் போராட வேண்டிய சூழலில்தான் நாடு உள்ளது.
அந்த வகையில் இந்தக் கூட்டணி நல்லதுதான்.
ஆனால் இதுவே தேர்தல் கூட்டணியாக மாறும் வேளையில், அது
அ.தி.மு.க.விற்குத்தான் உதவும் என்பதில் ஐயமில்லை. இன்றைய தமிழ் நாட்டுச் சூழலில், மூன்றாவது அணி
ஆட்சி அமைப்பது என்பதெல்லாம் வெறும் கற்பனையே. தி.மு.க அல்லது அ.தி.மு.க.
தலைமையில் அமையும் அணியே ஆட்சிக்கு வர முடியும் என்பது எல்லோருக்கும்
தெரிந்த உண்மை. ஆதலால், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறினால், அது யாருக்கு
நன்மை பயக்கும்? அப்போது மக்கள் நலக் கூட்டணி, அம்மா நலக் கூட்டணியாகத்தானே
உருவெடுக்கும். . ஒருவேளை, சி.பி.எம். கட்சிக்கு அதுதான்
நோக்கமோ என்னவோ!
This comment has been removed by the author.
ReplyDeleteஐயமே இல்லை. அ.தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவுவதற்குதான் இந்தக் கூட்டணியை சி.பி.எம். உருவாக்கியுள்ளது. இந்தச் சூழ்ச்சி வலையில் சிக்கி பலிகடா ஆக வேண்டுமா என்பதைக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் சிந்திக்க வேண்டும்.
ReplyDeleteஇந்த பகிர்வு விவாதத்தில் எப்படி கேள்வி கேட்பது
ReplyDeleteஉங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி subavee.blog@gmail.com
ReplyDeleteகூட்டணி என்றாலே தேர்தல் என்ற ஒன்றை மையப்படுத்தி தான் இருக்க வேண்டுமா?!
ReplyDeleteமங்கள் பிரச்சனைக்காக கூடிபோராடிவிட்டு பின்னர் கொள்கையை அடிப்படையில் தேர்தலை சந்திப்பதே நல்லது!
ஆனால் தேர்தல் நேரத்தில் அனைவரும் கொள்கைகளை கோவணமாய் அல்லவா பறக்கவிட்டு விடுகிறார்கள்