தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 12 September 2015

பகிர்வு - 6

எங்கள் ஊரில் கோயில்களில் நாதஸ்வரம், தவில் வாசிக்கும் குடும்பங்கள் உள்ளது. அவர்கள் தாய் மொழி தமிழ். அவர்கள் யாரும் தங்கள் வீடுகளில் வேறு மொழி பேசுவது கிடையாது.

ஆனால் கலைஞர் அவர்களை ஏன் தெலுங்கு என்று சில எதிரிகள் எப்போதும் வசைபாடுகிறார்கள்.

இது பற்றி தாங்கள் விளக்கமுடியுமா?

அன்புடன்
வி.பி.தயாளன் 


விடை:  சில பேர் ரத்தப் பரிசோதனை நிலையம் வைத்துக் கொண்டு அலைகின்றனர். அதில் சோதித்துப் பார்த்து, இவர்கள் தமிழர்கள், இவர்கள் தெலுங்கர்கள்,இவர்கள் கன்னடர்கள் என்று 'சான்றிதழ்' வழங்குவார்கள். அறிவியல் பூர்வமான சான்று எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. இது ஒரு விதமான இனவாதம். கவனித்துப் பாருங்கள் , பார்ப்பனர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று அவர்கள் கூறிவிடுவார்கள். எனவே இது ஒரு வகையான பார்ப்பனீயமும் கூட! இது போன்ற இனவாதக் கூற்றுகளை அலட்சியப் படுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதே நமக்கும், நாட்டுக்கும் நல்லது!


2 comments:

  1. நன்று. அருமை..

    ReplyDelete
  2. தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி என்று வேறுபாடு பார்ப்பது ஒரு வகை பயம். நாம் நமது இயல் இசை நாடகத்தை பேணி பாதுகாப்பதற்கு நமக்கு நாமே கண்டு பிடித்துக்கொண்ட ஒரு வழி. இது எல்லாருக்கும் பொருந்திவரும் ஒரு பொதுவான வழி. நமக்கு இந்த பயத்தை ஊட்டி வைத்திருப்பது நமது குழப்பமான இந்திய ஐக்கியம். இந்த இந்திய ஐக்கியம்தான் இதற்கு ஒரு தெளிவான பதிலை சொல்ல வேண்டும். தமது அரசியல் சாசன சட்டத்தை மீண்டும் அது பரிசிலனை செய்ய வேண்டும். அகில இந்தியாவை அது தமது தேசிய இனங்களின் கூட்டு ஒத்துழைப்பாக கருதவேண்டும். அந்தந்த இன மக்களை அவர்களின் தாய் மொழி மூலமாக கண்டறிந்து அவர்கள் அனைவரையும் அரவணைத்து அங்கிகரிக்க வேண்டும். அரவணைத்தல் என்பது இந்துஸ்தானாக அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அந்தந்த இன மக்களின் இயல் இசை நாடகத்தை பட்டை தீட்டி மெருகேற்றிக்கொள்ள அது முழுமையான வெளிப்படையான தமது தேசிய இனங்கள் என்கிற உணர்வுடன் உதவியை செய்ய வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? தேசிய மொழி கொள்கையை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால் இந்தி மட்டும் தான் தேசிய மொழியாக அது அங்கீகரித்து அதன் வளர்ச்சிக்கு பணத்தை கோடி கணக்கில் வாரி வாரி இறைக்கிறது. இந்த நிலையில் தேசிய இனங்கள் பயந்து போய்தானே இருக்கும். அந்த பயத்தை இந்த பாரத பாக்கியவான்கள் ஏற்படுத்தி விட்டார்கள் அல்லவா! இந்த நாடு அதாவது திராவிடர்களின் பார்வையில் இந்த இந்தியா அதாவது ஆரியர்களின் பார்வையில் இந்த பாரத நாடு யாருக்காக? 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதிக்கு முன்பு வரை இந்த தேசிய நீரோட்டம் ஆங்கில தேசிய நீரோட்டமாகத்தானே இருந்து வந்தது? அந்த நீரோட்டம் ஓடி முடிந்ததும் புதிய நீரோட்டம் ஒன்றை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்டு அதில் இந்த பாரத பாக்கியவான்கள் பாதுகாப்பாக படகு ஒட்டிக்கொண்டு பயணம் செய்கிறார்கள். பரிதவிக்கும் பாமரனை படட்டும் பாடு என்று பாடாய் படுத்துகிறார்கள். அந்த பாடாய் பட்டு பரிதவிக்கும் பாமரன்தான் யார் தெரியுமா? வேறு யார்? திராவிடந்தான்! தாம் அப்படி பாடாய் படுவதால்தான் தமக்குள் நீ தமிழன் தெலுங்கன் கன்னடன் மலையாளி என்று அடையாளம் கண்டு கண்ணீர் கடலில் கரை தெரியாமல் தவிக்கிறான். அவனது தேசிய இனத்தின் சுதந்திர காற்றை அவன் இன்னும் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகிறான். அவன் தனது தேசிய இனத்தின் சுயநிர்ணயத்துக்காக போராட எண்ணியும் முடியாமல் ஆரிய மாதாவின் காலடியில் மிதியுண்டு மதிகெட்டு மனிதனிடம் மாடுபோல மாட்டிக்கொண்டான். ஆகவே திராவிடர்களே தன்மான புலிகளே அன்புக்குரிய தமிழர்களே கேளுங்கள் அண்ணன் சுபவீயிடம் கேளுங்கள். எப்படி அண்ணா என்று கேளுங்கள் இப்படித்தான் தம்பி என்று அவர் சொல்லட்டும்.

    ReplyDelete