தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 9 September 2015

நல்ல கெட்டவர்கள்

உலகில் வஞ்சனையும் வன்முறையும் தலைவிரித்து ஆடுகின்றன. ஆனாலும் ஒட்டுமொத்தமாகக் கணக்கெடுத்துப் பார்த்தால், மக்களில் தீயவர்களை விட நல்லவர்களே கூடுதலாக உள்ளனர். பன்மடங்கு கூடுதலாக உள்ளனர். ஆனால் அந்த நல்லவர்களில் பலர், தீமை கண்டு அஞ்சுகின்ற நல்லவர்களாக, தீமைகளைக் கண்டும் காணாமல் இருக்கின்ற நல்லவர்களாக, சில வேளைகளில், வேறு வழியின்றித் தீமைக்குத் துணை போய்  விடுகிற நல்லவர்கலாக இருக்கின்றனர். தீயவர்களின் செயல்களை விட நல்லவர்களின் மௌனமே மிகுந்த ஆபத்தானது. எனவே எல்லோரும் நல்லவர்கள் இல்லை.தீமைகளை எதிர்த்துப் போராடுகின்றவர்களே நல்லவர்கள். மற்றவர்கள்  இரண்டு வகையினர். ஒரு சாரார்  கெட்டவர்கள். மற்றவர்கள்  'நல்ல கெட்டவர்கள்.'

1 comment:

  1. தீமையை எதிர்த்துப் போராடுவது சாதாரண காரியமல்ல. சில வேளைகளில் அதன் பின் விளைவுகள் மிகவும் அபாயகரமாக இருக்கும். அதற்கு அஞ்சியே நீங்கள் சொல்லும் நல்ல கெட்டவர்களும் இருக்கிறார்களே ஒழிய அவர்கள் தீமையை ஆதரிக்கிறார்கள் என்று பொருள் அல்ல. இது என் சொந்தக் கருத்து. நானும் பல நேரங்களில் அவ்வாறு சென்றிருக்கிறேன். குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பும் கூட அதில் உள்ளது. உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்ல?

    ReplyDelete