தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 27 October 2015

பகிர்வு - 20

அன்புமணியின் தலைமையை ஏற்றுக்கொண்டு, பா.ம.க. அணியில் சேர விஜயகாந்திற்கு மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அழைப்பை தே .மு.தி.க ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதா?
- ஆ. சற்குணன்


விடை: ஆனாலும் விஜயகாந்தை இந்த அளவுக்கு மருத்துவர் கோபப்படுத்துவது நியாயமில்லை என்றுதான் தோன்றுகிறது. அவருடைய வாக்கு வங்கியில் சரிவு உள்ளது என்பது உண்மையாய் இருக்கலாம். எனினும் பா.ம.க.வை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு வாக்குகள் இன்றும் கூடுதலாகவே உள்ளன, தே.மு.தி,க.விடம்! பிறகு எப்படி அவர் அன்புமணியின் தலைமையை ஏற்றுக்கொள்வார்?  

6 comments:

 1. உனக்கு பேச்சுரிமை இருக்கு,எழுத்துரிமை இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசி பாட்டாளிகளின் வெறுப்பை சம்பாதிக்காதே.உன் நாக்குல சுட்டுக்கோளை தேய்க்கத் தூண்டாதே.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு,ஆகவே யாகாவராயினும் நாகாக்க.

  ReplyDelete
 2. ஒருவரை பற்றிய விமர்சணத்தை கூட நாகரீகமாக பதிவு செய்துள்ளார் திரு சுப வீ.ஆனால் அதை ஒருவர் அநாகரீகமாக விமர்சணம் செய்துள்ளார் .மரியாதை தெரியாத மணிதர்கள்.

  ReplyDelete
 3. மருத்துவர் தமிழக ஜாதி அரசியலின் தந்தை. அதை எப்படித்தான் மறைத்தாலும் பூனை குட்டி அடிக்கடி வெளியே வந்து விடுகிறது,
  ரமேஷ் ! பாட்டாளிகளின் வெறுப்பை சம்பாதிக்காதே நாக்குல சூட்டுகோலை தேக்க தூண்டாதே என்று நீங்கள் சொல்வதில் இருந்தே மிக தெளிவாக இந்த சோ கால்ட் பாட்டாளிஸ் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பது தெரிகிறது, பாட்டாளிகள் என்ற சொல்லை இந்த குண்டர்கள் சமுக விரோதிகள் பயன்படுத்துவதை என்னவென்று சொல்வது? சீ நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்று சொல்லாம் என்று பார்த்தால் நாயை கேவலப்படுத்த விரும்பவில்லை.அது ஒரு அற்புதமான ஜீவன்.

  ReplyDelete
 4. சுப வீ , அவர்களின் பல விமர்சனங்களை கேடுலேன், படிதுலேன் அது எபோழுதும் நாகரிகமாகதான் இருகின்றது...இருக்கும்! பாட்டாளிகள் என்ற போர்வையில் ஐயா செய்யும் அருவருக்கத்தக்க அரசியலும், கட்சியை சார்தவர்கள் பேசும் வன்மமான வெறியூட்டும் வார்த்தைகளும்...இப்போதும் நீங்கள் உங்கள் மறுப்பை தெரிவிகலாம் ஆனால் நாகரிகமான வார்த்தைகளில்... மரியாதையான வார்த்தைகளும் தமிழில் உண்டு!... தலைமை எவழியோ!...தொண்டர்கள் அவ்வழி!...

  ReplyDelete
 5. திருவாளர் ரமேஷ் அவர்களின் பண்பற்ற கருத்தை, ஐயா திரு. சுபவீ பதிவு செய்ததன் மூலம், ஐயா அவர்களின் பெருந்தன்மையினை உணரலாம், புரிந்து கொள்ளலாம். தமிழ் மூதுரையின் வாக்கியம் ஒன்று நினைவிற்கு வருகிறது. அது: " சங்கு சுட்டாலும் வெண்மை தரும்".

  ReplyDelete
 6. thiru ramesh
  sabai naagareegathodu karuthukalai pathivu saiyavum

  ReplyDelete