தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 13 October 2015

தமிழுக்கும்(?) அமுதென்று பேர்


"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் 
 தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். "தமிழுக்கு அமுதென்று பேர் என்றுதான் அவர் பாடியிருக்கக் கூடும், இடையில் யாரோ 'ம்' சேர்த்து விட்டார்கள், தமிழுக்கும் அமுதென்று பேர் என்று சொன்னால், வேறு எது எதற்கோ அமுதென்று பெயர், போனால் போகிறது தமிழுக்கும் அமுதென்று பெயர் என ஆகிவிடாதா" என்று நடுவில் சிலர் வினா எழுப்பினர். பிறகு, பாரதிதாசன் ஆய்வாளர்கள், முதல் பதிப்பு வரையில் தேடிப்  பிடித்துப் பார்த்தபோது, அதில் 'தமிழுக்கும்' என்றுதான் இருந்தது.

வேறொன்றுமில்லை....புரட்சிக்கவிஞர் இப்படிக் கருதியிருக்கக் கூடும். 'அமுதுக்கு அமுதென்று பேர், தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று எண்ணி அவர் பாடியிருக்கலாம்!


6 comments:

  1. கணேஷ்வேல்13 October 2015 at 19:42

    உரத்த சிந்தனை!!!

    ReplyDelete
  2. மணியரசன்15 October 2015 at 13:10

    தமிழ் தமிழ்னு மொழியுணர்வைத் தூண்டி ஒரு மாயையை உருவாக்கி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மணல் கொள்ளை,தாது மணல் கொள்ளை,கிரானைட் கொள்ளை,சாராயக் கடைகளால் உழைக்கும் மக்களின் வளங்கள் கொள்ளை,சாலைகள் பாலங்கள் கட்டுவதில் திராவிடக் கட்சிகாரர்களின் கமிஷன் கொள்ளை,அரசு ஊழியர்கள் அரசு/மக்கள் ஊழியம் செய்யாமல் அசுர ஊழியம் செய்து கொண்டு பொது மக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் அவலம் மேலும் பல கொள்ளைகள்!.அதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை பேசாத சுபவீ மொழியுணர்வு,இன உணர்வை 1960களிலிருந்தது போன்ற நிலை வராதா என்ற நப்பாசையில் ஏங்கிக் கொண்டு அவர்கள் "மீண்டும் ஊரைப் பிடுங்கி உளையில் போடுவதற்கு" உதவதான் உங்களின் தமிழ் மொழிப் பற்று& அமுதத்திற்கான விளக்கங்கள்.மீண்டும் ஒரு நாளும் அந்த நிலை வரக்கூடாதென்பது பாட்டாளிகளின் ஆவா!.

    ReplyDelete
  3. பாவேந்தர் எண்ணியதை சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete