தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 29 October 2015

மத ரீதியான வன்முறை சம்பவங்கள் - விஞ்ஞானிகள் கடிதம்

29-10-2015 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்  " மத ரீதியான வன்முறை சம்பவங்கள் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதம் " பற்றிய விவாதத்தில் சுபவீ

2 comments:

 1. ரவிக்குமார்30 October 2015 at 17:59

  "தர்மபுரியில் நடந்த இளவரசன் விவகாரத்தில், பாமக தங்களை கடுமையாக விமர்சித்த போது,அதை திமுக கண்டுகொள்ளவில்லை என்கிறார் திருமாவளவன். அதேபோன்று தலித் என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இதுவரை திமுக தனது கருத்தை சொல்லவில்லை என்றும் திராவிட கட்சிகள் இதில் ஒதுங்கியே இருப்பதாகவும் குற்றம் சாற்றினார் திருமாவளவன்.இந்நிலையில்,திராவிட கட்சிகள் மனிதாபிமான அடிப்படையில்கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தன்னை தாக்குவதற்கு முயற்சி நடந்தபோதும் அது குறித்து எதுவும் பேசவில்லை,சேஷசமுத்திரம் கலவரம் குறித்து எதுவும் பேசவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.கலைஞர்,ஸ்டாலின் மற்றும் திமுகவினர் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் கட்சியில் கூட தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றும் திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிகூட தலித்துகளுக்கு வழங்கவில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்".

  இதுபோக ஹரியானவில் தலித் குழந்தைகள் எரிக்கப்பட்டதை கண்டித்து போராட வேண்டாம் குறைந்தபட்சம் வார்த்தைகளால் கண்டிக்கக்கூட கலைஞருக்கு மனமில்லை![தாத்ரி சம்பவத்தில் இஸ்லாமியர் கொல்லப்பட்டார் என்பதற்காக கண்டித்தார் என்பதை நினைவில் கொள்ளவும்].இப்படி படுகொலைகளைக் கண்டிக்கக்கூட இரண்டு நிலைப்பாடு வைத்திருக்கிறார் கலைஞர்!ஒருவேளை தமிழகத்தில் தான்,திமுக ஆட்சியில்தான் சுதந்திர இந்தியாவில் இதற்கெல்லாம் முன்னோடியாக குழந்தைகள்,பெண்கள் உட்பட பல தலித்துகள் கிழவெண்மணியில் எரித்துக் கொள்ளப்பட்டனர் அதுதான் காரணமோ என்னமோ?. அப்போதெல்லாம் சுபவீக்கு,பல எழுத்தாளர்களுக்கு, விஞ்ஞானிகளுக்கு உணர்ச்சிகள்,மனிதாபிமானம் வெளிப்படாததிற்கும் காரணமென்னவோ?

  ReplyDelete
 2. ரவிக்குமார்30 October 2015 at 18:06

  இதனால்தான்(மனவேதனையால்) கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா நிகழ்ச்சியில் கருணாநிதியுடனான சந்திப்பை திருமாவளவன்(&வைகோ)தவிர்த்துள்ளனர்.

  ReplyDelete