தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 5 October 2015

கொடிதினும் கொடிது சாதியே!




சில நாள்களுக்கு முன்பு, காட்டுமன்னார்குடிக்கு அருகில், ஆண்டிப்பாளையம் என்னும் ஊரில், வீராசாமி என்பவர் தன் சொந்தப் பேத்தியைக் கொலை செய்திருக்கிறார். அவருடைய பேத்தி ரமணி, கல்லூரியில்  தன் உடன் படிக்கும், வேறு சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனைக் காதலித்ததற்காக, பெற்றோர்கள் தடுத்தும்  கேளாமல், கழுத்தை அறுத்துக் கதறக் கதறக் கொலை செய்திருக்கிறார். காவல் நிலையத்தில் சரண் அடைந்த அவர், 'நான் இந்த ஊரின் நாட்டாண்மை, என் பேத்தியே வேறு சாதியில் ஒருவனைக் காதலிப்பதை என்னால் எப்படிப்  பொறுத்துக் கொள்ள முடியும், இந்தக் கொலை எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்' என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார். 

சாதி என்பது வெறும் ரத்த உறவுதான் என்கின்றனர். உறவுகளையே கொல்லும்  சாதி, யாரைக் காப்பாற்றப் போகிறது? சாதி வெறி பாறையை விடக் கடியது, ராஜபக்ஷேவை விடக் கொடியது! 

8 comments:

  1. எங்கே இருக்கிறது சாதி?

    ரத்தத்திலா அல்லது சதையிலா ?

    அது இருப்பது சாதிச் சான்றிதழில் மட்டும் தான்!!!

    சாதி வெறியர்களின் சாதிப்பற்று, மருத்துமனையில் ரத்தம் தேவைப்படும் போது மட்டும் எங்கோ சென்று மறைந்து கொள்கிறது. எவனாவது, எனக்கு இந்த சாதி ரத்தம்தான் வேனும்னு கேட்ருக்கானா இந்த நாட்டுல?

    ReplyDelete
  2. காடுவெட்டி ரமேஷ்6 October 2015 at 14:41

    அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் உன்னைப் போன்ற திராவிடவியாதிகளின் தூண்டுதலால் இதைப் போன்ற கேடுகெட்ட சம்பவங்கள்,வன்முறைகள், கௌரவக் கொலைகள் நிகழ்கிறது.இது தொடர்ந்தால் கேவலமாக பாதிக்கப்பட்டு,அவமானமுற்ற ஆண்ட பரம்பரைகள் உன்னை ஏரிலும்,செக்கிலும் பூட்டி தார்க்குச்சிப் பாச்சும் காலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.உனக்குத் தேவையென்றால் உன்சாதிப் பெண்களிடம் உன் திறமைகளை நிருபி. ஜீன்ஸ்,டீசர்ட்,கூலிங்கிளாஸ் போட்டு மயக்கி கவர்ந்திழு. ஏன் எங்கள் குல சொத்தான எங்கள் இளம் பெண்களை நாடகக்காதல்,போலிக்காதல் செய்து அபகரிக்க நினைக்கிறாய்.கொஞ்சம் கூட வெட்கம் கிடையாதா உன்னைப் போன்றவர்களுக்கு?

    ReplyDelete
  3. திரு ரமேஷ், கொலை செய்தவரை விட காதல் செய்தவரை திட்டுவது தான் உங்களின் நியமா?...

    உங்கள் சமுகத்தில் ஆண்கள் காதல் செய்யவே இல்லையா ? அதுவும் அவர்களை விட மேல் சாதி என்று கூரும் சாதில்யில் காதல் செய்பவர்களை பற்றி உங்கள் பதில் என்ன ?

    நீங்கள் கூரிய அதே வார்த்தையை, உங்களை விட மேலே என்று கூரும் சாதியினர், சொன்னால் எர்பிர்கள ?

    நாடக காதல், உண்மையான காதல், சாதி ரத்தம், இதெல்லாம் கண்டுபிடிக்க நீங்கள் ஒன்றும் ஓரிமை வந்கிவைகவில்லை!...

    உங்களின் சாதி வெறியாலும், அரசியல், பதவி வெறியாலும், உயிர்களை வாங்கிகொண்டு இருகின்றிர்கள், என்பதை மறவாதீர்!...

    ஒருநாளும் உங்களின் சாதி வெறி, உங்களை கபாற்றாது!...

    ReplyDelete
  4. "காடுவெட்டி" ரமேஷ் - பெயருக்கேற்ற கருத்துகள்..

    ReplyDelete
  5. இ.ஜெயக்குமார் .6 October 2015 at 20:35

    சுபவீ அய்யா ,
    இந்த மாதிரி படங்களை போடும் போது மறைத்து போடவும் .

    - இ.ஜெயக்குமார் .

    ReplyDelete
  6. இங்கு காடுவெட்டி ரமேஷ் என்கிற ஒருவர் கொலையை கொலையாக பார்க்காமல் அதை பரவசமூட்டும் பெரும் சாதனையாகவும் தியாக செயலாகவும் காணுகிறார். அவர் மீண்டும் ஒருமறை அந்த பாவப்பட்ட பெண்ணின் சடலத்தை உற்று பார்க்கவேண்டும். அதில் காணப்படும் சிதைக்கப்பட்ட சதையிலும் ரத்த சிதறலிலும் ஜாதி வெறி கொடுரம் அவருக்கு அதில் புலப்படும் என்று எண்ணுகிறேன். அவள் ஒரு தனி மனுஷியா அதுவல்லாமல் ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு தன் உயிரையே கொடுக்க பிறந்த பாவியா? அவள் அப்படி என்ன குற்றம் செய்துவிட்டாள்? தனக்கென்று ஒருவனை அவன் சரியானவனாக இருப்பான் என்று எண்ணி ஆசை கொண்டுவிட்டாள். அது தவறு என்றால் இந்த மனிதப்பிறவியே தவறுதான். ஏன் இந்த மரணம் அவளுக்கு? மரணம் கொள்ளும் வயதா அவள் வயது? அந்த நாட்டாமை அந்த தனது குலவிளக்கை கதற கதற கழுத்தை அறுக்கும் போது...! அய்யகோ! காடுவெட்டி ரமேஷுக்கு அது பரவசம் ஊட்டும் வேளைபோலும். அந்த நாட்டாமை ஒருவேளை காடுவெட்டி ரமேஷை முன்பே அறிந்து இருந்தால் அந்த கழுத்தறுப்பு வேலையை காடுவெட்டி ரமேஷிடமே கொடுத்திருப்பார். அந்த கனத்தை காடுவெட்டி ரமேஷும் "அடைந்தேன் வாழ்வின் திருநாளை!" என்று பரவசமாக கழுத்தறுத்து முடித்திருப்பார். போனது போகட்டும் இனி எந்த நாட்டாமையாவது கழுத்தறுப்பு வேலைக்கு ஆள் தேவை பட்டால் இதோ காடுவெட்டி ரமேஷ் இருக்கிறார் அவர்களுக்கு உதவ.

    ReplyDelete
  7. தியாகராஜன்9 October 2015 at 02:10

    அக்கிரமானது.அதேபோல் மனுநீதி சோழன் வாழ்ந்த இந்த தமிழ்நாட்டில் அக்கிரமான பசுக்கொலையையும் கண்டியுங்களேன்.

    ReplyDelete
  8. உணவிற்காக விலங்குகள் கொள்ளபடுவது குற்றம் ஆகாது அந்த விலங்கு எண்ணிக்கை குறையாதவரை!...

    பொதுவாக விலங்குகளை பலி இடுதலை சட்ட புர்வமாக தடுத்து நிறுத்தலாம்.

    இங்கு பசு வதை, பசு கொள்ளபடுவது, மதத்தோடு தொடர்பு படுத்தி கட்டுவதும், பசு புனிதம் என்ற கோணத்தில், அவை கொல்லபடுவதை தடுப்பதும், மதவாதமே!...

    மனு நீதி சோழன் கதையில், பசுகாகதான் நீதியா ?
    ஒரு பன்றி அகபடிருந்தால், என்ன வாகிருகும்...?

    ReplyDelete