தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 18 October 2015

வ.உ.சி என்னும் போராளி!

1920ஆம் ஆண்டு அமிர்தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, பல வகைகளில் முதன்மை வாய்ந்தது. நேரு அவர்களின் நூலிலிருந்து கூற வேண்டுமானால், திலகரின் சகாப்தம் நிறைவடைந்ததும், காந்தியின் சகாப்தம் தொடங்கியதும் அந்த மாநாட்டில்தான்! தமிழகத்திலும் அம்மாநாடு சில சலசலப்புகளை ஏற்படுத்தியது. அம்மாநாட்டில் கலந்துகொண்டு அன்னி பெசன்ட் அம்மையார் 1920 ஜனவரி 11 அன்று சென்னை திரும்பினார். அப்போது அவரை வரவேற்க ஓர்  அணியும், எதிர்க்க ஓர் அணியும் காங்கிரஸ் சார்பிலேயே காத்திருந்தன. வரவேற்புக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர் திரு.வி.க அவர்கள். எதிர்ப்பு அணிக்குத் தலைமையேற்று முழக்கமிட்டவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்கள்.

பெசன்ட் அம்மையாரை ஏன் வ.உ.சி எதிர்த்தார்? அன்னி பெசன்ட் இந்திய  விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலும், இந்தியாவில் பார்ப்பன வேதங்களையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் மிகவும் தூக்கிப் பிடித்தார். அதனால்தான் அவரை எதிர்த்து முழக்கமிட்டதோடு, அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் மிகக் கடுமையாக அவர்  பேசினார். 


அரசியல், சமூகம் என இரண்டு தளத்திலும் சரியான பாதையில் நடைபோட்டவர் வ.உ.சி.

3 comments:

  1. ராதா கிருஷ்ணன் பற்றி அறிந்த நம் பிள்ளைகளுக்கு வ.உ.சி. பற்றி அதிகம் தெரியாதது வருந்த தக்கது
    வஉசி பற்றி நிறைய கூட்டங்கள் நடத்தி அவர் புகழ் பரப்ப வேண்டும்

    ReplyDelete
  2. ராதா கிருஷ்ணன் பறிந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் நாம், வஉசி மறந்தது வருந்தகது,

    நன்றி சுபவீ ஐயா

    ReplyDelete