தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 10 November 2015

பகிர்வு - 23


உங்களையும் தெலுங்கர் என்று குறிப்பிட்டு ஒரு நூலில் எழுதியுள்ளார்களாமே?
- முத்தையா குமரன், சென்னை -83

விடை: ஆம். அண்மையில் உதயன் என்னும் நண்பர் ஒருவர் அதனை மின் அஞ்சல் வழி எனக்கு அனுப்பியிருந்தார். அது குறித்து 03.11.2015 அன்று சென்னையில் நடைபெற்ற கவிஞர் முடியரசன் விழாவில் பேசினேன்.அதனைக் கீழே தந்துள்ளேன். 

நான் எப்படித் தெலுங்கன் என்பதை 'அறிவியல் பூர்வமாக' அவர்கள் விளக்கியுள்ளனர். பெங்களூரு குணாவின் நண்பர் சொன்னதாக அந்தச் செய்தியைத் தமிழின மீட்சி இரண்டாம் பதிப்பில் வெளியிட்டுள்ளனர் என்பது தகவல். 
நான் ஜாதியற்றவன் என்று பலமுறை கூறினாலும், பிறப்பால் எனக்கு ஒரு ஜாதி முத்திரை குத்தி, அந்தச் சாதியினர் பலர் தெலுங்கர்கள் என்பதே அவர்களின் வாதமாக உள்ளது.  நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பூம்புகாரிலிருந்து செட்டிநாட்டுப் பக்கம் புலம் பெயர்ந்தபோது, அவர்கள் வீடுகளில் வேலை பார்த்த நரிக்குறவர் சமூகப் பெண்களுக்கும், அவர்களுக்கும் இடையில் உறவு ஏற்பட்டுக் குழந்தைகள் பிறந்தனவாம். அவர்களில் ஒருவன்தான் சுபவீ என்றும், சுபவீ முகத்தைப் பார்த்தாலே நரிக்குறவன் சாயல் தெரிவதாகவும் 'கண்டுபிடித்து' எழுதியுள்ளனர். அப்பாடா, எவ்வளவு பெரிய ஆராய்ச்சி!

நரிக்குறவன் என்பதில் இழிவு ஒன்றுமில்லை. எதற்கும் அஞ்சாத, எந்த ஊரிலும் தமக்கென்று ஒரு பிடி மண்ணையும் விலைக்கு வாங்கிக் கொள்ளாத நரிக்குறவராய் இருப்பதில் எனக்குப் பெருமையே! ஒருவேளை, என் முகத்தில் பார்ப்பனரின் சாயல் தெரிகிறது என்று அவர்கள் எழுதியிருந்தால்தான் நான் வெட்கப்பட்டிருப்பேன். அடுத்த கூட்டத்திற்கு என்னை அழைப்பவர்கள் கூட,இனிமேல் பேராசிரியர் சுபவீ என்பதற்குப் பதிலாக, நரிக்குறவன் சுபவீ என்று போடலாம். எனக்கு மகிழ்ச்சியே!

ஆனாலும் அந்த மேதாவிகளிடம் எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன. ஒன்று, இதற்கும் என் அரசியலுக்கும் என்ன தொடர்பு? இரண்டாவது, நரிக்குறவர்களுக்கும் தெலுங்குக்கும் என்ன்ன தொடர்பு?

சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு, பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தியத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் குடிபெயர்ந்தவர்கள் நரிக்குறவர்கள் என்பதும், அவர்களின் தாய்மொழி வாக்ரி போலி என்பதும்தான் வரலாறு. அவர்களுக்கும், ஆந்திராவிற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நரிக்குறவர்களுக்குத் தெலுங்கு தெரியாது. இந்த மேதாவிகளுக்கு வரலாறு தெரியாது என்பதே!


21 comments:

 1. ///நரிக்குறவர்களுக்குத் தெலுங்கு தெரியாது. இந்த மேதாவிகளுக்கு வரலாறு தெரியாது///

  வரலாறு தெரிந்தும் திரித்துக் கூறுவது ஒருவகை பிரதம கலை.

  ReplyDelete
 2. முட்டாள்கள். ஒவ்வொருவரின் பூர்வீகம் பற்றி ஆராய்ச்சி செய்வதை விட்டால் இவர்களுக்கு வேறு வேலை கிடையாதா? வெட்டிப் பயல்கள்

  ReplyDelete
 3. விட்டால் பாரப்பனரகள் எல்லாம் பூர்வகுடிகள் என்பது போலவும் நாமெல்லாம் குடியேறியவர்கள் மன்னிக்கவும் சீமான் மணியரசன் மொழியில் வந்தேரிகள் என்பதைப்போலவும் சித்தரிப்பார்கள் போல ..பெரியார் தோன்றாமல் இருந்தால் நம் கதி அதோ (அ)கதிதான்.,

  ReplyDelete
 4. நீ நரிக்குறவனோ அல்லது எட்டப்பன் பரம்பரையான நாட்டுக்கொட்டை செட்டிப் பயலோ அது எதுவாவும் இருக்கலாம்,ஆனா உன் மூஞ்சியைப் பார்த்து தெருவோரம் பேளரவ கூட எந்திருக்கமாட்டா!.அது தான் உன் லட்சணம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அறியாமை அரசியல் ,வரலாறு இரண்டையும் படித்தால் தீரும் படி படி

   Delete
  2. ரமேஷ், நீங்கள் ஏற்கனவே "காடுவெட்டி ரமேஷ்" என்ற பெயர்ரில் அன்னாகரிகமாக பேசியவர்தான் என்று நினைக்கின்றேன்...அது சரி என்றால்...

   உங்களுக்கும் உங்கள் கட்சியை சார்ந்தவர்களுக்கும் இருக்கும் மரியாதையை விட, நட்பெயர்ரை விட...சுப வீ அவர்களுக்கு வெகு மக்களிடம் அதிகம் உண்டு...

   இப்படி அருவருப்பாக comment போடுவதற்கு இது இடம் இல்லை!...
   வேண்டுமென்றால் உங்கள் கட்சி கூட்டங்களுக்கு சென்று பேசுங்கள்...உங்களுக்கு நிறைய துணைகள் கிடைக்கும், மேடைக்கு மேலும், கிழும்!...

   Delete
  3. திருவாளர் ரமேஷ் அவர்களே,

   தாங்கள் குறை கூறும் எட்டப்பன், நாட்டு கோட்டை செட்டியார் இனத்தை சேர்ந்தவர் அல்ல.

   நாட்டு கோட்டை செட்டியார் என்ற பச்சை தமிழினம் தமிழ் மண்ணிற்கு செய்துள்ள குறிப்பிடத்தக்க சேவைகள்:

   1. கல்விச் சாலைகளை அமைத்து, கல்வி நிறுவனங்களைத் திறந்து, கல்வியை அனைவருக்கும் அளித்துள்ளது.

   2. பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி, வேலை வாய்ப்பு கொடுத்து தமிழ் சமூகத்திற்கு பாதுகாப்பு அளித்துள்ளது.

   3. அந்த தமிழினத்தினர் , பெரும் செல்வந்தர்களானும், எளிமையான வாழ்க்கையை வாழ்வர். அதிக சைவ இறை நம்பிக்கை உடையவர்கள்.

   4. அவர்கள் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், அழகிய நகர்களை காரைக்குடி சுற்று வட்டாரத்தில் உருவாக்கியுள்ளனர்.

   5. அந்த சமூகத்தில் இருந்து வந்துள்ள அய்யா சுபவீ அவர்கள், ஒட்டு மொத்த தமிழினத்திற்காக குரல் கொடுப்பது, தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமையாகும்

   Delete
  4. Your post proves that you are most dirtiest person

   Delete
 5. அய்யா நான் ஐரோப்பாவில் பல இடங்களிலும் ஜிப்சி இனத்தவரின் வாழ்க்கையை கண்டுள்ளேன். பாவம் அவர்களை ஐரோப்பிய பிரபுத்துவ சமுதாயம் வேட்டைஆடியது இன்றுவரை அவர்களின் கதை சரியாக உலகத்துக்கு தெரியாத கதை, அவர்கள் பேசும் மொழி பல இந்திய வார்த்தைகளுடன் திருபு பட்ட வார்த்தைகளாக இருக்கிறது. அவர்களின் இசை அச்சுட்டாக கர்நாடக ராகங்களில் அமைந்திருப்பதையும் அவதானித்தேன் . இவர்களின் இந்த அறிவை கிரகித்துதான் மேற்கு நாட்டு சாஸ்திரீய சங்கீதம் வளம்பெர்றது அவர்களிடம் இருந்துதான் பலவிதமான விஞ்ஞான ஐரோப்பிய விஞ்ஞான சமுகம் பெற்றதாக கூட தற்போது பலரும் கருதுகிறார்கள். ஐரோப்பிய மேட்டுகுடியானது தமது கண்டுபிடிப்புகளில் நாடோடி நரிக்குறவர்களின் (Gypsy) பங்களிப்பை அங்கீகரிக்கவில்லை,
  அய்யா தங்களையும் அந்த பட்டியலில் அறிவுகொழுந்துகள் சேர்த்துவிட்டார்கள் .இனி தாங்கள் அவர்களுக்காகவும் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டீர்கள் . வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. காலி டப்பாக்களின் உளறல்கள்!!. நாம் அறிவு வசப்பட்டு வரட்டு கூச்சலை புறந்தள்ளுவோம்

  ReplyDelete
 7. இரத்தினவேல்12 November 2015 at 11:08

  இந்தக் கழிசடைகளின், பிறப்பு ’ஆராய்ச்சி’க்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை

  ReplyDelete
 8. திராவிட இயக்கத்தை எதிர்க்க ஒரே வழி இவர்களுக்கு தமிழ் சமூதாயத்திற்கு பாடுபட்ட பாடுபடுகிற எல்லோரையும் தமிழர் இல்லை என்று கூறி பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு வலு சேர்க்கிறார்கள்
  பேரறிஞர் கூற்றுப்படி யார் தமிழர் என்றால்
  " மொழி , விழி , வழி " படி யார் செயல் படுகிறார்களோ அவர்களே தமிழர்கள். வெறும் மொழியை மட்டும் கணக்கிலோ அல்லது விழியை சேர்த்து கணக்கிலோ எடுத்தால் தமிழர் என்ற பட்டியலில் சேர்க்க முடியாது ஆனால் கடைசியாக உள்ள " வழி" யை சேர்த்தால் தான் அந்த பட்டியல் நிறைவடையும் அது சிறு தொகை ஆனாலும் நிறைவான தொகை அதில் தெலுங்கர் கன்னடர் மலையாளிகளுக்கும் இடம் உண்டு ஆனால் இன-ரத்த பரிசோதனை நடத்துபவர்களுக்கு இடம் இல்லை

  ReplyDelete
 9. கணேஷ்வேல்17 November 2015 at 15:09

  திராவிட இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் கருத்தியல் வழியாக எதிர்க்கமுடியாத கருத்து காலாவதியானவர்களின் குறுக்கு வழியே இது மாதிரியான தாக்குதல்கள்.

  மனிதனை மனிதனாகப் பார்க்க கற்றுக் கொடுத்த சுபவீ அய்யாவை எந்த அடையாளத்துக்குள்ளும் அடைத்துவிட முடியாது, அது 'தமிழன்' என்னும் அடையாளமாக இருந்தாலும்.

  ReplyDelete
 10. Iyya subavee avargale neengal yen eppoluthum parpanarai ethirkiringa?jathi illa illa endru koorum neengale ippadi pesuvathu sariya? Etthanaiyo piramanarkal Nammodu serndhu vazhkindarkal avarkal yarum nammala jathi koori azhaipathillaiye... Neenga ippadi pesuvathu ungalin nadu nilamai kku kalangam yerpaduthm. Bramin also a human.. Avargalum namma nattu kudigale....ungalai visaricha vargalai Neenga thandikalam adu unga urimai.... But..... What you have done is wrong..... Anyway up to you to take my words. Thank-you

  ReplyDelete
 11. எனக்கு தமிழன் என்று அழைபதனை விட திராவிடன் என்று அழைபதுதான் பிடிக்கிறது. பெருந்தன்மை , இரக்கம் ஆகிய குணங்கள் திராவிடருடையது. இதற்கு நேரெதிர் ஆரியர்களுடையது. அவர்களுக்கு அழிப்பது, தட்டி பறிப்பது தான் வாழ்கையின் உயர்ந்த குணங்கள். ஒருவனின் குணத்தை வைத்துதான் அவன் ஆரியனா திராவிடனா என தீர்மானிக்க வேண்டியதாயிருக்கிறது. பார்பனர்களும் சூத்திரர்களும் எந்த மாநிலத்தில் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் ஆரியர்கள்தான். தமிழகத்தில் தமிழ் பேசும் ஆரியனும் வேறு மொழி பேசிய அல்லது பேசும் திராவிடனும் இருக்கிறார்கள். உண்மையான (கலப்பில்லாத)திராவிடர்கள் நேற்று எந்த மொழி பேசினாலும் தமிழ் மொழிக்கு அவர்களை தமிழே இழுத்து வந்து விடும். ஒரு உதாரணம் கிரிக்கெட் வீரர் தோனி . அதே போல ஆரியர்கள் எந்த மொழி பேசினாலும் அவர்கள் இறுதியில் சமஸ்க்ரிதம் அல்லது சமஸ்க்ரிதம் கலந்த மொழி வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

  ReplyDelete
 12. Nalla manithargalai, nalla vishayathai eduthu solvatharkukuda atkal ilamal thindadugirom, ivaraipondru nalla arivai pugatubavare kuraivu, mudalil periyavarai madika katrukollungal,

  ReplyDelete
 13. தேவையில்லை எதமிழ் எழுத்துக்கள்,உறுவாக மூலம் வேறில்லை என்பதற்கு வலிமையான உதாரணம் எழுத்துக்கள் முழுவதும் முக வடிவத்தை ஒத்திருக்கிறதிலிருந்து புரிந்துகொள்ளலாம். அ, என்ற எழுத்து நாம் நமது வாயை குறைவாக திறக்கும் போதும் ஆ என்ற எழுத்து நாம் நமது வாயை.அதிகமாக தறக்கும் போதும் இ என்பது மூக்குடன் வாய் இழுப்பதைசேர்த்தும். உ, என்பது வாயை குவிக்கும் போது உள்ள அமைப்பிலிருந்தும் எ, என்னும் எழத்து உதடு மூக்கு வாய்திறக்கும் போதும் அதே போன்ற ஏ ,யும் ஐ என்ற எழுத்து இரண்டு கண்களையும் இருபக்க கண்ணங்களையும் சேர்த்தும் அமையப்பெறுவதும் ஒ என்ற எழுத்து வாய் மேல் நோக்கித் திரப்பதிலிருந்தும் சேர்த்தும் அமையப்பெறுவதும் இதைப் போன்றே நாம் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் போது நம முகத்தில் ஏற்படும் வடிவ மாற்றத்தை அடிப்படையாகக் கொணடே நம் தமிழ்எழுத்துககள் முழுவதும் அமைந்துள்ளதை அறியலாம். இதிலிருந்து தமிழர்களால் தாங்களாகவே உருவாககப்பட்டது தெரிகிறது. மூக்கு வாயின் இருபகுதி, ங ,மூக்கு மற்றும் மேல் கீல் உதடுகள்இருக்கும் நிலை. ட் வாய் நாக்கு மேலண்ணத்தை தொடும் புள்ளி. ந,மூக்கு மற்றும் மேலுதடு வலைவு இப்படி ஒவவொரு எழுத்துக்கும் அது தோன்றிய விதத்தின் காரணங்களை எவரும் ஊகிததறிய முடிவதால் தமிழ் எழுத்து தோன்ற வேரெதுவும் ன்பது புரிகிறது.

  ReplyDelete
 14. மனிதனின் ஒவ்வொரு மரபணுவிலும் குறைந்தது 12 வகையான இணங்களின் கலப்பு உள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அப்படி இருக்கையில் தோழர் சுபவீ அவர்களை விமர்ச்சிப்பவர்கள் தாங்கள் வேறு எந்த கலப்பும் இல்லாத தணித்த மரபணுவைக் கொண்டவர்கள் என்று உறுதியளிப்பாரர்களா?

  ReplyDelete
 15. ramesh avarkale
  sakipinmayin mothu uruvama neengal?neengal dravidathayim,subaveeyin puthagankalayum avasiyam padikanum

  ReplyDelete
 16. Mr.ramesh,
  Please avoid indecent comments in public media.
  If you have time to read out the History of India and Tamilnadu in particular and if you are educated you will be able to find out the need for the great role of Thanthai Periyar in 60s and Mr.Subavee is one of the true followers of Thanthai Periyar.vellaivaranan

  ReplyDelete
 17. சுபவீ அய்யா, வணக்கம் , என் கேள்விகளுக்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். (எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் குடும்பமும் என்து சொந்தங்கள் அனைவரும் திமுக விற்கே வாக்குகள் செலுத்தியுள்ளனர்).
  1) திமுக தலைவர்கள் நல்லவர்களா?நேர்மையானவர்களா?
  2) தமிழர்களை விட தெலுங்கருக்கு மறைமுகமாக செய்து இருக்கிறாரா? இல்லையா?
  3) தமிழ் நாட்டில் தெலுங்கு உகாதிக்கு விடுமுறை காரணம் என்ன?
  4) திமுக ஆட்சியில் ஏன் ஏரி குளம் சுத்தம் செய்யவில்லை?(என் கிராமத்தில் இதுவரை ஏரி குளம் தூர் வாரவில்லை.)
  5) இலவசம் எதற்கு இருக்கவேண்டுமோ அதற்கு இல்லை ஏன்?
  6) உங்கள் பார்வையில் மிகச்சிறந்த தலைவரா? திமுக தலைவர், தமிழகத்திற்கு ...
  இல்லை தமிழ் மக்களுக்கு.
  ஐயா, பிற மொழி காரர்கள் தமிழை நன்கு கற்றறிந்தாலும் அவன் தமிழனுக்கு எந்த விதத்திலும் உதவிகரமாக இருக்கமாட்டார்கள்.
  அவர்கள் மொழியினறுகே உபகரமாக இருப்பார்கள். அவர்களுடைய பேச்சு மட்டும் தமிழ் தமிழ் என்று உதட்டளவில் மட்டும் தான் இருக்கும். உண்மை தமிழனை விட அதிக பற்றுடன் பேசுவார் , அவர்கள் நெஞ்சமெல்லாம் வஞ்சமாகத்தான்
  இருக்கும். என் மொழியை கற்று கொண்டு எங்களை அடிமைப்படுதுகிறார்கள். இது என் நிறுவனத்தில் கீழ்மட்ட அளவில் நடந்து வருகிறது. ஐயா நீங்கள் எத்தனையோ இந்திய மொழி பேசுவோர் களை சந்தித்து இருப்பிர்கள் அவர்கள் எல்லாம் உயர்மட்டத்தில் உள்ள​வர்கள். அவர்களுக்கு மொழி பற்றிய கவலைகள் இல்லை. ஆனால் கீழ் மட்ட அளவில் அப்படி இல்லை.
  இப்படிக்கு
  பிரகதீஸ்வரன்.ப
  சுபவீ நேசன்.

  ReplyDelete