தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 12 November 2015

அன்பு நண்பர் அரணமுறுவல்

25 ஆண்டுகளுக்கு முன்னால், நான் சந்தித்த நல்ல நண்பர்களில் ஒருவர் அரணமுறுவல். 1991 என்று நினைவு. பாட்டாளி மக்கள் கட்சியின் மீது என் போன்றோர்  நம்பிக்கை வைத்திருந்த காலம். அது  சாதிக் கட்சியன்று, சமூக நீதிக்கான கட்சி என்ற எண்ணத்தை, அப்போது எங்களில் ஒருவராகக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் இராசேந்திரன் (பேராசிரியர் தீரன்தான்) ஏற்படுத்தியிருந்தார். அந்த நம்பிக்கையில், பா.ம.க. அன்று நடத்திய  மாநாட்டிற்கு ஆதரவாக, தேனாம்பேட்டையிலிருந்த அக்கட்சி அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. அங்குதான் நண்பர் அரணமுறுவலைப் பார்த்தேன். அம்மாநாட்டு மலரை உருவாக்கும் பணியில் நாங்கள்  பலரும் இணைந்திருந்தோம். எனினும் என்னைப் போன்று ஒரு சிலர் பெயரளவுக்குத்தான்  இருந்தோம். அனைத்துப்  பணிகளையும் எடுத்துப் போட்டுக் கொண்டு பணியாற்றியவர் அவர்தான்.  அம்மாநாட்டு மலரின் ஒவ்வொரு பக்கத்திலும் அவருடைய உழைப்பைப் பார்க்க முடியும்.


அதன்பிறகு, இன்று அலிகார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் து. மூர்த்தி, அரணமுறுவல் இருவரும் என் சமூக அரசியல் பார்வையைச் செதுக்கியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் என்று கூறலாம்.அதனை இங்கு நான் நன்றியுடன் பதிவு செய்கிறேன். 

இருப்பினும், திராவிட இயக்கத்திற்கு  எதிரான அவருடைய நோக்கும், போக்கும் எங்களிடையே ஓர் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. நான் அவரைக் கண்டும், பேசியும் ஆண்டுகள் பல ஆகிவிட்டன. என்றாலும், திடீரென்று வந்த அவருடைய மரணச் செய்தி,எனக்குள் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியது. 

பாதை எதுவாக இருந்தாலும், நம் மொழிக்காகவும், நம் இனத்திற்காகவும், தன்னலமின்றிப் பொது நோக்கோடு அயர்வின்றிப் பாடுபட்ட ஒரு தோழரை நாடு இழந்திருக்கிறது. அவருக்கு நம் வீர வணக்கம்!  


6 comments:

 1. எனது வீர வணக்கமும்

  ReplyDelete
 2. அரணமுறுவல் மரணத்திற்கு துக்கம்,இரங்கல் தெரிவிக்குமிடத்தில் ஏன் வீண் அரசியல் வெறுப்புப் பேச்சு(சாதிக் கட்சி....போன்ற பேச்சுக்கள்). கொறப்பயங்கிறது சரியாதான் இருக்கு...நீ இதைச் சொல்லணுங்கிற சாக்கிற்காகத்தான் உன்னுடைய போலியான துக்கம்,இரங்கலெல்லாம். தேவையில்லாம ஆண்ட பரம்பரையை சீண்டாதே;உன்னை ஏர்கலப்பையில பூட்டி தார்க்குச்சியால சீண்டத்தூண்டாதே.

  ReplyDelete
  Replies
  1. ஒருவேளை சோத்துக்கு அடுத்தவர்களை நம்பி வாழும் நீங்கள் ஆண்டபரம்பரை என்பது மிக கேவலமான ஒன்று, இந்த மிதப்புதான் உங்களை மற்டவர்களிடம் கையேந்தும் நிலைமைக்கு கொண்டுவந்துள்ளது,
   அவர் மிகவும் மென்மையாக சாதிகட்சி என்று குறிப்புட்டு உள்ளார், உண்மையாக சொல்லப்போனால் வரதட்சனை கொடுமை, பாலியல் கொடுமையைவிட, பெண்கள் பாதிக்கபடுவது ராமதாஸ் உண்டாக்கிய சாதி வன்மம் தான். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ஆயிரம் தமிழ்தேசிய நாடகம் நடத்தினாலும் இந்த கரை அழியாது .

   Delete