தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 23 November 2015

முதல் கஞ்சா யுத்தம்


19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், சீனப் பேரரசைப் பிரித்திஷ் சாம்ராஜ்யத்தால் கூட நெருங்க முடியவில்லை.ஆனால் இந்தியாவில் வணிகம் செய்துவந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், வங்கத்தின் பருத்திக் காடுகளில் கஞ்சா செடி வளர்த்து, அதனைச் சீனாவில் கொண்டுபோய் விற்பனை செய்தனர். ஒரே ஆண்டில், 1400 டன் கஞ்சாவை அவர்களால், சீனத்தில்  விற்பனை செய்ய முடிந்தது அதற்குப்  பிறகு, சீனப் பேரரசே குலைந்து போயிற்று. 1839-42 ஆண்டுக் காலகட்டத்தை, முதல் கஞ்சா யுத்தம் (First opium war) என்று வரலாறு குறிக்கிறது. 1850களின் இறுதியில் இரண்டாவது கஞ்சா யுத்தம் நடைபெற்றது.அப்போதுதான் ஐந்து துறைமுகங்களைச் சீனா, இங்கிலாந்துக்குத் திறந்துவிட்டது. அவற்றுள் ஒன்றுதான் ஹாங்காங். அதனையும் சீனா தாரை வார்த்துக் கொடுத்தது. அந்தத் தீவை 99 ஆண்டுகள் இங்கிலாந்து நாடு குத்தகையில் வைத்திருந்தது, 1997இல்தான்  அது விடுவிக்கப்பட்டது. 

எந்த தேசம் போதைக்கு அடிமைப்படுகிறதோ, அந்த தேசம் அந்நியருக்கும் அடிமைப்படும் என்பதையே ஹாங்காங் நமக்கு உணர்த்துகிறது.


5 comments:

 1. உண்மையில் ஹாங்காங் சுதந்திரம் பெற்றதால்தான் அதன் சிறப்பை இழந்ததது

  ReplyDelete
 2. ஆடியபாதம்23 November 2015 at 20:14

  கஞ்சா என்பது அதிக போதையில்லாத Hashish;Opium என்பது உலகெங்கும் தடை செயயப்பட்ட அதிக போதையுள்ள அபின்(heroin வகையறா),எனவே நடந்தது அபின் யுத்தம் கஞ்சா யுத்தமல்ல!.தேசம் போதைக்கு அடிமைப்படுகிறதென்றாலும் யாருக்கென்பது முக்கியம்.அங்கு வெள்ளையருக்கு அபினால் அடிமைப்பட்டதால் ஹாங்காங்கிற்கு அசுர வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்.இங்கு சுரண்டல் திராவிட கொள்ளையர்களுக்கு சாராயத்தால் அடிமைப்பட்டதால் தமிழகத்திற்கு(வாழவேண்டிய பல தமிழ் இளைஞர்களுக்கு)இந்த (போதை)வீழ்ச்சி மற்றும் பின்னேற்றம்!.

  ReplyDelete
  Replies
  1. திரு ஆடியபாதம் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல், ஒபியம் என்பதை கஞ்சா என்று கூறுவதை விட அபின் என்று சொல்வதுதான் சரி. பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

   எனினும், உடனே எந்தத் தொடர்பும் இன்றி 'சுரண்டல் திராவிடம்' என்று தொடங்குவது, ஒருவிதமான திராவிட எதிர்ப்பு நோயைத்தான் காட்டுகிறது. இந்த நோய் அபினை விட ஆபத்தானது!

   Delete
 3. சத்தம் போடாமல் தமிழகம் அழிந்து கொண்டிருக்கிறது, மதுவால் அழிகிறது.
  கல்வியில், தொழில்துறையில் என்று எந்த முன்னேறம் ஏற்பட்டாலும் அவை எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.
  எங்கோ தொலைவில் இருந்த மது அபாயம் வீட்டுக்கு உள்ளேயே வந்து விட்டது. மதுவால் ஏற்பட்டது கொண்டிருக்கும் தீமையின் அளவை இன்னும் தமிழக அரசு அறியாதது மிகவும் வேதனையான விடயம்,

  நல்ல மனம் கொண்ட மக்கள் எல்லோரும் Whistle Blowers ஆக மதுவிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், கண்முன்னே நடக்கும் தவறை சுட்டி காட்டாமல் நாம் என்ன செய்வது என்று சும்மா இருந்து விட்டால் அது பின்பு உங்கள் வீட்டிற்கும் வந்துவிடும்.

  சீனாவில் ஏற்பட்ட Opium War மிக மிக சரியான உதாரணமாகும். கண்கேட்ட பின்புதான் சூரியனை பார்ப்பேன் என்பது தமிழர் கலாசாரம் போலும்?

  அய்யா கஞ்சா என்பது Hermp எனப்படும் ஒரு புல்வகையை சார்ந்தது என்று எண்ணுகிறேன்,
  இந்த அபின் அல்லது opium என்பது poppy seeds இல் இருந்து எடுக்கப்படுவது என்றெண்ணுகிறேன், இது பற்றி எனக்கும் சரியாக தெரியாது.

  ReplyDelete
 4. போதையில் பெரும்போதை மத,சாதி போதை.

  ReplyDelete