தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 19 January 2016

ஓய்ந்து போனது ஓர் இசை

நாட்டுப்புறப் பாடகர், நல்ல கலைஞர், பேராசிரியர் கே.ஏ .குணசேகரன் 17.01.16 அன்று  மறைந்து விட்டார் என்ற செய்தி இடியாய் வந்து தாக்கியது. நான் இப்போது லண்டனில் இருப்பதால், அவருடைய இறுதி நிகழ்விலும் கலந்து கொள்ள இயலவில்லை. , இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு கருத்தரங்கிற்காக நானும், அவரும் இன்னும் பேராசிரியர்கள் பலரும் லண்டன் வந்திருந்தோம். அப்போது அவருடன் நிறையப் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. சங்க இலக்கியநூல் ஒன்றுக்கு அவர் எழுதியிருந்த புதிய உரை ஒன்றினை அப்போது கொடுத்தார். கலைஞர் தொலைக்காட்சியில் அந்நூல் குறித்து நான் அறிமுகம் செய்து பேசிய அந்த நாளில், அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு,மிக நெகிழ்வாக நன்றி சொன்னார்.

தோழர் இன்குலாபின் 'மனுசங்கடா....' பாடலை அவர் பாடியிருந்த விதம் அனைவரையும் கவர்ந்திடக்கூடிய ஒன்று. அந்தப் பாடல் மூலம்தான் அவரை நான் முதலில் அறிந்து கொண்டேன். அதன்பிறகு நிறைய சந்திப்புகள்.


எண்ணிப்பார்க்கையில் வேதனையாய்  இருக்கிறது. ஓய்ந்து போய்விட்டதே ஒடுக்கப்பட்ட மக்களின் இசை ஒன்று!!

1 comment:

  1. ஓலைக்குடிசைகளில் வாழ்ந்த மக்களின் ஒடிந்துபோன வாழ்க்கை முறைகளை உணர்ச்சியுடன் பாடிய தாலாட்டுப்பாடகரின் மறைவு நெஞ்சில் கணத்த உணர்வை ஏற்படுத்துகிறது

    ReplyDelete