தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 20 January 2016

நீதி செத்தது, சாதி வென்றது

சென்ற வாரம், அண்ணல் அம்பேத்கர் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் திருத்துறைப்பூண்டி சென்றிருந்தேன். பேசிவிட்டுத் திரும்பும்போதுதான் அந்த மானுட அவமானம் குறித்து நண்பர்கள் கூறினர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை - மாவூர் அருகே, திருநாள் கொண்டசேரி என்று ஓர் ஊர். அங்கே நவம்பர் மாத இறுதியில் குஞ்சம்மாள் என்ற முதிய அம்மையார் ஒருவரும், டிசம்பர் முதல் வாரம் அவருடைய கணவரும் இறந்து போயுள்ளனர். இருவரும் தலித் மக்கள் என்பதால் அவர்களுடைய உடல்களை ஊர் வழியாக எடுத்துச் செல்ல ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேரன், உயர்நீதி மன்றம் சென்று இந்த அநீதிக்கு எதிராக ஆணை பெற்று வந்துள்ளார். ஆனால் அந்த ஆணைக்கும் எந்த மதிப்புமில்லை. நீதியைக் காலில் போட்டு மிதித்துச் சாதி கொக்கரித்துள்ளது. அதற்குக் காவல்துறை துணை போயிருக்கிறது. இறுதியில், வயல் வரப்பு வழியாக எடுத்துச் சென்று உடல்களை அடக்கம்செய்துள்ளனர்.


சாதியை ஒழிக்காதவரை, நாம் நாகரிகமானவர்கள் என்றும்,நம் பண்பாடு மிக உயர்ந்தது என்றும் சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்கில்லை. 

18 comments:

  1. ம.கணேஷ்வேல்20 January 2016 at 17:23

    தங்கள் கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன் அய்யா!!! சாதியை ஒழிக்காதவரை, நாம் நாகரிகமானவர்கள் என்றும்,நம் பண்பாடு மிக உயர்ந்தது என்றும் சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்கில்லை.

    ReplyDelete
  2. இது போகட்டும் ஏன் என்றால் இந்த அவமதிப்பு சவத்திற்குதான்,ஆனால் உயிருள்ள தலித்துக்களும் நடமாடும் சவமாகத்தான் ஆதிக்க சாதிகளால் நடத்தப்படுகிறார்கள்.தலித்துக்கள் தங்களுடைய தாழ்ந்த நிலை பற்றி ஒரு போதும் புகார் கூறாத அளவுக்கு புறச்சமூகச் சூழ்நிலைகள் அவர்களைப் பழக்கியிருக்கிறது.அதனால்தான் பிறசாதி சகமனிதனின் மலமள்ளுவதற்க்குக்கூட அவன் கூச்சப்படுவதி்லை! (சக இனத்தின் மலமள்ளுவதென்பது வேறு எந்த மனித சமூகம் மட்டுமல்ல மிருகங்களிடம் கூட இந்த ஈன,இழி புத்தி இல்லை!.இது அப்பட்டமான,அருவருக்கத்தக்க, கேவலமான சமூகநீதி&மனித உரிமை மீறலாகும்!. அதற்கு தமிழகத்தில் பெரிய போராட்டங்கள்,எதிர்ப்புகள் எதுவும் பெரியார் முதல் இன்றைய தலைவர்கள் வரை செய்யாதது வேதனைக்குரிய விடயமாகும்!).அதோடு அதைவிட மிக ஈனத்தனமாக அள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போக வேண்டுமென்தைக்கூட அவன் எதிர்ப்பதி்ல்லை!(அவன் மூஞ்சியைப் பார்த்தால் சாதி கன்னிப்பெண்களுக்கு தோஷம் என்ற காரணத்தால் அனுமதியில்லை!,அவள் மலத்தைப் அப்புறப்படுத்தத்தான் அவனுக்கு அனுமதி மூஞ்சியைப் பார்க்க அல்ல!,என்ன இரட்டைக் கயமைத்தனமான மனநிலை இந்த ஆதிக்க சாதிகளுக்கு).மனிதனுக்கு சகமனிதன் தர வேண்டிய சாதாரண மரியாதை கொடுத்து மற்றவர்கள் தங்களை நடத்துமாறு நிர்ப்பந்தம் செய்வது பற்றியோ,அதன் மூலம் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முயல்வது பற்றியோ அவர்களில் பலர் இன்றும் கனவு கூடக் காண்பதில்லை.இத்தகைய அவலநிலையில் வாழவே தாங்கள் பிறந்திருக்கிறோம் என்ற எண்ணம் அவர்களின் மனத்தில் இங்குள்ள சமூகச் சூழ்நிலையால் ஆழ்ந்து பதிந்து போயிருக்கிறது.அதனால் தங்கள் விதியை மாற்ற முடியும் என்ற எண்ணம் இதைப்போல ஒரு சில சம்பவங்களைத் தவிர அவர்களில் பலருக்கு ஒருபோதும் தோன்றுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. சிங்கப்பூரில் இந்த வேலைகளை எல்லா நிலையில் இருக்கும் மக்களும் செய்வதனை பார்க்க முடியும். நான் கூட இந்த வேலை செய்யும் அழகான சீன பெண்ணை வியந்து பார்த்து இருக்கிறேன். ஆனால் அங்கு சம்பளம் மற்ற எல்லா வேலைகளை செய்பவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. சம்பளம் இந்தியாவில்தான் படித்தவர்களுக்கு என்று ஒரு விதமாகவும் படிக்காதவர்களுக்கு ஒரு மாதிரியும் உள்ளது. இதனை உருவாக்கியது பிராமணர்கள். தங்களுக்கு வசதியாக இருந்ததால் மற்ற சாதியினரும் அதனை பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். எல்லா ஜாதியினரும் இந்த வேலைக்கு ஒரு நாள் வருவார்கள். அன்று சம்பளம் சிங்கபூரிலோ அல்லது வெளி நாடுகளில் உள்ளது மாதிரி அதிக வித்தியாசம் இல்லாமல் மாற்றபட வேண்டும். இது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது. கவலை வேண்டாம்.

      Delete
    2. “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்..
      தப்புத் தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்”
      என்ற பாடல் குறித்து விஜய் ஆண்டனி
      ‘மன்னிப்பு‘ கேட்டு அறிக்கை விட்டிருக்கிறார்.
      உண்மையில் அது மன்னிப்பே அல்ல.
      மமதை.
      ‘கோட்டா‘ பாடலை நாம் தவறாகப் புரிந்து கொண்டோமாம். நம் புரிதலிலுள்ள குறைபாட்டைக் களைய, அய்யா பெரிய மனசு பண்ணி அந்த வார்த்தையை “காசு குடுத்து சீட்ட வாங்கி“ என்று மாற்றியிருக்கிறாராம்.
      கொழுப்பெடுத்துப் பாடியதும் அல்லாமல்,
      பழியையும் நம் தலையில் துாக்கிப்போட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
      திமிர் பிடித்தவரின் இந்தக் கிரிமினல்தனத்தை விட, அதை மன்னிப்பாகக் கொண்டாடுபவர்களின் பாமரத்தனம்தான் நமக்கு எரிச்சலாக இருக்கிறது.
      பீப் பாடலுக்கு இதுவரை வருத்தப்படாத
      சிம்பு குடும்பமும்,
      ‘கோட்டா‘ பாடலுக்கு இப்போது ‘வருத்தப்பட்ட‘
      விஜய் ஆண்டனியும்
      எதில்,எப்படி,எங்கே வேறுபட்டிருக்கிறார்கள்?
      “ஆபாசமாகப் பாடுவது எனது உரிமை.காதுகளைப் பொத்திக் கொள்வது உங்கள் கடமை“ என்றார் சிம்பு.
      “நான் அறிவாளிதான்... நீங்கள்தான் சரிவரப் புரிந்து கொள்ளாத அரைகுறைகள்“ என்கிறார் விஜய் அந்தோணி.
      வித்தியாசம் அவ்வளவுதான்.
      பாடலை எழுதியவரும், பாடியவரும் பிற்படுத்தப்பட்டவர்களாம்.
      அதனால் கோட்டாவை இழிவுபடுத்தும் நோக்கமெல்லாம் அவர்களுக்கு இ்ல்லையாம்.
      தன்னை யோக்கியனாகக் காட்ட விஜய் ஆண்டனி சொல்லும் காரணம் இது.
      தமிழ்நாட்டில் ‘கோட்டா‘ என்ற சொல் நிஜத்தில்
      யாரைக் குறிப்பிடுகிறது?
      இடஒதுக்கீட்டில் 30 விழுக்காட்டை நிரப்பும் பிற்படுத்தப்பட்டவர்களையா? அல்லது,
      20 விழுக்காட்டை நிரப்பும்
      மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களையா?
      இவர்கள் இருவருமே இல்லை.
      எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கினராக இருந்தும், வெறும் 18 விழுக்காட்டை மட்டுமே
      ஒதுக்கீடாகப் பெறுகிறார்களே...
      அந்தத் தலித் மக்களைத்தான் அச்சொல் குறிக்கிறது.
      இடஒதுக்கீடு என்கிற ‘கோட்டா‘ பிற்படுத்தப்பட்டோரின் 50 விழுக்காட்டை விலக்கிவிட்டு, தலித் மக்களின் 18 விழுக்காட்டை மட்டுமே குறித்து நிற்கும் ஒரு சொல்லாக மாறிவிட்டது.
      நேற்றுவரை தன் முன்னால் கைகட்டி நின்றவன், செருப்பைக் கையிலெடுத்துக் கொண்டு நடந்தவன், கொல்லைப்புறத்தில் தான் துாக்கி எறிந்ததைத் தின்றவன் இன்று ‘தலித்‘ என்ற ஒரே காரணத்தால் சர்ரென மேலே போய்,
      தான் கைகட்டி நிற்குமளவிற்கு ஆளாகிவிட்டான் என்ற கடுப்பில் வெடித்துக்கிளம்பும் ஒற்றைச் சொல்தான்
      இந்தக் ‘கோட்டா‘
      இச்சொல் இழிவை மட்டுமல்ல...
      தலித் மக்களின் மீதான தலித் அல்லாதவர்களின் வன்மத்தையும் மறைத்திருக்கிறது.
      தலித் மக்களின் மீதான இந்த வன்மம் பார்ப்பனர்களிடத்தில் மட்டுந்தான் இருக்கிறது என்பது திராவிட அரசியல் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதை.இந்தக் கட்டுக்கதை பொதுப்புத்தியாக மாறிப்போனதால் பார்ப்பனர்களைக் கைகாட்டி விட்டு, பார்ப்பனரல்லாதார் நல்ல பிள்ளை வேடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
      கல்வி நிறுவனங்களில், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ‘கோட்டா பார்ட்டி‘,'ஸ்கூட் பார்ட்டி'‘அரசாங்க அய்யர்‘ என்றெல்லாம் தலித் மக்கள் ஏளனப்படுத்தப்படுகின்றனர்.
      அதில் பார்ப்பனர்களுடன், பார்ப்பனரல்லாதாரும் கைகோர்த்தே இருக்கிறார்கள்.
      விஜய் ஆண்டனிக்கு எதிராகப் பொங்கும் இந்த சமூகநீதிப் போராளிகள் அதையும் அறிவார்கள். அறிந்தும் ஒரு நமுட்டுச் சிரிப்போடு வெகு சுலபமாக அதைக் கடந்தும் போகிறார்கள்.
      இன்றுவரை சாதி ரீதியிலான இடஒதுக்கீட்டை தமிழ்ச் சினிமாவில் அதிகம் கேள்விக்குட்படுத்தியவர்களில் பார்ப்பனர்களை விட இந்தப் பார்ப்பனரல்லாதவர்கள் தான் அதிகம்.

      Delete
    3. தமிழகம் முழுவது உள்ளாட்சி அமைப்புகளில்
      “கையால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள்” பற்றி மறு சர்வே நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!
      எல்லா அரசியல் கட்சிகளுக்கும்,சமூகநீதி இயக்கங்களுக்கும்,முற்போக்கு இயக்கங்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்

      Delete
    4. "சிங்கப்பூரில் இந்த வேலைகளை எல்லா நிலையில் இருக்கும் மக்களும் செய்வதனை பார்க்க முடியும். நான் கூட இந்த வேலை செய்யும் அழகான சீன பெண்ணை வியந்து பார்த்து இருக்கிறேன்".அய்யா தமிழ்நாடு சிங்கப்பூரும் இல்லை இங்கு அத்தொழிலைச் செய்ய அழகான சீன பெண்ணும் வரப்போவதில்லை!.இவையெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்வதைப்போல இருக்கிறது!.ஏன் தலித் துப்புரவு தொழிலாளிகளையை அரசு குடியிறுப்பில் தங்கவிடாமல் தனிக்குடியிறுப்பிற்கு விட்டியடித்து அரசதீண்டாமையை அரசே நிலைநாட்டுகிறது!.50ஆண்டுகள் அரசாண்ட திராவிடக்கட்சிகளும் இன்றும் அதே அரசதீண்டாமையை தானே பின்பற்றுகிறது!.(ஆதாய,போலி)சமூகநீதி போராளிகளும் மனசாட்சியில்லாமல் இந்த விஷயத்தில் கள்ளமௌனியாகத்தானே இருக்கிறார்கள்!.முதலில் இந்த அரசதீண்டாமை சரிசெய்யுங்கள் பிறகு சிங்கப்பூர் கதை,அழகான சீன பெண் கதை பற்றியெல்லாம் பேசலாம்!.

      Delete
    5. விஷவாயு குறித்து எந்த புரிதலும் இல்லாததால்தான் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு தீடீர் மரணங்கள் நிகழ்கின்றன. கழிவுநீர்‬ தொட்டிகளிலும்,மலக்குழிகளிலும் விஷவாயு உற்பத்தியாகி தேங்கி நிற்கும் போது அதற்குள் இறக்கப்படும் ‪தலித் துப்புரவு தொழிலாளிகள்‬ தாங்கள் பலி ஆடுகளைப்போல் இறக்கப்படுகிறோம் என்பதை உணராமலேயே மரணத்தை சந்திக்கிறார்கள்.இது மரணம் அல்ல, படுகொலை!.ஆதிக்க சாதியினால் நடத்தப்படும் நரபலி!.19.01.2016-இல் சென்னையில் கழிவு நீர் தொட்டியில் இறங்கிய தலித் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி கொல்லப்பட்டனர்.வழக்கம் போல் இவை செய்தி.மலகழிவுகளை அள்ள மனிதன் ஈடுபடுத்தப்படுவதை இந்திய சட்டத்தில் தடை செய்யப்பட்ட தொழிலாக இருக்கிறது.ஆனால் நடைமுறையில் பலியாகும் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களின் போராட்டங்களையும்,கோரிக்கைளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்திவரும் மாநில அரசுக்களின் நடவடிக்கைகளை கண்டித்து போராட எந்த இயக்கங்களும்,சமூகநீதி&மனிதநேய ஆர்வலர்களும் முன்வருவதில்லை.ஒரு எழுத்தாளனின் பேனா முனைகூட இதை விமர்சிப்பதில்லை.அம்மா சும்மா,அய்யா கொய்யா,தளபதி,சுபவீ etc., இதற்கு கண்டனம் தெரிவிப்பதில்லை.ஜல்லிக்கட்டு‬ தடைக்கு பொங்கிய நியாயமார்கள் இதற்கு வாய் பொத்திக் கொண்டு அலட்சியமாக இருப்பதும் என்ன நோக்கத்திற்காக?."காசு கொடுக்கறான்னு உன்னை எவன்டா கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கச் சொன்னது?" என்பதே பெரும்பான்மையானவர்களின் பொதுக்கருத்தாக வரும்போது...நாம் இனி மத்திய/மாநில அரசுக்களிடம் கோரிக்கை வைத்து எந்த பயனும் இல்லை.சமூகநீதி&மனிதநேயப் போராளிகளை எதிர்பார்த்து எந்த பயனும் இல்லை. இதற்கு விழிப்புணர்வு பிரச்சாரம் துப்புரவு தொழிலாளர்களிடையே படித்த தலித்களால் நடத்தப்பட வேண்டும்.விஷவாயு ஆபத்துக்கள் குறித்து தொழிலாளர்களிடம் ‪பரப்புரை‬ மேற்கொள்ளப் படவேண்டும்.இந்த தொழிலுக்கு இந்த சாதிகள் என்று வைத்திருக்கும் இந்திய,தமிழ் சமூகத்திற்கு ‪மனிதர்கள்‬ கிடைக்காமல் போனால் கழிவுநீர் தொட்டிக்குள் ‪‎இயந்திரங்கள்‬ இறங்க ஏதாவது கண்டுபிடிக்கப்படலாம்.இதுவரை முயற்சிக்காமல் இருந்திருக்கலாம்.இனியாவது பொது ‪ஊடகங்கள்‬, சமூக ஆவலர்கள்‬,சமூகநீதி&மனிதநேயப் போராளிகள் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்திற்கு உதவ முன்வர வேண்டும்.இனியாவது முன்வருவார்களா?????

      Delete
  3. வழுவூருக்கு மிக அருகில் 15 வசித்த அனுபவத்தில் சொல்கிறேன். முன்பு அப்படி எந்த வித அசிங்கமான செயல்பாடும் நடக்காத ஊர். ஊரை விட்டு தள்ளி சேரி, வீட்டுக்குள் அனுமதி கிடையாது, போன்ற தஞ்சை மாவட்டம் முழுதும் இருந்த தீண்டாமை அங்கும் இருந்தது.ஆனாலும் தெருவில் நடக்க,கோவிலுக்குள் வர,பொது பாதையை பயன்படுத்த, பள்ளிகளில் சேர்ந்து அமர எந்த தடையும் இருந்ததில்லை. இப்பொழுது நடக்கிறதென்றால் இந்த்துவா சக்திகளின் வளர்ச்சியோ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா பிறர் மீது கையை காட்டிவிட்டு இந்த பிரச்சனையை திசை திருப்பிவிட்டு மறைமுகமாக திராவிட கட்சிகளை காப்பாற்றும் பித்தலாட்டமான, அயோக்கியத்தனமான முயற்சி இது!.70 வருட கட்சியான திமுகவில் தலைவர்,பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளில் ஒரு தலித்துக்களைக்கூட நியமிக்காதது ஏன்?.திருமா கூறயதை போல திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பதவிகளில்கூட தலித்துக்களை சரியாக நியமிக்காதது ஏன்?(திமுக பொறுப்புகளில் தலித் பெண்களின் நிலைமை பற்றி கூறவேண்டியதே இல்லை).ஏன் திமுகவில் தலித்துக்களே இல்லையா? அல்லது தகுதி,திறமை படைத்த தலித்துக்கள் கிடைக்கவில்லையா?. இந்த்துவா சக்திகளை கூறை கூறுங்கள்,ஆனால் இதற்கு பதில் சொல்லிவிட்டு பிறகு கூறை கூறுங்கள்.

      Delete
  4. சட்டத்தின் ஆட்சி என்று சொல்கிறார்களே அது இதுதானோ!

    ReplyDelete
  5. அரசியல் கட்சிகள் போதிய நேரத்தில் தகுந்த அழுத்தம், போராட்டம் செய்யாதது வருத்தமே!...பெரிய கட்சிகள் இதை வன்னமையாக கண்டிதிர்ருந்தால், சாதிய கட்சிகளின் கோட்டம் அடங்கும்!...

    ReplyDelete
  6. செல்லமுத்து சடலத்தைப் புதைத்தவுடன் ஆதிக்கசாதி வெறியர்கள் வெடிவைத்து மகிழ்ந்தனர்.குஞ்சம்மாள்,செல்லமுத்துவின் உடல்களைப் புதைத்திருக்கலாம் அது முடிவல்ல.
    தேர்தல் புறக்கணிப்பு வரை பலவகையான போராட்டங்களைத் திருநாள் கொண்டச்சேரி மக்கள் நடத்தியுள்ளனர். இந்த அரசு கட்டமைப்பு தங்களுக்கானதல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளனர்.குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல் பிணம் அழுகத் தொடங்குகிறது. ஆகையால் அங்கிருந்த இளைஞர்கள் ஐஸ்கட்டிகளை வாங்கி வந்து சடலத்தைப் பாதுகாத்துள்ளனர். “இங்கேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கிறோம். நாங்களும் அதிலேயே விழுந்து சாகிறோம்” என்று பெண்கள் மண்ணெண்ணெயுடன் களத்தில் இறங்கியுள்ளனர். செல்லமுத்து சடலம் இருந்த இடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். மேலத்தெரு, வடக்குத்தெரு மற்றும் பிற பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.நிலைமை கட்டுமீறவே மக்களிடம் பொதுப்பாதை வழியாக அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து சாலை பிரியும் இடத்தில் தடிஅடி நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கைது செய்து சடலத்தைக் கைப்பற்றி வயல்வழியே எடுத்துச் சென்றது காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், தேவர் – இமானுவேல் குருபூசை பாதுகாப்பு புகழ் ஜெயசந்திரன் காவல் துறையினரைப் பிணம் தூக்க வைத்து சாதனை படைத்துள்ளார். குஞ்சம்மாள் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே செல்லமுத்துவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மின்சாரத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி பகுதிக்கு மின் தொடர்பை துண்டித்துள்ளனர். “ஊரில் சாவு மின்தொடர்பை துண்டிக்கக் கூடாது” என்று கடைநிலை ஊழியர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “மேலிட உத்தரவு அமல்படுத்துங்கள்” என்று கடைநிலை ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தங்களது இயலாமையையும், கையறு நிலையையும் கண்கலங்கியபடியும், தயக்கத்துடனும் மின்துறை ஊழியர்கள் வெளிப்படுத்தினர். திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் மின்வாரிய அதிகாரிகளையும் இணைக்கப்படவேண்டும்.நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் வழுவூர் ஊராட்சியைச் சேர்ந்த திருநாள் கொண்டச்சேரியிலும், மேலத்தெரு, வடக்குத் தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இருநூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தாய் திட்டம் போன்ற அரசின் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ள வழுவூர் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப் பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிச்சுடுகாடு கூட கிடையாது. மக்கள் வாழும் பகுதியிலிருந்து மூன்றரை கி.மீ தொலைவில் உள்ள மகிமலை ஆற்றில்கரையில்தான் பிணங்களை அடக்கம் செய்ய வேண்டும். காலனி வீட்டின் அகலம் கூட இல்லாத ஆற்றின் கரையில் ஒற்றையடிப் பாதையில் சிறு வாய்க்கால்களைக் கடந்து சென்று பிணங்களை நல்லடக்கம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் சேற்றில்தான் நடந்து செல்ல வேண்டும்.இப்பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் “அருகாமையில் இடுகாடு வேண்டும். இடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை வேண்டும்” என்று கோரிக்கை வைத்து நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். 2002-ல் வழுவூர் வீரட்டேஸ்வரர், கோயில் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை விலைக்கு வாங்கி ஊராட்சியிடம் கொடுத்த பின்னும் இதுவரை முறையான சாலை அமைக்கப்படவில்லை. ஊருக்கு அருகில் வீரட்டேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான களத்துமேட்டுப் பகுதியில் இடுகாடு வேண்டும் என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு செவி கொடுக்க நாதி இல்லை. பாதைக்காக விலைக்கு வாங்கப்பட்ட இடத்தை ஆதிக்க சாதி நில உடமையாளர்கள் ஆக்ரமித்துப் பயிர்செய்து சிறு வரப்பாக்கியுள்ளனர்.>>>>

    ReplyDelete
  7. முதலமைச்சர் ‘அம்மா’வின் அறிவிப்புகளைப் போலவே 2 இலட்சம் ரூபாயில் சாலை என்ற கிரமப்புற மேம்பாட்டு அறிவிப்பும் காகிதத்திலும், கணிப்பொறியிலும்தான் உள்ளது.பன்னெடுங்காலமாய் அடிமைப்பட்டு வாழ்ந்த மக்கள் மத்தியில் காலம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இளைஞர்களால் தொடங்கப்பட்ட கபாடி விளையாட்டுக் குழு, ஆதிக்க சாதியினரின் கண்களை உறுத்தி அச்சுறுத்தலுக்கு உள்ளானது. தவிர்க்க இயலாத சிறு சிறு மோதல்களுடன் தொடங்கிய போராட்டம் தன் இயல்பில் வளர்ந்து வழிபாட்டுரிமை போராட்டமாக முதிர்ச்சி பெற்றது.வன்னியர்கள் உட்பட அனைவரும் வன்னிய சமூகத்தைச் சாராய ரவுடி வி.ஜி.கலியபெருமாள் குடும்பத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். சாராய ரவுடி வி.ஜி.கலியபெருமாள் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப் படுகிறான். அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதல்கள் கொலைகள் மக்களுக்கு அச்சத்தையூட்டியுள்ளது. கலியபெருமாள் மகன்கள் வி.ஜி.கே மணி வன்னியர் சங்கத்திலும் செந்தில் அ.தி.மு.க.விலும் இருந்து கொண்டு ஆட்டம் போடுகின்றனர். சாதி அபிமானத்தை சுயநலத்திற்குப் பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்துகின்றனர். குத்தாலம் ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன், பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் என்ற வலைப்பின்னலில் சாதி ஆதிக்கம் பகுதியில் கொடிகட்டிப் பறக்கிறது.
    தொடக்கத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒ.எஸ்.மணியனும் தொடர்ந்து அமைச்சர் ஜெயபாலும் வன்னியசாதி வெறிக்கு உரமிட்டு வளர்த்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வன்னியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர். அமைச்சர் ஜெயபாலுக்கு நேர்முக உதவியாளராகப் பணியாற்றுபவர் என்று நாகை மாவட்ட மக்கள் கருதுகின்றனர். 17-01-2015 அன்று நடைபெற்ற திருவாடுதுறை மோதல் சம்பவத்தைப் போல மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான சம்பவங்களைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டியலிட்டுச் சொல்லுகின்றனர். பா.ம.க.வும் வன்னிய சாதி வெறியர்களும், தேர்தலுக்காகத் திட்டமிட்டு சாதிக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் மயிலாடுதுறை பகுதி சமூக ஆர்வலர்களிடம் வலுவாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. மீனை பிடிக்க கற்று கொடுத்தவர்களை மறந்து விட்டு மீனை இலவசமாக கொடுத்து மயக்க நினைக்கும் ஆரியக் கும்பல்களின் வலையில் ஆராயமல் விழுந்து விடுவதுதான் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். உங்களை இப்போது பிற்படுத்தபட்ட மக்களுக்கு எதிராக, உங்களை அடியாள் போல பயன்படுத்த தான் அவர்கள் விரும்பிகிறார்கள் என்பதை உணர்ந்து உங்கள் உண்மையான வளர்ச்சி இதுவரை யாரால் ஏற்பட்டது என யோசித்தால் போதும். உங்கள் எல்லா கஷ்டங்களுக்கும் விடை கிடைத்து விடும்.

      Delete
    2. தலித் முன்னேற்றத்திற்கு,உண்மையான வளர்ச்சிக்கு 100% அம்பேத்கார்தான் காரணம்! அவர்தான் அவர்களுக்கு மீனை பிடிக்க கற்று கொடுத்தவர் திராவிடக் கட்சிகளல்ல!!அதன் தலைவர்களும் அல்ல!!!.திராவிடக் கட்சிகள் நினைத்தாலும்,முயன்றாலும் கல்வி, வேலைவாய்ப்பில் 1%இடஒதுக்கிடைக்கூட குறைத்துவிட முடியாது,ஏனென்றால் தலித்துக்கு மக்கள்தொகைக்கேற்ப விகிதாச்சர இடஒதுக்கிடு அம்பேத்கார் தலைமையேற்ற அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்று பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது(சட்டசபையால் அதில் ஒரு சிறு மாற்றத்தைக்கூட யாராலும் செய்யமுடியாதென்பதே 100% உண்மை). தலித்துகளுக்கு அம்பேத்கார் செய்ததை திராவிடக் கட்சித் தலைவர்களுக்கு மடைமாற்றும் முயற்சியை கைவிடுங்கள்.

      Delete
    3. அம்பேத்கருக்கு ஈடு இணை யாரும் கிடையாது. அவரால் தலித் சமுதாயம் மட்டும் பயன் பெற வில்லை. ஒட்டு மொத்த தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் பயனடைந்தார்கள். ஷத்ரியர்கள் பற்றி தைரியமாக சொன்ன கருத்துக்கள் அவருக்கு பின்னால் ஒருவர் கூட பேசியது இல்லை.
      முன்னேற்றம் என்பது அனைவரும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.அதனைத்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் விரும்புகிறது. ஆனால் ஆரியர்கள் இருந்தால் நான் மேல் இருக்க வேண்டும். இல்லையென்றால் யாருமே இருக்ககூடாது என்று விரும்புகிறார்கள். அதனை ஷத்ரியர்களும் சிறுபான்மையினர் மற்றும் தலித்களை பயன்படுத்தி நிறைவேற்ற பார்கிறார்கள். ஆரியர்களால் அதிகம் பயனடைந்த சமுகம் ஷத்ரியர்கள் . இன்று இந்தியாவில் அதிக நிலங்கள் இவர்களிடம்தான் இருக்கிறது. ஷத்ரியர்கள் சமூகம்தான் தலித்களை அதிகம் தொல்லை தரும் சமுகம் என்பதனை அனைவரும் அறிய வேண்டும். இதனை ஷத்ரியர்கள் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகதொடுதான் சேர்ந்து முறியடிக்க வேண்டும்.
      ஆனால் இன்று காங்கிரஸ் உங்களை மற்றும் சிறுபான்மையினரை நம்பித்தான் இருக்கிறது. இதனை திருமாவளவனும் சொன்னார். அவர்கள் உங்களை தேடி வந்தால் ஏன் விலை போகிறீர்கள் என்றுதான் கேட்கிறோம்.
      காமராஜரும் அண்ணாவும் கருணாநிதியும் (சில குறைகள் இருந்தாலும்) உங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று மனசாட்சி இருந்தால் கூறுங்கள்.

      Delete
  8. தேவராஜ் படையாண்டவர்22 January 2016 at 14:08

    இறுதியில்,வயல் வரப்பு வழியாக எடுத்துச் சென்று உடல்களை அடக்கம்செய்துள்ளனர் என்று கூறத்தான் உங்களால் முடியும்.ஆனால் அதே பகுதியில் இன்றல்ல 20 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல பிரச்சனை எங்கள் பெரிய டாக்டர் அய்யா ஒரு தலித் சவத்தை தோலில் சுமந்து சாதிமக்கள் சாலை வழியாக சென்று அடக்கம் செய்தார்.அதனால்தான் அப்போது சாதியல்ல நீதி வென்றது.அதை தமிழ்நாடு,இந்தியாவைக்கடந்து உலக தமிழ் சமுதாயமே பாராட்டியது.இதற்காக தலித்தலைவர்கள் அந்த மாமனிதருக்கு தமிழினத்தின் 'முதுகுடிதாங்கி' என்ற பட்டம் வழங்கி சிறப்பித்ததை இவ்வுலகம் நன்கறியும்.பெரியார்,அண்ணாகூட அவ்வாறு செய்தது கிடையாது!.கருணாநிதி,வீரமணி முதல் ஸ்டாலின்,வைகோ,சுபவீ......இதுபோல தலித் சவத்தை தோலில் சுமந்த சம்பவம் உண்டா?.அப்படி உங்களில் ஒருவர் செய்திருந்தால் திருநாள் கொண்டசேரியில் இதைப்போல ஒரு நிகழ்வே நடந்திருக்காது!.அகவே ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாகிறது நீங்களெல்லாம் தலித் சவத்தை வைத்து அரசியல் செய்யதான் ரெடி தலித் சவத்தை தோலில் சுமக்க ரெடி இல்லை!.அதனால்தான் இப்போது நீதி செத்தது,சாதி வென்றது!.எங்கள் பெரிய டாக்டர் அய்யாவிடம் கருணாநிதி,வீரமணி முதல் ஸ்டாலின், வைகோ,சுபவீ வரை பாடம் கற்க வேண்டும்.

    ReplyDelete
  9. manitham thotrathu...saathi vendrathu

    ReplyDelete