தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 4 January 2016

நூல்கள் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சுபவீ நூல்கள் வெளியீட்டு விழா திருப்பூரில் நேற்று (03-01-2016) சிறப்பாக நடந்து முடிந்தது.

7 comments:

 1. கணேஷ்வேல்4 January 2016 at 20:04

  மிகவும் அருமை !!!

  ReplyDelete
 2. நூல்களை வாங்க,வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்.தங்களின் மதுரையில் குறள் விழா என்ற ஒலிநாடாவை (ஏறத்தாழ 3ஆண்டுக்கு முன் பதிவுசெய்தவை) youtube ல் செவியுற்றேன்.குறளை குறித்த தெளிவு,நுட்பம், அருமை.அருமை.ஒரு குறளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.மனுவையும்,குறளையும் ஒப்பீடு செய்து பொதுவான கட்டுரை ஒன்றை இணையத்தில் கண்டேன்.அதில் மன்னனது இன்றியமையாத ஆறு உறுப்புகளில் ஒன்றாக "படை"யை வள்ளுவர் கூறுகிறார்.
  "படையினர் போரில் வெற்றிப்பெற்றால் உரிமையாக்கும் பொருட்களில் ஒன்றாக பெண்ணை கூறுகிறார் மனு.(7:96).
  ஆனால் குறள் இதை எதிர்க்கிறது.
  படைமாட்சி : 769
  "சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
  இல்லாயின் வெல்லும் படை."
  'செல்லாத் துனி'என்பதற்கு மகளிரை வௌவல்,இளிவரவாயின செய்தல் முதலியவற்றால் வருவன என பரிமேலழகர் உரை செய்துள்ளார்.
  பரிப்பொருள் 'செல்லாத் துனி 'என்பதற்கு 'போகாத் துன்பம் உறுதலும்'என உரை எழுதி 'போகாத் துன்பமாவது பெண்டிரைக் கைக்கொள்ளுதலும் இளிவரவு செய்தலும் என விளக்கமளிக்கிறார்.
  போரில் கைப்பற்ற வேண்டிய பொருட்களில் ஒன்றாக 'மகளிர்'மனுசுமிருதியில் குறிப்பிடப்பட அச்செயல் படையிடம் இருக்கக்கூடாது என திருக்குறள் வலியுறுத்துகிறது.
  மேலும் மன்னனின் வருணம் குறித்தோ,வருண கலப்பு ஏற்படாது காக்கும் அவனின் கடமை குறித்தும் திருக்குறள் எதுவும் கூறவில்லை.
  இந்த குறளின் விளக்கம் புதிய நவீன உரை ஆசிரியர்களால் கவனிக்கபடவே இல்லை.ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் பொருள் தவறாகவே உள.இது கவனிக்கபட வேண்டிய ஓர் அற்புதமான குறள்.

  ReplyDelete
 4. கி.திருமுருகன.8 January 2016 at 17:23

  பெண்கள் விடயத்தில் தீட்டும்,புனிதமும்
  பைபிளில்,
  சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கடவள் அவளை தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.(லேவியராகமம் 15:19)

  குர்ஆனில்,
  மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர்கூறும்: “அது ஓர் உபாதையாகும்;ஆகவே, மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்;அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்(உடலுறவு கொள்ளாதீர்கள்);அவர்கள் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கிறானோ அதன் படி அவர்களிடம் சொல்லுங்கள்;பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சியமாக அல்லாஹ் நேசிக்கிறான்.”

  மனுநீதியில்
  இந்து மத வழக்கப்படி முதல் மாதவிடாய் ஏற்படும்போது சடங்கு,பூப்புநீராட்டும் விழா எனஅழைக்கப்படும் விழா கடந்த 200- ஆண்டுகளில் ஏற்பட்ட ஒன்றாகும்.பெண் பருவம் அடைவதற்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்படுகிறாள்.
  “இந்து மதத்தின்படி, மனுநீதியின் படி எட்டு வயது தான் கன்னிகைக்குரிய வயது. எட்டு வயது கொஞ்சம் தாண்டினாலும் அவள் கன்னிகைப் பருவத்தை கடந்து விடுகிறாள்.அதனால்... அதன் பிறகு அவளுக்கு செய்வது கன்னிகாதானமல்ல, அதாவது கல்யாணமல்ல.
  “மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
  பிதா பிபதி கோனிதம்...”
  அடே கையாலாகாத அப்பா...உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும்.தவறிவிட்டாய்.அவள் இப்போது ருதுவாகி(பருவமடைந்து)விட்டாள்).ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்...அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.ஆனாலும்,ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?.அதனால் தகப்பனுக்கு தண்டனை அளிக்கிறார் மநு.ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.இப்படியொரு கடினமான தண்டனையை பெறுகிறோமே என தகப்பன் வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறார் மநு.அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை மாதவிலக்கு நேருகின்றதோ... அத்தனை பசுக்களையும்,பொன்னும்,பொருளும் பிராமணனுக்கு தானம் பண்ணவேண்டும்!.

  ReplyDelete
 5. ச.முனிசாமி8 January 2016 at 19:36

  தமிழன் தமிழ் மொழி,பாரம்பரிய உடை,உணவு, தன்மானம்,சுயமரியதை,வீரம்,நாட்டிற்கு வெளியிலுள்ள ஈழப்பிரச்சனை&கச்சத்தீவுப்பிரச்சனை,அப்புறம் மாட்டை அடக்குவது இதுக்கு எல்லாம் செமையா குரல் குடுப்பான் தமிழன்;அதே சாதி ஒழிப்பு,கலப்பு திருமணம் என்று சொல்லி குரல் கொடுக்க சொன்னால் சவுண்டே இல்லாமல் இருக்கும் ஓட்டைகள் அனைத்தையும் அடைத்து கொண்டு ஓடிவிடுவான்.இது தான் தமிழ் இன சமூகநீதி மற்றும் மாண்பு.

  ReplyDelete
 6. முத்துவீரன்9 January 2016 at 16:52

  "குக்கே சுப்ரமணிய கோவில்"-இது கர்நாடகாவில் இருக்கும் கோயில்களில் ஒன்று.இந்த கோயிலில் வாயால் வேதபாராயணம் செய்யும் பிராமணர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலை மீது படுத்து உருண்டால் அவர்களுக்கு'நோய்கள்'வராது என்பது இந்த கோயிலின் ‪ஐதீகம்."இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்று இந்த ‪ஐதீகம்‬"என்று வெகுஜனமக்கள் நம்புகிறார்கள்.பிற ஜாதியினர் குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வந்து வேதபாராயணம் செய்யும் பிராமணர்கள் சாப்பிட்ட ‪‎எச்சில் இலை‬ மீது படுத்து உருண்டு விட்டு செல்கிறார்கள்.இது கருர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நடைமுறையிலுள்ளது!.அதோடு பிராமணர்கள் உண்ட ‪‎எச்சில் இலை‬யிலுள்ள மிச்சங்களைத் பொறுக்கித்தின்னால் புண்ணியம்; பிராமணர்களை ரதத்தில் வைத்து இழுத்தால் பாபவிமோசனம் போன்றவை சோழ அரசர்கள் முதல் இன்றைய சாமனியன் வரை பழக்கத்திலுள்ளது!.அறிவு இருக்கிற மனிதன் யோசிக்க வேண்டாமா?.உன் வாயில் வரும் எச்சல்தான் மற்ற சாதிக்காரனுக்கும் ஊற்றெடுக்கிறது.வாயால் வேதபாராயணம் செய்த எச்சில்மட்டும்'Panacea'வா?.அது என்னடா ‪பார்ப்பான்‬ எச்சிலுக்கு மட்டும்'அவ்வளவு பவருன்னு'எச்சல் இலையில் உருளுபவர்கள்,‪‎எச்சில் இலை‬யிலுள்ள மிச்சங்களைத் பொறுக்கித்தின்பவர்கள் யோசிக்க வேண்டாமா?.இதற்கு வாயால் வேதபாராயணம் செய்யும் பார்ப்பானை மூஞ்சி மேல காரித்துப்ப சொல்லலாம். அதுவும் எச்சில் தான்!.

  ReplyDelete