தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 12 February 2016

சின்னச் சின்னதாய்ச் சில கேள்விகள்?


1. அ.தி.மு.க.வா, தி.மு.க.வா என்று கேட்டால், என் வாக்கு தி.மு.க.விற்குத்தான். தி.மு.க.வா, மக்கள் நலக் கூட்டணியா என்று கேட்டால் என் வாக்கு, மக்கள் நலக் கூட்டணிக்கே என்கிறார் இதழியலாளர் ஞானி. பதிப்பாளர் பத்ரியும் ஏறத்தாழ இதே நிலையை எடுத்து, மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்கிறார். அப்படியானால், மக்கள் நலக் கூட்டணி தொடங்குவதற்கு முன், ஞானியும், பத்ரியும் தி.மு.க.விற்கு ஆதரவாகவா இருந்தார்கள்? சென்ற தேர்தல் வரை, தி.மு.க.விற்குத்தான் வாக்களித்தார்களா?


2. மற்ற கூட்டணிகளுக்கெல்லாம் கொள்கை இல்லை. மக்கள் நலக் கூட்டணிதான் குறைந்த பட்ச செயல் திட்டத்தோடு கூட்டணி அமைத்துள்ளது என்று ஒரு கருத்து பரப்பப்படுகின்றது. உண்மைதான். தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் இங்கு தொகுதி உடன்பாடுதான் கொண்டுள்ளன. கொள்கை வழிப்பட்ட கூட்டணி என்று கூறமுடியாது. போகட்டும். கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே ஈழச் சிக்கல், கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு சிக்கல் ஆகியனவற்றில் உள்ள பொதுவான கொள்கை என்ன? முல்லைப் பெரியாறு சிக்கலில், வைகோவும், ஜி. ராமகிருஷ்ணனும் இனி இணைந்து நின்று போராடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாமா?


3. தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும்தான் கருணாநிதி பதவி வழங்குவார் என்று வைகோ குற்றம் சாற்றுகின்றார். மூன்று முறை, 18 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வைகோவைத் தி.மு.கழகம் தேர்ந்தெடுத்து அனுப்பியதே, வைகோ என்ன கலைஞர் குடும்ப உறுப்பினரா?


4. தலைமை அனுமதித்தால்,  மேற்கு வங்கத்தில், காங்கிரசோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று முடிவு செய்திருப்பதாக, மேற்கு வாங்க இடது சாரிகளின் கட்சித் தலைவர் பிமன் போஸ் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி  பிற்போக்கு, மேற்கு வங்கத்தில் மட்டும் முற்போக்கா தோழர்களே?

20 comments:

 1. 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது என் பதிவில் நான் எழுதியது இது: http://www.badriseshadri.in/2004/03/blog-post_107960426898256558.html

  ReplyDelete
  Replies
  1. Whatever you say Subavee would not accept your point. He will see your view as a Brahmin's view not as Badri's view. His point is you're a brahmin and you will only support JJ. He views every person based on his caste. Why are you trying to prove your point. You don't need his certificate. People are watching you and they will decide. You can expose him in your blog. Why he was against DMK before 2006, and what miracle happened that made him a supporter after 2006.

   Delete
  2. Hei represents upper caste view only. Gnani may be different. Go to Badri's blog, you will find it a shelter to fanatical parpanars and Hindutva supporters. His frequent articles in swarajyamag and TOI are evident of his loyalty to his own caste. You cannot forget all when you read him. When I first read him, I thought like others he was different. Subsequent reading dashed my hope. But there is one difference, though: other fanatical parppanars are open in their hate of others of their choice. He pretends to be just and fair. Underneath lies the loyalty,which erupts when there is need.

   A leopard cannot change its spots. A Tamil brahmin cannot change himself by which I mean his hatred and love remain prefixed for ever. Hindutva and anti DMK and Periyar. They judge all social issues from their my caste my love perspective only.

   Badri is no exception.

   Delete
 2. 2006 சட்டமன்றத் தேர்தலின்போது நான் எழுதிய பதிவு இது. http://www.badriseshadri.in/2006/03/blog-post_28.html

  ReplyDelete
 3. மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்குமுன்பு நான் எழுதிய பதிவு. http://www.badriseshadri.in/2015/04/blog-post_8.html

  ReplyDelete
 4. 1. How does that matter ? What you gonna do if they vote or didn't ? Why you are trying to arm-twist when people look out for options ?

  2. "Minimum Common Program" - Do you need any other explanation ?

  3. "Vidhi vilakku vidhi aagadhu" - your own words. Sent one non-family member to parliament and that doesn't mean ppl got to forget half the dozen family members who sat in the ruling party when half the tamil population killed in Srilanka.

  4. When you made alliance with BJP and Congress did you gave a thought about who is pro and against any of your ideology. When arithmetic works for you then it should work for others too.

  ReplyDelete
 5. வணக்கம், ஐயா இன்னும் ஒரு சில கேள்விகள் எனக்கு உள்ளன, அதாவது தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கபடுகிறது அதனை பற்றி திமுக பேசுகிறதா என்கிறதே இந்த கூட்டம் விஜயகாந்த் எப்போது இதனை பற்றி பேசினாரா? ஒரு வேலை கம்யூனிஷ்ட்களுக்கு, மட்டும் கனவில் வந்து சொன்னாரா?? என்ன!! மொத்ததில் சந்தர்பவாதமாக தெரிகிறது

  ReplyDelete
 6. பத்ரி பிராமணர் என்ற ஒரே காரணத்தால் நீங்கள் அவரை எதிர்த்து எழதுவது போல் தெரிகிறது. அவர் உங்களிடம் காட்டும் மரியாதை நீங்கள் திரும்ப காட்டுவதில்லை. நீங்களும் 10த்து வருடங்களுக்கு முன் திமுக எதிர்ப்பாளராக தான் இருந்திங்க. நீங்க திமுகவா மாறுன உடனே ஒட்டு மொத்த ஊரும் திமுகாவா மாற முடியுமா. திமுகா+பிஜேபி கூட்டணி வரட்டும், அப்புறம் நீங்க என்ன செய்வீங்கன்னு பாக்க ஆர்வமாக உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. Dear Subavee Sir,
   As usual, you have written the article in a scientific way. That is, instead of making any conclusions, you had written thought provoking questions.

   Dear Badri,
   Very nice of you for having given proof for your stand about "Vote for DMK" in your blog through links. I'm sure you would have understood that Prof. Subavee wouldn't have got a chance to follow your 2004 , 2006 Blog posts to understand your stand in those days. Hence he gently questioned without concluding.

   Dear Guroonath,
   I know Prof. Subavee since 1991 and he respects everyone. I am sure that Badri may agree that Prof. Subavee would have shown the same respect to him also - irrespective of who he is or what he thinks. Regarding his association with DMK for the past 10+ years - all I know is that he is doing it for the good of many people.

   Dear Badri,
   I'm thrilled to connect with you after 6 years. Interestingly Prof. Subavee is my first role model and Prof. Ananthan is my second role model. We both are connected again through my role models. Watch the 2010 Solar Eclipse (and you) again here: http://bit.do/ananthanbadriviru

   Best regards,
   Viru

   Delete
 7. அய்யா சுபவீ அவர்களே எல்லோரிடமும் இவ்வளவு குற்றம் குறைகளை கண்டுபிடிக்கிறீர்களே அவை உங்களிடமும் மற்ற திராவிடக் கட்சிகள்&அவற்றின் தலைவர்களிடமும் இல்லாததா?.வெளிவேஷம்,கபட நாடகம்,பாசங்கு செய்தல்,பிறர் கருத்தை இருட்டடிப்பு செய்தல்,SHOOTING THE MESSANGER&IGNORING THE MESSAGE போன்றவை உங்களுக்கும்,பிற திராவிடக் கட்சிகள்&அவற்றின் தலைவர்களுக்கும் கைவந்த கலை தானே?.அதற்கு சிறந்த சான்றாக சுபவீ வலைப்பூ இப்போது உங்கள் அல்லக்கைகளின் கூடாரமாக, பஜனை மடமாக,உங்களின் நேரடி&மறைமுக PROXYக்களின் கருத்துபரிமாறுமிடமாக மாற்றப்பட்டுள்ளதே போதுமானதாகுமே!.

  ReplyDelete
  Replies
  1. சிங்காரம் அவர்கள் என்னதான் சொல்லவருகிறார் என்று புரியவில்லை.மொத்தமாக திராவிட சுயமரியாதை கருத்துக்கள் மீது உள்ள வெறுப்பை தனக்கு தெரிந்த வழியில் வாந்தி எடுக்கிறார். சுபவீ அவர்களின் வலைப்பூ அல்லக்கைகளின் பஜனை கூடாரம் ஆகிவிட்டதாக கூறுவது கருத்து கூற வருபவர்களை ஆதாரம் இல்லாமல் கொச்சை படுத்துவதாகும்.கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத சிலரின் வெறுமை இப்படி தரம் தாழ்ந்த விமர்சனத்தை வைக்க தூண்டுகிறது. வாசகர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் கருத்துக்களை முன்வைப்பதை இப்படி அல்லக்கை பஜனைமடம் போன்ற வார்த்தைகளால் ஓரம் கட்ட நினைப்பது ஒரு வகையில் பாசிசம்தான். கருத்துக்கள் ஏற்றுகொள்ள முடியாவிட்டால் பதில் கருத்துக்களை முன் வையுங்கள். மாறாக கருத்து கூறுபவர்களை சகிக்க முடியாமல் வெறுப்பை உமிழாதீர்கள்.

   Delete
 8. ஞானியும் பத்ரியும் காலத்துக்கு காலம் அங்கும் இங்குமாக மாறி மாறி கருத்துக்கள் சொல்லி இருக்கும் வரலாறு உண்மைதான்.ஆனால் மக்கள் மனதில் இவர்கள் இருவருமே தமிழக மேட்டுக்குடி கருத்துக்களை பிரதிபலிப்பவர்கள் என்ற கருத்து வேருன்றி விட்டது என்றே எண்ணுகிறேன்.
  எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் தற்போது இரண்டு அணிகள்தான் இருக்கின்றன. ஏனைய சிறுகட்சிகள் வரிசையில்தான் மீதி அணைத்து அமைப்புக்களும் உள்ளன.
  மேட்டுகுடிகள் அதிமுகவுக்கு ஆதரவானவர்கள் என்ற அபிப்பிராயம் அவ்வளவு சுலபத்தில் புறம் தள்ளிவிட கூடியது அல்ல.
  பத்ரி அவர்கள் மைலாப்பூர் NRI களுக்கு ஒரு தொகுதி எதிர்காலத்தில் ஒதுக்கப்படைலாமோ என்னவோ ...அதற்குரிய தனது constituency யை நன்றாக தளமிடுகிறார்.
  மக்கள் நல கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் மட்டுமே வாங்கு வங்கி உள்ள கட்சியாக தெரிகிறது.
  வைகோவுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. இருவரும் சகல விதத்திலும் இன்று ஒரே நிலையில் இருப்பவர்கள்தான் அம்மாவின் கருணைக்காக காத்திருக்கிறார்கள்.
  கம்யுனிஸ்டுகள் ஜெயலலிதா அம்மையாரிடம் என்ன கொள்கையை கண்டு சேர்ந்தார்கள் என்பதற்கு வரலாற்றில் பதிலே இல்லை. அதிலும் பாண்டியன் அவர்கள் அரசியலில் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போக முடியுமோ அவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து கம்யுனிஸ்டுகளின் கொஞ்ச நஞ்ச கவுரவத்தையும் கெடுத்தே விட்டார்.

  ReplyDelete
 9. சுப.வீரப்பாண்டியன் எழுப்பிய கேள்விகளுக்கு மதுரைத்தமிழனின் பதில்கள் http://avargal-unmaigal.blogspot.com/2016/02/subavee-spveerapandian.html

  ReplyDelete
 10. அய்யா திரு சுபவீ அவர்கள், தன் கூரிய மதி நுட்பத்தால், தான் சார்ந்துள்ள கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, இன்றைய காலத்திற்கு எற்ப வாதங்களையும், புள்ளி விவரங்களையும் கொண்ட வினாக்களை எழுப்பியுள்ளார்.

  இதற்கு பதில், தற்போதைய அரசியல் நிலவரத்திற்கு எற்றவாறு, வாதத்திற்கு வாதமாகவும், புள்ளி விவரத்திற்கு, புள்ளி விவரமாகவும் இருக்க வேண்டும்.

  பழமைக் கருத்துக்களால் அளிக்கப்படும் பதில்கள், அய்யா திரு சுபவீ அவர்களின் கேள்விகளுக்கு பதில்களாக அமையாது.

  ReplyDelete
 11. அமெரிக்காவை ஆதரிக்காத எவரையும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களாகவே கருத முடியும் என அன்று புஷ் கூறினார். திமுகவை ஆதரிக்காத எவரையும் அதிமுகவை ஆதரிப்பவர்களாகவே கருத முடியும் என்கிறார்கள் இன்றைய திமுக அடிவருடிகள். அதுவும் மக்கள் கூட்டணிக்கு எதிராக சுபவீ, மனுஷ்ய புத்திரன் போன்றோர் செய்து வரும் விமர்சனங்கள் அராஜகமானவை. இத்தகைய திமுக ஆதரவாளர்கள் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரைக் கேட்டாலே சாமி வந்தது போல ஆடுகிறார்கள். அக்கூட்டணி ஆதரவாளர்களை சபிக்கிறார்கள். அவர்கள் அதிமுக வெற்றி பெறுவதற்காகவே திட்டம் போடுகிறார்களாம். என்ன தமிழ்நாட்டையே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பட்டா போட்டு கொடுத்து விட்டோமா என்ற சந்தேகமே ஊடக விவாதங்களில் வெளிப்படுகிறது. அதுவும் திமுக ஆதரவாளர்கள் மக்கள் நலக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தோர் ஊடக விவாதங்களில் பேசும் போது விடாது இடைமறிக்கிறார்கள். அவர்களைச் சிறிய பொடியன்களைப் போல் நடத்துகிறார்கள். நாங்கள் எம்மாம் பெரிய ஒரு கட்சியின் வீரர்கள் தெரியுமா என்ற ஆணவப் போக்கே திமுகவினரிடம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. சுபவீ, மனுஷ்ய புத்திரன் போன்றோரின் இந்த ஆணவப் போக்கு சனநாயக விழுமியங்களுக்கே மிகவும் ஆபத்தானது.

  திமுகவுக்கு வாக்களிக்க இவ்வளவு பணத்தை அள்ளிக் கொடுக்கும் கருணாநிதிக்கு இந்தப் பணம் எங்கிருந்து இவருக்கு வந்தது என மக்கள் ஐயுறுவார்கள் என்ற நினைப்பே எப்படி இல்லாது போனது என அன்று கேட்டு விட்டு, இன்று அதே திமுகவை விழுந்து விழுந்து ஆதரிக்கும் மனுஷ்ய புத்திரன்களுக்கு வேண்டுமானால் ஆதாய நோக்கேதும் இருக்கலாம். அதனால்தானோ என்னவோ அவர்கள் இன்று திமுக, அதிமுக இரண்டையும் எதிர்த்து ஒரு மாற்றுக்கு ஆதரவளிக்கலாம் எனக் கருதுவோருக்கு் உள்நோக்கம் கற்பிக்கும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

  எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும், எந்தக் கட்சியைப் புறக்கணிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் சனநாயக உரிமை. அந்த அடிப்படை உரிமையையே மறுத்து, கிண்டலும் நையாண்டியும் செய்து அசிங்கப்படுத்தும் இந்த சர்வாதிகாரப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிவதே சனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளோர் செய்ய வேண்டிய பணி.

  - நலங்கிள்ளி

  ReplyDelete
  Replies
  1. அய்யா கிருஷ்ணா தனுஷ்கோடி அவர்களே ஒரு 93 வயது நிரம்பிய முதுபெரும் தலைவரை பற்றி ஏகவசனத்தில் கருணாநிதி என்று விளிப்பது கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாத செயல். கலைஞரை இழிவு படுத்துவதாக எண்ணி கொண்டு தங்களை தாங்களே தரம் தாழ்த்தி கொள்கிறார்கள். மாடுகள் முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை என்ற வரிகளை நான் எங்கோ படித்திருக்கிறேன். கலைஞர் ஒரு செம்மொழி கோபுரம். ஒரு சமசீர்கல்வி கொடையாளர். ஒரு சமத்துவபுர புரட்சியாளர்.வரப்போகும் பல நூற்றாண்டுகள் கலைஞரின் வாழ்க்கையை தேடி தேடி படிக்க போகிறது. கலைஞர் யார் என்று வடநாட்டாருக்கு நன்றாகவே தெரியும். தெரியாவிட்டால் எமெர்ஜென்சி காலத்து வடநாட்டு பத்திரிகைகளை கொஞ்சம் புரட்டி பாருங்கள்,கலைஞர் இந்திய ஜனநாயகத்துக்கு ஆற்றிய சேவை தெரியவரும் . நம்மவர்க்கு இன்னும் சரியாக தெரியவில்லை என்பதுதான் தமிழனத்தின் சோகம்

   Delete
 12. மக்கள் நல கூட்டணி என்பது ஆரிய படுகுழி மீது மூடப்பட்டுள்ள பச்சை இலை. பச்சையின் மகத்துவத்தைப் பற்றி ஆரிய காதலர்கள் அப்படி தான் பேசுவார்கள்
  எச்சரிக்கையோடு இருப்பது நம் கடமையாகும்

  ReplyDelete
 13. கேள்வி கேட்பதே தவறா? அதற்கே இவ்வளவு கோபமா? அண்ணன் சுபவீ அவர்களின் கேள்விக்கு இரண்டே பதில்கள்தான் தரமுடியும். ஆம் அல்லது இல்லை. அவர் எதையும் தீர்மானமாகச் சொல்லவில்லையே! ஆனால், மக்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் கலைஞரையும், தளபதி மு. க. ஸ்டாலினையும் பற்றி ஆதாரம் ஏதும் இல்லாமலேயே தீர்மானமாகப் பல செய்திகளைப் பரப்புகிறார்களே, அது எந்த வகை நியாயம்! நேற்று வரை திமுகவை ஆதரித்து கூட்டணி அமைத்தவர்கள் இன்று எதிர்ப்பது சரி என்றால், அன்று திமுகவை எதிர்த்த சுபவீ, இன்று அக்கட்சியை ஆதரிப்பது எப்படி தவறாகும்.

  ReplyDelete
 14. அய்யா வணக்கம். தங்களிடம் எனக்குச் சில கேள்விகள் உள்ளன. பார்க்க அழைக்கிறேன் -http://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_14.html

  ReplyDelete
 15. சின்னச் சின்னதாய்ச் சில கேள்விகள் பகுதியில் கலந்துகொண்டு பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். ஒரு சிலரின் தரக்குறைவான கடிதங்களைத் தவிர, மற்ற அனைவரும் மிக நாகரிகமாகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். அனைவருக்கும் என் அன்பும், நன்றியும். விரிவாக என் விடையைப் பதிவு செய்ய எண்ணியிருந்தேன். ஆனால் தொடர் சுற்றுப்பயணம், கூட்டங்கள் காரணமாக அது இயலாமல் போயிற்று.

  நண்பர் பத்ரி தன் முந்தைய நிலைப்பாடுகளை நம் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார். தான் வெறுமனே தி.மு.க. எதிர்ப்பாளர் அல்லர் என்னும் அவர் கூற்றுக்கு, அவருடைய கட்டுரைகள் சான்று பகர்ந்தன. என் கருத்தை மதித்து, தன் நேரத்தைச் செலவிட்டுப் பழைய கட்டுரைகளை நம் கவனத்திற்குக் கொண்டு வந்த்தமைக்கு அவருக்கு என் நன்றி உரியது.

  எழுத்தாளர் நா. முத்துநிலவன் தன் பங்கிற்குச் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அவற்றை நான் படித்தேன். ஒவ்வொன்றுக்கும் விடை சொல்ல ஆசைதான். எனினும் நேரமில்லை. பிறகு ஒரு சூழலில் விடை தருவேன். என் சார்பில் நல்ல விடைகளைத் தந்திருந்த நண்பர்களுக்கும் என் நன்றி உரியது.

  மீண்டும் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete