தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 19 February 2016

ஒன்றே சொல் நன்றே சொல் - திராவிட இயக்கத்தின் வேர் வள்ளலார்


1 comment:

 1. நாம் பொதுவாக எதையும் கருப்பு வெள்ளை, நல்லது கெட்டது, அது அல்லது இது என்று துருவப்படுத்தியே சிந்தித்து பழகிவிட்டோம். பலநேரங்களில் உண்மை கருப்பு வெள்ளை என்று இல்லாமல் இரண்டுக்கும் இடையே உள்ள Grey area வாக இருந்து விடுவதுண்டு. வள்ளலாரின் வரலாறும் ஒரு வகையில் அப்படிபட்டதுதான் என்றெண்ணுகிறேன்.
  ஒரு அடிப்படை வைதீக பக்திமார்க்கவாதியாக உருவாகிய ராமலிங்க சுவாமிகள் தனது கண்முன்னே உள்ள மனிதர்களின் துன்பத்தை கண்டு மனம் உருகி ஒரு மாபெரும் மனிதாபிமானியாக மாறிவிட்டார்
  அந்த மனிதாபிமானம் உண்மையில் அவரது அறிவு கண்ணை திறந்தது என்றே கருதுகிறேன்.வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்பதை விட ஒரு அற்புத வாழ்வியல் நெறி வேறு இருக்க முடியமா?
  அவரது இறுதிகாலத்தில் அவர் முழுக்க முழுக்க ஒரு சுயமரியாதை மற்றும் ஓரளவு பகுத்தறிவு கொள்கையை உயர்த்தி முழங்கியதாகதான் தெரிகிறது.
  வள்ளலாரின் இறுதிக்கால சொற்பொழிவுகளை இன்று ஒரளவு இருட்டடிப்பு செய்யபடுகிறது. அவரின் இளமைகால அருபாக்களை மட்டுமே தூக்கி பிடிக்கிறார்கள்.
  இறுதிகாலத்தில் அவரின் கருத்துக்கள் எவ்வளவு புரட்சிகரமாக இருந்துள்ளது என்பதை அவரின் எதிரிகளின் பிரசுரங்களே கூறுகின்றன.
  தமிழக மடாதிபதிகள் மூர்க்கமாக அவரை எதிர்த்தமை ஒன்றே அதற்கு சான்று.
  ராமலிங்க சுவாமிகளுக்கு எதிராக ஆதீனங்கள் வழக்காடியதும் வள்ளலார் எவ்வளவு தூரம் அந்த மடாதிபதிகளுக்கு அச்சம் விளைவிக்க கூடிய அளவு அறிவுகண்ணை திறந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
  யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை தூண்டி விட்டு வள்ளலாருக்கு எதிராக நீதிமன்றில் வழக்காடியது மிகவும் வேதனையான வரலாற்று நிகழ்வு. இன்று நம்மவரால் போற்றப்படும் ஆறுமுக நாவலர் மடாதிபதிகளின் கைப்பாவையாகி வள்ளலாரை மனம் நோக செய்து வரலாற்றில் பெரும் தவறிழைத்து விட்டார்.

  ReplyDelete