தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 13 March 2016

அரசியல் மேடை - 14

 அரசியல் என்றால் ஆயிரம் இருக்கும்தே.மு.தி.க. தனித்துப் போட்டி என்று அறிவித்த பிறகு, அது தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் அரசியல் அரங்கில் பேசப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்பே ஒரு தொலைக்காட்சியில் சுமந்த் சி. ராமன்,ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதனை இன்று வேறு  நண்பர்கள் சிலரும் திரும்பக் கூறுகின்றனர்.


தே.மு.தி.க. - தி.மு.க. இணைந்துவிடக் கூடாது என்பதில் பலரும் மிகக் கவனமாக இருந்துள்ளனர். தி.மு.க.வின் மாபெரும் வெற்றி தடுக்கப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்துவிட்டால், குறைந்த அளவு வேறுபாட்டிலாவது அ.தி,மு.க. வெற்றி பெற்றுவிடும் என்பது அவர்களின் கணக்கு. ஒருவேளை அதற்கும் வாய்ப்பின்றிப் போனாலும் இழுபறி நிலைதான் ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர். அப்படி ஒரு தொங்கு சட்டமன்றம் ஏற்படுமானால், குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தி விடலாம்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி என்பதால், இங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது மறைமுகமாகப் பா.ஜ.க. ஆட்சியாகிவிடும் என்ற கருத்தும் உள்ளதாம். எனவே, அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க ஆட்சி என்பதே அவர்களின் இலக்கு!.

இப்படித்தான் 1971 ஆம் ஆண்டும் கணக்குகள் போடப்பட்டன. காமராஜர், ராஜாஜி என இரு பெரும் தலைவர்கள் அன்று தி.மு.க.வை எதிர்த்து நின்றனர். சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகிய மூவரும் ஊர் ஊராகச் சென்று தி.மு.க.விற்கு எதிரான கடும் பரப்புரையில் ஈடுபட்டனர். தி.மு.க. ஆட்சி இத்துடன் முடிந்தது என்று ஏடுகள் எழுதின. சேலத்தில் நடைபெற்ற ராமர் - செருப்பு விவகாரம் வேறு பெருவடிவம் எடுத்திருந்தது. ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே காமராஜர் அவர்களைப் பார்த்துப் பூங்கொத்து கொடுத்தார். பூரிப்பில் இருந்தது அந்தத் தரப்பு. 

ஆனால் மக்கள் முடிவோ வேறு மாதிரியாக வந்து சேர்ந்தது. . 184 இடங்களில் தி.மு.க.மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது!

இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வெற்றி தி.மு.க.விற்குக் காத்திருக்கிறது. எதிரிகளின் கணக்குகள் தகர்ந்து போகவிருக்கும் நாள்தான் மே 16.


சின்னச் சின்னக் கணக்குகளில் மகிழ்ச்சியடையும் நண்பர்களே, மறந்து விடாதீர்கள், அரசியல் என்றால் ஆயிரம் இருக்கும்!!

8 comments:

 1. பார்ககலாம் மே 19ல்!!

  ReplyDelete
 2. திமுகவினர் மெத்தனமாக இருந்துவிட கூடாது

  ReplyDelete
 3. பழமையான தேர்தல் வரலாற்றில் உள்ள உறுதிமிக்க நிகழ்வுகளை தொகுத்து அளித்துள்ளது தொண்டர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும். அந்த 1971 ஆம் ஆண்டு தேர்தலில் தந்தை பெரியாரின் தீவிர ஆதரவு பிரச்சாரம் திமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்று பலர் சொல்வதுண்டு.

  ReplyDelete
 4. As u said dmk should not have waited for Vijaykanth and proceeded with election work Vijaykanth is only nuisance value and is of no consequence he need not be given so much mportance now forget him and get on with election work let people decide

  ReplyDelete
 5. ஐயாவின் இம்மாத நிகழ்ச்சி நிரலை வெளியிடவும் :)

  ReplyDelete
 6. ஆளுங்கட்சியான அதிமுகவை விட திமுகவைதான் குறி வைத்து ஏராளமான கட்சிகளும் தலைவர்களும் தாக்குகிறார்கள். காய்க்கிற மரம்தான் கல்லடி படும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை. பலரும் அதிமுகவை தாக்குவது போல் நடிப்பது, இவர்கள் அங்கு எதாவது சலுகைகள் பெற்று கொண்டு அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பேசுகிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
  வைகோ,சீமான்,தேமுதிக மற்றும் கம்யுனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களின் தரம் தாழ்ந்த வெறுப்பு பிரசாரம் மிகவும் உரத்த ஒரு செய்தியை சொல்கிறது.
  திமுக ஆட்சியை அமைக்க போகிறது என்பதைத்தான் அவரகளின் சகிக்கவே முடியாத வெறுப்பு பிரசாரம் சொல்கிறது.
  தமிழக மக்கள் எல்லாம் விஜயகாந்தையே கனவிலும் கண்டுவருவதாக சிலரும் இல்லை இல்லை சீமானையே கனவில் காண்பதாக சிலரும் இன்னும் சிலரோ அன்புமணி, பொன்ராஜ் இன்னும் ஒரு டஜன் பேர்களையே அடுத்த முதல்வராக எண்ணுவது அவர்களின் கனவு காணும் சுதந்திரம்

  வெற்று கோஷங்களில் மக்கள் தற்போது அக்கறை காட்டுவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சி பலதரப்பட்ட மக்களுக்கும் ஏராளமான படிப்பினைகளை/ சோதனைகளை கொடுத்து விட்டது.
  திமுக ஆட்சியில்தான் நியாயம் கிடைக்கும், நல்ல பல திட்டங்கள் நடக்க வேண்டி இருக்கிறத என்பது மக்களுக்கு நிச்சயமாக தெரியும்.
  இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்.

  ReplyDelete
 7. கொள்கையற்ற தே.மு.தி.க.வின் அரசியல் பேரங்கள் மக்களிடையே வெறுப்பை
  ஏற்படுத்தியுள்ளன. அதன் வாக்கு வங்கியும் சரிந்துள்ள நிலையில், அதனுடன்
  கூட்டணி அமையாதது குறித்து தி.மு.க. வருந்த வேண்டியதில்லை. சர்வாதிகார,
  செயலற்ற அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் வலிமை தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு
  என்பதால், மக்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.
  இதன்மூலம் பா.ஜ.க.வின் கொல்லைப்புற நுழைவுக் கனவையும் தகர்க்கலாம்.

  ,,,,இரத்தினவேல்.

  ReplyDelete
 8. திமுக தலைவர் கலைஞர் விஜயகாந்த் கட்சியின் வருகை பற்றி முன்னுரைத்த விதமும்,ஆனால் அந்த கூட்டணி அமையாமல் போனதால் ஏதோ ஒரு தோல்வி அல்லது ஏமாற்றம் திமுகவிற்கு ஏற்பட்டு பலகீனமாக இருப்பதான ‘தோற்றம்’ வந்து விட்டது.கூட்டணி வியூகத்தில் விஜகாந்த்தை ம ந கூட்டணியில் இணைத்த வைகோ ஒரு ராஜதந்திரியைப் போல வலம் வருவதற்கும் கலைஞரின் வெளிப்படையான அறிவிப்புகள் காரணமாக அமைந்து விட்டது.அதனை மாற்றுவது முதல் கடமையாக இருக்கட்டும்.

  ReplyDelete