தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 23 March 2016

அரசியல் மேடை - 16

விசில் சத்தம் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஈழம் தொடர்பான ஒரு கூட்டம் கோவையில் நடைபெற்றது. தொல்..திருமாவளவன், புலவர் புலமைப்பித்தன், தமிழருவி மணியன், திருச்சி வேலுச்சாமி ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு உரையாற்றினேன்.அது ஒரு வித்தியாசமான இணைவுதான். எங்கள் எல்லோரையும் ஈழம் இணைத்தது என்று சொல்லலாம்.


கூட்டம் தொடங்கிச் சிறிது நேரத்தில் திருமாவளவன் மேடைக்கு வந்து சேர்ந்தார். அவருடைய கட்சித் தோழர்கள் கைதட்டி ஆரவாரமாக அவரை வரவேற்றனர். அதற்குப் பிறகு, அவரின் பெயர் சொல்லும் போதெல்லாம் தொடர்ந்து கைதட்டல்கள். இடையிடையே விசில் சத்தங்களும் வந்து கொண்டிருந்தன. தமிழருவி மணியனுக்கு அது பிடிக்கவில்லை. 'இது என்ன கலாசாரம், ஏன் இப்படி விசில் அடிக்கிறார்கள்' என்று சற்றுக் கோபப்பட்டார். திருமாவளவன் அவர் கட்சியினரை ஒழுங்குபடுத்த முயன்றார்.

நான் என் அருகிலிருந்த மணியனிடம் வேடிக்கையாக, "இன்னும் நீங்கள் தில்லானா மோகனாம்பாள் சண்முகசுந்தரமாகவே இருக்கிறீர்களே" என்றேன். "அவர்கள் காலகாலமாக ஒடுக்குமுறைக்கு ஆளான பிள்ளைகள். இப்போதுதான் வெளியில், பொது அரங்கிற்கு வந்துள்ளனர். கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும்" என்றும் என் கருத்தைச் சொன்னேன். அவரும் ஏற்றுக் கொண்டார்.  ஆனாலும், "சுபவீ, ஊசிமுனை விழும் ஓசை கூடக் கேட்காமல் இருக்கும் அரங்குகளில் பேசியே பழக்கப்பட்டவன் நான். எனக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும்தான் முக்கியம்" என்றார். பிறகு தான் பேசத் தொடங்கும்போதும் என்னிடம் சொன்ன அதே கருத்தை மேடையில் எடுத்து வைத்தார். அதன்பிறகு அந்தத் தோழர்களும் அமைதி காத்தனர். கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.


இப்போது அந்தப் பழைய செய்தியை மீண்டும் இங்கே முன்வைப்பதற்கு என்ன காரணம்? வேறொன்றுமில்லை. விசில் சத்தமே பிடிக்காத நண்பர் தமிழருவி மணியனின், காந்திய மக்கள் இயக்கத்திற்கு வரும் தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் என்ன  தெரியுமா  - "விசில்."  

11 comments:

 1. ஆ ஆ ஆ

  அண்ணே இந்த விசில ஊதினா சத்தம் வரும் ஆனா வராது.

  ReplyDelete
 2. ஆரவாரம் இல்லாத மயான அமைதியாக இருக்கும் மன்றத்தில் பேசி பழகிவிட்டதாக கூறிக்கொள்ளும் இவர் ஆர்பரிக்கும் ஆரவாரம் மிகுந்த மக்கள கூட்டத்தில் மாபெரும் சகிப்புத்தன்மை கொண்டு பேசிய காந்தி அவர்களை தனது கொள்கை வழிகாட்டியாக கொண்டது கூட ஒரு முரண்தான் இல்லையா.

  ReplyDelete
 3. நல்ல வேளை !! 'ஜால்ரா' சின்னம் ஒதுக்காம போனாங்களே !! :p

  ReplyDelete
 4. திரு.மணியன் அவர்கள் தமது அருமை ததும்ப பேசும் பேச்சுக்களை திராவிட தேசத் தலைவர்களுக்கும் திராவிட தேச முன்னேற்றத்துக்கும் எதிராக வைத்துக்கொண்டதால் கலர் கொள்ள வேண்டிய அவரின் சிந்தனை களராக மாறிவிட்டது.இன்று அவரின் அரசியல் போக்கு வசில் அடித்து சிரிக்கும் நிலையில் இருக்கிறதே அய்யகோ ஞான் எந்து செய்வேன் ஞான் எந்து செய்வேன்.

  ReplyDelete
 5. Ayya, ungaludaiya alaipesi en kidaikuma,,,,,,,,,, naan qatar il vazhum thanthai periyarin maanavan,,,
  +974 59423780,

  ReplyDelete
 6. ஐயா, எனக்கு ஒரு யோசனை
  நானே சிந்திச்சேன்.

  ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும்
  தவறு வாங்குவதும் தவறு.
  போகட்டும் கண்டிப்பாக
  இதை கடைபிடிப்பவர்கள்
  சொற்பம். நலத்திட்டங்கள் ஒருபுரம் இருக்கட்டும். ஓட்டுக்கு பணம்
  கொடுப்பதை தவிர்த்து
  ஒரு ஓட்டுக்கு ரூ.1000
  மதிப்புள்ள விரும்பிய
  புத்தகங்களை வாங்கிக்கொள்வதற்கான
  கூப்பன் ஏன் கொடுக்க கூடாது?
  பொது நூலகம் இருக்கும்,
  ஆனால் புத்தகம் எடுத்துச்செல்ல
  அனுமதி இருக்காது.
  கிராமப்புரங்களுக்கும்
  புத்தகங்கள் நேரடியாக சென்றடையும்.
  அம்மையார் ஆடு கொடுத்தார்கள்,
  மாடு கொடுத்தார்கள் மக்களை
  இன்னும் அறியாமையில் வைத்தார்கள்.
  நீங்கள் மாடு மேய்த்தவனை
  மார்க்ஸியம் பேச வைக்க முடியும்.
  அறியாமையில் ஆடு
  மேய்க்கிறவனை அரசியல்
  பேச வைக்க முடியும்.
  எண்ணமும் எழுத்தும்
  பரவும். எழுத்தாளர்கள்
  வாழ்வும் உயரும்.
  மாட்டு அரசியலும் வேண்டாம்,
  மத அரசியலும் வேண்டாம். அறியாமையில் வைக்கும்
  அரசியல் வேண்டாம்.
  அறிவுசார் அரசியல் தான் வேண்டும்.
  "ஆயிரம் பூக்கள் மலரட்டுமே"

  ReplyDelete
 7. தேர்தல் விசி

  தேர்தல் வி சி(ல்) த்திரங்கள்??/
  ReplyDelete
 8. கணேஷ்குமர்25 March 2016 at 19:38

  அய்யா சுப.வீ,

  நாங்கள் எல்லாம் இன்னும் மதிக்கும் மனிதராய் நீங்கள் உள்ளீர்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் சத்தமும் விசிலும் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். உங்களுக்கும் தெரியும். இருந்தும் சிறுத்தைகளை சிறுமை படுத்துவதற்காக இப்படி எழுதி உங்கள் ஆதங்கத்தை ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றீர் போலும்...

  வேண்டாம் சுப.வீ உங்களுக்கு இது அழகல்ல. அநேக விடுதலைச் சிறுத்தைகளின் மேடைகளில் இருந்தவர் நீங்கள். இன்னும் அவர்கள் உங்களை உற்ற நண்பனாகவே நினைப்பதாக நான் அறிவேன். உங்கள் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

  தி.மு.க உங்களை எப்போதும் பயன்படுத்திக் கொள்ள மட்டுமே செய்யும். ஆனால் சிறுத்தைகள் உங்களை என்றும் அரவணைக்கும்.... ஆர்பரிக்கும்...

  நன்றி

  கணேஷ்

  ReplyDelete
  Replies
  1. திரு கணேஷ் அவர்களே உங்களுக்கு நான் பதில் சொல்லலாமா?

   பகுத்தறிவு அனுகுமுறை என்பதை நீங்கள் எப்படி எண்ணுகிறீர்கள்?

   எப்பொருள் எவர் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு. இது குறள் காட்டும் பகுத்தறிவு.

   நாம் பகுத்தறிவு பாதையில் பாதி அளவுக்கு கூட கடந்த பாடில்லை. அதற்குள் நாம் மற்றவர்களுக்கு புத்தி சொல்ல தொடங்கி விடுகிறோம்.

   அண்ணன் சுபவீ கருத்திலிருந்து நீங்கள் கருத்து அறியவில்லை.

   சிறுத்தைத் தலைவனை தொடையில் பிறந்தவனோடு விஜயகாந்த் அணியினர் ஒப்பிட்டு சாதூர்யமாக சூத்திரப்பட்டம் சுமத்தினார்களே. அதை உணராமல் அண்ணன் சுபவீயின் கருத்தில் பிழையாக பிழை கண்டு கருத்து பிழை செய்து இருக்கிறீர்.

   மீசையை முறுக்காமல் விசிலை தூர வைத்து விட்டு மீண்டும் சுபவீ யின் கருத்தை கண்ணும் கருத்துமாக படியுங்கள் சகோதரா.

   Delete