தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 29 March 2016

அரசியல் மேடை - 19

அடவு கட்டி ஆடுகிறார்கள்!


அறைகூவல்கள், அவதூறுகள், ஆவேசப் பேச்சுகள் என அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. எல்லாவற்றிலும் முதல் இடத்தில் நிற்பவர் இன்று வைகோதான். களத்தில் கதாநாயகனாகி விடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது.

தி.மு.க விஜயகாந்த்துக்கு 500 கோடி கொடுக்க முன்வந்தது என்று குற்றம் சாடுகின்றார் வைகோ. பாவம், விஜயகாந்த் விலைக்கு வாங்கப்படும் பொருள் ஆக்கப்பட்டு விட்டார் என்பதுதானே பொருள்! தன் அணியின் தலைவரையே ஏன் இப்படி அவர் கொச்சைப் படுத்துகிறார் என்று தெரியவில்லை. 


அதே போன்ற ஒரு கேள்வியைப் பாலிமர் தொலைக்காட்சி அவர் முன் வைத்தபோது சினம் கொண்டு சீறி எழுகிறார். நேர்காணலைப் பாதியிலேயே முடித்துக் கொள்கிறார். "ஒரு பெண்ணைப் பார்த்து நீ கற்புடையவளா என்று கேட்டாலே அவளுடைய கற்பு சந்தேகத்துக்கு உரியதாகி விடுமாம்" - சொல்கிறார் வைகோ.  மற்றவர்களின் கற்பைப் பற்றி இவர் கேள்வி கேட்கலாமாம். ஆனால் இவரிடம் எவரும் எதுவும் கேட்கக் கூடாதாம். நல்ல கற்பு, நல்ல முற்போக்குச் சிந்தனை!இன்னொரு பக்கம் சீமான், வரும் தேர்தல், தமிழனுக்கும் தெலுங்கனுக்கும் இடையிலான போர் என்கிறார். அவதூறுக்குப் பெயர்  வைகோ என்றால், இனவாதத்தின் பெயர் சீமான் என்றாகிறது. 

தமிழர் முன்னேற்றப் படை என்னும் அமைப்பின் நிறுவனத் தலைவர் கி. வீரலட்சுமி, "தமிழரைத்  தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறத்தி, தில்லியில் நாடாளுமன்றத்தின் முன் நான் தீக் குளிக்கத் தயார், சீமான் தயாரா?" என்று கேட்கிறார். 

இன்னும் ஒன்றரை மாதத்தில் இப்படி எத்தனை எத்தனை கூத்துகள் அரங்கேறுமோ தெரியவில்லை.


6 comments:

 1. திராவிடர்களும் தமிழர்கள்தான் என்பதை எப்போது சீமான் அறிவார். தெலுங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களும் திராவிடர்களே. ஆந்திராவில் போய் பாருங்கள். அந்த மண்ணின் மைந்தர்களோடு பேசுங்கள். மேலும் Dalel Benbabaali என்ற பெண் Dominant caste and territory in South India என்று RESEARCH பேப்பர் SUBMIT செய்து இருக்கிறார். GOOGLE -இல் தேடி பாருங்கள். ஆந்திரா புரிய வேண்டும் என்றால் இந்த பெண் சொல்லியவற்றை பாருங்கள் அல்லது படியுங்கள். ஒரு சாதி யாரையும் வளர விடாமல் எல்லா இடங்களிலும் எப்படி ஆந்திரா முழுமையும் அடக்கி வைத்து இருக்கிறது என்பது புரியும். எனது கவலை முழுமையும் இவர்களிடம் விலை போகும் திராவிடர்கள் பற்றி மட்டும் உள்ளது. சீமான் சூத்திர பிராமண கூட்டணியிடம் மாட்டி கொள்ளாமல் உருப்படியாக ஏதாவது செய்ய முடிந்தால் அதுவே தமிழர்க்கு நல்லது.

  ReplyDelete
 2. நன்று

  ReplyDelete
 3. To READ :

  http://www.telanganatalkies.com/dominant-caste-and-territory-in-south-india-the-case-of-the-kammas-of-andhra-pradesh/

  ReplyDelete
 4. வைகோவைப் பற்றி எனக்கும் ஒருகாலத்தில் மயக்கம் இருந்ததுண்டு.ஆனால் அவர் எப்படிப்பட்ட நபர் என்பதை நான் உணர்ந்து பல காலமாகிவிட்டது.அடவுகட்டி ஆடுகிறார் என்று நயமாக உரைப்பதில் தங்களின் பண்பாடு விளங்குகிறது.ஆனால் எனது வார்த்தைகளில் ”ஒரு முழு நேர நடிகர் அவர்”.ஆசிரியர் வீரமணி கூறியதைப்போல ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம் கொண்டவர். ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் எந்த எல்லைக்கும் போகக் கூடியவர் என்கிற அதே வேளையில் திமுக எதிர்ப்பு எனில் ஒரு எல்லை தாண்டிய வன்மத்தை கக்குவதில் எல்லா நியாயவாதம், நேர்மையை ஈவிரக்கமின்றி புறக்கணிக்க கூடியவர். திராவிட இயக்கம்,அதன் போர்வாள், இரட்டைகுழல் துப்பாக்கி என்றெல்லாம் சவடால் அடிப்பதில் முனைப்பு காட்டுபவர்.ஆனால் பிஜேபி போன்ற கட்சிகளுடன் உறவு காணும் போது அவர்களின் பார்வையில் ஒரு முழு நட்பு சக்தி என்று காட்டும் நோக்கில் அவர்களின் சார்பில் அவர்களே எடுத்து வைக்க தெரியாத,துணியாத வாதங்களை எல்லாம் எடுத்து வைத்து அவர்களை காக்க போராடுவார்.2002 குஜராத் கலவரங்களின் போது வாஜ்பாயே நொந்து போனதாக செய்தி வந்த வேளையில் மோடியை தற்காத்து பாராளுமன்றத்தில் முழங்கியவராயிற்றே?பொடா வழக்கில் சிறையிலிருந்து கலைஞர் தன்னை வெளிக்கொணர்ந்த போது அவர் பேசியது அனைவரும் அறிந்ததே.அதே விடுதலை முயற்சியை பின்னாளில் கொச்சைப்படுத்தவும் அவர் தயங்கவில்லை.இப்படி அவர் எடுத்த எல்லா நிலைகளுக்கும் ஒரு எதிர் நிலையை எடுக்காமல் இருந்ததில்லை.
  தேர்தல் களத்தில் ஒரு குற்றச்சாட்டை சொல்கின்ற போது அது அவதூறு என்று அந்த குற்றச்சாட்டால் பாதிக்கப்படுபவர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று கோரினால் வைகோ ஒரு நேர்மையான நபராக இருந்தால் ஒன்று அதற்கு உடனே பதிலளிக்க வேண்டும் அல்லது தனக்கு வந்த தகவல் சரியல்ல அல்லது நிரூபிக்க இயலாதது எனும் போது வருத்தம் தெரிவிக்க வேண்டும்.அவர் இரண்டையும் செய்யாமல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படப் போகும் தாமதத்தில் இந்த தேர்தலே முடிந்துவிடும் அதன் பிறகு அதனை பார்த்துக் கொள்ளலாம் என்று கணக்கு போட்டு வழக்கை சந்திப்பேன் என்று சவடால் அடிக்கிறார்.இது பச்சை சந்தர்ப்பவாதம் அல்லவா? 2G விஷயத்தில் ராஜா மற்றும் திமுக மீது 176க்கு பின் பல ‘’0’க்களை போட்டு ஏற்கனவே அவதூறு செய்து பலமான சேதாரங்களை விளைவித்த முறையிலேயே அவர் நடந்து கொள்வது வடிவேலு பாணியில் சொல்வதானால் பிறர் சிந்துவது வெறும் தக்காளிசட்னி.இவர் செய்த அதே பாணியில் ஒரு வலைசெய்தியை -1500 கோடி பற்றி- திமுக கூட இல்லை ஒரு ஊடகவியலாளர் கேள்வி கேட்டாலே இவருக்கு ’ரத்தம்’ வந்து விடுகிறதே எப்படி?இவருக்கென்றால் ”கேள்வி தான் மனதில் நிற்கும்” அல்லது கேள்வியே மனதில் நிற்கும் என்று கொதிக்கிறவர் அதையே எதிரிக்கும் பொருத்திபார்த்து ஒரு கேள்வியை அல்ல ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து அவதூறு செய்தால் வலிக்கும் என்று ஏன் உணர மறுக்கிறார்?

  2009 ஈழப்போரின் முடிவில் பல்வேறு வலைத்தளங்களில்,குறிப்பாக ஈழத்தமிழர் தளங்களில் ஒரு குமுறல் உலவி வந்தது.போரின் கடைசி மணித்துளிகளில் புலிகளின் தலைமை உதவி நாடி தமது தமிழக அண்ணன்களின் செல்பேசிகளை தொடர்பு கொண்ட போது அவை ’மவுனித்து’ தொடர்பு எல்லைக்கு அப்பால் தம்மை அந்த அண்ணன்கள் ஒளித்துக் கொண்டார்கள் என்பதே அந்த குமுறல்.அவர்கள் அண்ணன்கள் என்று சொன்னதில் தவிர்க்க இயாலாதபடி இருவர் இருந்தனர். ஒருவர் நம்ம வைகோ.இன்னொருவர் ’பழம்’ பெரும் பெரியவர்.இந்த செய்தியோடு சேர்த்தே உலாவிய மற்றொரு செய்தி தான் அந்த அண்ணன்களெல்லாம் புலிகளின் பணத்தில் இங்கு இயக்கம் நடத்தியவர்கள் என்பதும்.இந்த செய்திகள் அல்லது வதந்திகள் அல்லது குமுறல்களை எல்லாம் எல்லா செய்தி ஊடகங்களும் புறக்கணித்தன.எல்லா தலைவர்களும் கூட அதனை பொருட்படுத்த வில்லை.ஏனெனில் அந்த செய்தியை உறுதி செய்து கொள்ள எந்த தரவுகளும் யாரிடமும் இல்லை.தரவுகள் இல்லாத நிலையில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது முறையில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.துரதிர்ஷ்டவசமாக அப்படி வைகோவால் தன்னை தகுதிப் படுத்திக்கொள்ள இயலவில்லை.அவர் எல்லா எல்லைக்கும் போவார் ஆனால் கடைசியில் தோற்பார் என்பதே அவரின் வரலாறு.அது தான் மீண்டும் நிகழும்.

  ReplyDelete
 5. அண்ணன் சுப.வீ அவர்கள், திமுக விற்க்கு முட்டுக் கம்பாக நிற்பதற்கு பதிலாக; நின்றாலும் பலனில்லை என்பது வேறு, திராவிட இயக்கத்தின் வரலாறு, அதன் தேவை, அதன் நிகழ் காலப் பொருத்தப் பாடு குறித்து உரையாடல் நிகழ்த்துவதே சமகாலத்தேவை.

  திமுக - அதன் கொள்கைகளை உதிர்த்த போதே அதன் உதிர்வு துவங்கி விட்டது.

  ReplyDelete